புதிய பாடல் பாடு
ரமணிசந்திரன்
Maison d'édition: Pocket Books
Synopsis
அற்புதா அவளை எரிச்சலாய்ப் பார்த்தாள்.“யார்... நீ... எதுக்காக என்னைச் சுத்திச் சுத்தி... வர்றே...? இந்த ரோமியோ வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுகிட்டா... செருப்பு பிஞ்சுடும். அவன் சிரித்தான்.”“உன்னோட செருப்பு பிய்ஞ்சு போய் வேற ஒரு செருப் புக்கு செலவு வைக்க நான் தயாராயில்லை...”“உனக்கு என்ன வேணும்...?”“உண்மை வேணும்...”“உண்மையா...?”“ம்...”“என்ன உண்மை...?”“நான் யார்ன்னு உனக்கு நிஜமாவே தெரியலையா...?”“தெரியலை...”“நடிக்காதே...!”இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்தினாள் அற்புதா.“நீ. அளவுக்கு மீறி பேசிட்டு போறே. உன்னை எனக்குத் தெரியாது... இதுக்கு முந்தி உன்னைப் பார்த்ததில்லைன்னு... காலையில் பஸ் ஸ்டாப்ல பார்த்தப்பவே சொல்லிட்டேன். இப்ப மறுபடியும் அதேகேள்வியை கேட்டுகிட்டு... ஆபீஸுக்கு வந்திருக்கே... மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு... இல்லேன்னா நான் போலீஸைக் கூப்பிட வேண்டியிருக்கும்...!அவன் கன்னத்தை சொறிந்து கொண்டு கோணலாய்ச் சிரித்தான்.“போலீஸைக் கூப்பிடப் போறியா...? கூப்பிடு. உனக்கெப்படி போலீஸ் விவகாரமெல்லாம் அத்துபடியோ... அதே மாதிரிதான் எனக்கும்...”அற்புதா நெற்றியைச் சுருக்கினாள்.'இவன் என்ன சொல்கிறான்...?’‘ஆள். ஏதாவது மெண்ட்டல் கேஸோ...?’‘என்னோட பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறானே...?’அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு - குரலைத் தாழ்த்தியபடி கேட்டான்.“இங்கே உனக்கு பேசறதக்கு சங்கோஜமா இருந்தா வெளியே போயிடலாமா?”“டேய்ய்...!” கத்திய அற்புதா கையை வேகமாய் சுழற்றி - அவனுடைய கன்னத்தில் இறக்க முயன்ற விநாடி - கையை கப்பென்று பற்றிக் கொண்டான்.“என்ன அழகா நடிக்கிறே...? நிஜமாவே என்னைத் தெரியாத மாதிரி உன்னோட முகத்துலதான்... என்ன ஒரு அழகான பாவம்... உண்மையை இன்னிக்கி நீ மறைச்சுடலாம்... ஆனா நாளைக்கு நீ சொல்லியே ஆகணும்... நான் இப்ப போறேன்... பேசறதுக்கு முன்னாடி பேரைச் சொல்லிட்டு போறேன்... என் பேரு பசவராஜ். நல்லா யோசனை பண்ணு. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன்...”சொல்லிட்டு அவன் எழுந்து வேகவேகமாய்ப் போக போகிற அவனையே வெறித்துப் பார்த்தாள் அற்புதா.‘பசவராஜ்...?’‘இப்படியொரு பெயரைக் கேள்விப் பட்டதேயில்லையே...?’‘யாரிவன்...?குழப்பமாய் யோசித்துக் கொண்டே மறுபடியும் ஆபீஸுக்குள் நுழைந்தாள். நெற்றியைப் பிடித்துக் கொண்டு தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்தாள்.'பசவராஜ்...!’‘காலேஜ் நாட்களில் என்னோடு படித்தவனா...?’‘இல்லையே... இப்படியொரு மூஞ்சியை பார்த்த மாதிரியே இல்லையே’‘அடுத்த தடவை இவன் வந்தால் போலீஸில் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டியதுதான்...ராஸ்கல்!’“அம்மா... அற்புதா...!ஹெட்க்ளார்க் தன் மேஜையிலிருந்து - கையில் ரிஸீவரை வைத்துக் கொண்டு கூப்பிட்டார்.“உனக்கு போன்...”வேகமாய் - எழுந்து போய் ரிஸீவரை வாங்கினாள்.“ஹலோ...”“அற்புதா...?”“ஆமா...”“நான் ஆனந்த் பேசறேன்...!”அடுத்த மாசம் பதினோராம் தேதி அவளுடைய கழுத்தில் தாலி கட்டப் போகிற ஆனந்தின் குரலைக் கேட்டதும் உடம்பு முழுவதும் கும்மென்று வியர்த்துவிட்டது அற்புதாவுக்கு. ரிஸீவர் மெலிதாய் நடுங்கியது
