Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஒரு சின்ன மிஸ்டெத் - cover

ஒரு சின்ன மிஸ்டெத்

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஸ்ரீபதி ட்ரேடர்ஸ்.எட்டுக்குடிக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த டவுனின் மையப் பகுதியல் அமைந்திருந்தது அந்த பம்ப்செட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. சதுரம் சதுரமான ஷெல்ஃபுகளில் பம்ப்செட் ஸ்பேர்கள் இனம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.மேஜையோரம் நின்றிருந்த அந்த காக்கிப் பேன்ட்-பதினாறு வயசுப் பையன் கஸ்டமர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.“யார் ஸார் வேலும்?”“எங்கேடா உன் முதலாளி?”“இப்ப வந்துடுவார் ஸார்...”“இப்பன்னா எப்போ?”“எட்டரை மணிக்கு...”தன் வாட்சில் பார்வையைப் போட்டார்.8.25“எட்டரைன்னா ஒரு எட்டே முக்கால் ஆகுமா...?”“அதெப்படிங்க...? எட்டரைன்னா எட்டரைக்குத்தான் வருவார்...”ஒரு ஃபோல்டிங் சேரை எடுத்து விரித்துப் போட்டான்.இப்படி உக்காருங்க ஸார்... அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவார். முதலாளி கொஞ்சம் ஆசாரமானவர். வீட்ல பூஜை... அது... இதையெல்லாம் முடிச்சுட்டு - கோயிலுக்கு போய்ட்டு அப்புறமாத்தான் இங்கே வருவார்...”அவன் சொல்லி முடித்த விநாடி வாசலில் மொபெட் சத்தம். கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்திருந்தான். நீலநிறப் பூக்கள் தெறித்த டி.ஸி. சர்ட்டை உடம்புக்குக் கொடுத்து, வேஷ்டி கட்டியிருந்தான். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை, நடுவில் ஒரு குங்குமக் கீற்று. அசப்பில் கொஞ்சம் ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி பார்வையை வருடினான்.“குட்மார்னிங் ஸார்...”“குட்மார்னிங்!”கிருஷ்ணமூர்த்தி மொபெட்டை ஸ்டாண்ட் இட்டுவிட்டு கடைப்படிகளில் ஏறினான். உட்கார்ந்திருந்த அந்த கஸ்டமர் எழுந்தார்.“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?”“இல்லே... இப்பத்தான் வந்தேன்.”“மன்னிக்கணும்... கோயில்ல பூஜை முடிய லேட் ஆயிடுச்சு...”“இருக்கட்டுங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?”கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தபடியே நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்தான். எட்டுக்குடியின் பரம்பரைப் பாரம்பரியமுள்ள அந்த கோவிந்தராஜ் குடும்பத்தில் மூன்றாவது சகோதரன் இந்த கிருஷ்ணமூர்த்தி. இந்த முப்பத்தைந்தாவது வயதில் கையிலுள்ள ஆறுவயசுப் பையனைப் டவுன் எல்கேஜில் சேர்த்திடலாமா அல்லது கிராமத்து எலிமெண்ட்ரி பள்ளியிலேயே தவழவிடலாமா? என்று பெரிதாய் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.கஸ்டமர்களிடம் இவன் பேசினால் அதில் ஒரு நயம் இருக்கும்... அந்த நயத்துக்காகவே இவன் வியாபாரம் நிமிர்வோடே இருக்கிறது
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 59 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Iravu Nera Suriyagandhi - cover

    Iravu Nera Suriyagandhi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட காந்தியவாதியின் குடும்பம் பிரச்சனையில் சிக்குகிறது. முழு குடும்ப உறுப்பினர்களும் விசாரணை முறையில் மூழ்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டபோது,
    Zum Buch
  • Aayiram Arivaal Kottai - cover

    Aayiram Arivaal Kottai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This story talks about the power of the Village God that stands surrounded by a fence made of weapons. The God is a guardian to all those who abide by the truth. What about those who lie? Listen to Aayiram Arivaal Kottai.
    
    ஒரு கிராமத்து சாமியின் சக்தியை சொல்லும் பரபரப்பான புதினம் இது. அரிவாளால் வேலி கட்டி நடுவில் நிற்கும் அந்த சாமி சத்தியமானது. சத்தியம் தவறுபவர்களுக்கோ அது எதிரானது. விறுவிறுப்பான கதை - ஆயிரம் அரிவாள் கோட்டை .
    Zum Buch
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukottai Prabakar

    • 0
    • 0
    • 0
    A famous music director is murdered. There are many suspects. There is a shocking end to the interrogation. Listen to Oru Poi Podhum to know who murdered the music director.
    
    ஓரு  பிரபலமான  இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில்  பல  பேர் மேல்  சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின்  முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Zum Buch
  • Bun Maskaavudan Iraani Chaai - cover

    Bun Maskaavudan Iraani Chaai

    Ambai

    • 0
    • 0
    • 0
    மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் கதை இது.
    Zum Buch
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Zum Buch
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Zum Buch