Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
பகல் நேர மின்னல் - cover

பகல் நேர மின்னல்

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

வேதாவின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து பின் ரத்தத்தை இறைக்க ஆரம்பித்தது.“எ... என்ன சொ... சொன்னீங்க... சீனிவாசன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரா...?”“ஆ... ஆமா...”“என்னாச்சு...?”“பஸ்ஸை விட்டு இறங்கி ஆபீஸ்க்கு போகிற வழியில... யாரோ ஒரு பொண்ணை ரெண்டு ரெள ங்க கலாட்டா பண்ணிகிட்டு இருந்திருக்காங்க... சீனி சன் அவங்களை கண்டிக்கப்போக கத்தியால் குத்திட்டாங்க...”வேதாவுக்கு மார்பை அடைத்தது.“க... க... கத்தியால் குத்திட்டாங்களா...?”“ப்ளீஸ்! சீக்கிரம் வாங்க...! சீனிவாசன் உங்க பேரைச் சொல்லித்தான் முனகிட்டிருக்கான்...”“ஏதும்... ஆபத்தில்லையே...?”“டாக்டர் ஒண்ணும் சொல்லலை...”“இப்ப... வர்றேன்...” ரிஸீவரை வைத்து விட்டு அரை நிமிஷத்திற்கு முன்னால் இருந்த சந்தோஷமெல்லாம் தொலைந்து போயிருக்க மானேஜரின் அறையை நோக்கி ஓடினாள்.விஷயத்தைக் கேள்விப்பட்ட நந்தகோபால் ரிவால்விங் நாற்காலியினின்றும் அதிர்ந்து போய் எழுந்தான்.“வாங்க... என் கார்லேயே போயிடலாம்...” கிளம்பினார்கள்தாம்பரம் ஜி ஹெச். நல்ல வெய்யிலில் நிறைய அவுட் பேஷண்ட்களோடு கசகசப்பாய் தெரிய காஸுவால்டி வார்டுக்கு முன்னால் சீனிவாசன் நண்பன் சதானந்தம் கலவர முகமாய் நின்றிருந்தான்.பார்த்ததும் ஓடி வந்தான்.“ஆபரேஷன் நடந்திட்டிருக்கு...”வேதா பேச்சு வராமல் திணற நந்தகோபால் கேட்டான்.“டாக்டர் என்ன சொன்னார்...?”“கத்திக்குத்து கல்லீரல் வரைக்கும் இறங்கிட்டதாகவும்... ஒரு ஆபரேஷனை பண்ணிட்டுத்தான் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்ன்னு சொல்லிட்டார்.”“கத்திக்குத்து சம்பவம் எங்கே நடந்தது...?”“சிட்கோ ஸ்டாப்பிங்கில் இறங்கி நானும் சீனிவாசனும் எங்க ஆபீஸுக்கு போகிற ரோட்ல நடந்துகிட்டிருந்தோம். வழியில ஒரு பூக்கார பொண்ணை துரத்திகிட்டு ரெண்டுபேர் பைக்ல வந்து வம்பு பேசிட்டிருந்தாங்க... ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஏரியாவில் பைக்ல வந்தவங்க துணிச்சலா அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சு இழுக்கவும்... சீனிவாசன் சூடாகி நியாயம் கேக்கப் போனான். ரெண்டு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டான்... ரெண்டு பேர்ல ஒருத்தன் கையில் மடக்கி வெச்சிருந்த பேனாக் கத்தியை விரிச்சு... சீனியோட வயத்துல் குத்திட்டான்”“குத்தினவங்களை பிடிச்சீங்களா...?”“நான் முயற்சி பண்ணினேன். ஆனா முடியலை... கத்தியைக் காட்டிகிட்டே பைக்ல ஏறி பறந்திட்டாங்க...”“பைக் நெம்பரைப் பார்த்தீங்களா?”“ரத்தமா கீழே கிடக்கிற சீனிவாசனை அள்ளி ஹாஸ்பிடலுக்கு உடனே கொண்டு போகணும்ங்கிற... ஞாபகம்தான் இருந்ததே தவிர வேற எந்த ஞாபகமும் எனக்கு இல்ல...”“போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங் ளாஇன்ஸ்பெக்டர் உள்ளே இருக்கார்...”வேதா தளர்ந்து போய் அங்கே சுவரோரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள நந்தகோபால் வார்டுக்கு முன்னால் நின்றிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கிப் போனான்.
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 89 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Iravu Nera Suriyagandhi - cover

    Iravu Nera Suriyagandhi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட காந்தியவாதியின் குடும்பம் பிரச்சனையில் சிக்குகிறது. முழு குடும்ப உறுப்பினர்களும் விசாரணை முறையில் மூழ்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டபோது,
    Mostra libro
  • Poovadi Sethil - cover

    Poovadi Sethil

    Ambai

    • 0
    • 0
    • 0
    மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் கதை இது.
    Mostra libro
  • Vivekum 41 Nimishangalum - cover

    Vivekum 41 Nimishangalum

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Police, judges and other law enforcing officials are cornered to release a convict who is in prison for a heinous crime committed. Crime Branch Officer Vivek comes up with a solution to this unique situation in just 41 minutes. Listen to Vivekum 41 nimishangalum to know the story.
    
    காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
    Mostra libro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Mostra libro
  • Indhiya Neram 2 AM - cover

    Indhiya Neram 2 AM

    Pattukottai Prabakar

    • 0
    • 0
    • 0
    அந்தஸ்தான ஓரு தொழிலதிபர் ஒரு நொடி சபலத்தால் செய்த ஒரு தவறு அவரை ஆட்டிப் படைக்கிறது. யாருக்குமே தெரியாது என்று நம்பிய ஒரு ரகசியம் உயிர் பெறுகிறது. ஓரு பிளாக் மெயிலருக்கும் அவருக்கும் நடக்கும் சுவாரசியமான கதை - இந்தியா நேரம் 2 am .
    Mostra libro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Mostra libro