Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஒற்றை மேகம் - cover

ஒற்றை மேகம்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

பூர்ணிமா லேசாய் பதட்டப் பட்டாள். "மெள்ளமா பார்த்து உட்கார்ங்க...""ஸ்லிப்பாகி கீழே விழுந்துடுவேனான்னு பயப்படறியா?""பின்னே...?""இந்த சக்கர நாற்காலியோட எனக்கு எத்தனை வருஷ ஸ்நேகம் தெரியுமா. நான் கீழே விழப்போனாலும் அது என்னை விடாது.""பெருமையடிச்சுகிட்டு இருக்காமே சீக்கிரமா பாத்ரூமுக்குப் போங்க."சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப்போன ராஜசேகரன் சட்டென்று நாற்காலியின் இயக்கத்தை நிறுத்தி திரும்பினான்."பூர்ணிமா.""ம்.""மத்தியான லஞ்சுக்கு இங்கிருந்தே கொண்டு போயிடுவோமா? இல்லே. எஸ்டேட் போய் பிரிப்பேர் பண்ணிக்குவோமா?""இங்கிருந்தே கொண்டு போயிடுவோம்.""குக்கிட்டே என்ன மெனு குடுக்கப் போறே?""சிக்கனும் சப்பாத்தியும் போதாது?""போதும்.""எனக்கு போதாது."குரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் நின்ற நவீனா - குளித்து முடித்து வேறு கவுனுக்குள் நுழைந்திருந்தாள். பூர்ணிமா அவளை நோக்கிப் போனாள்."என்னடி அதுக்குள்ளே குளிச்சிட்டியா?""ம். குளிச்சுட்டேன்""யார் குளிப்பாட்டிவிட்டா?""ஆயாதான்.""காதுல பார் சோப்பு.""துடைச்சுட்டா போகுது" அலட்சியமாய் சொன்ன நவீனா, ராஜசேகரினிடம் வந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்."டாடி.""என்னம்மா?""எனக்கு லஞ்ச் சிக்கனும் சப்பாத்தியும் வேண்டாம்.""பின்னே... உனக்கு என்ன வேண்டும்?""கட்லெட், வெஜிடபிள் புலவ், ஸாண்ட்விச் அப்புறம் ப்ரட்சோலா"பூர்ணிமா சுட்டு விரலை உயர்த்தினாள். "உதைப்பேன். அதெயெல்லாம் பிரிபேர் பண்ணச் சொன்னா நேரமாயிடும். சப்பாத்தி சிக்கன் மட்டும் போதும்.""பாருங்க டாடி" நவீனா இரண்டு கைகளாலும் ராஜசேகரனின் முகத்தை வருடினாள். அவன் அந்த கைகளைப் பற்றி மெள்ள முத்தமிட்டான்."என் நவீனாக்குட்டியோட மெனு ஓ.கே."என்னங்க இது. நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு...""இதோ பார் பூர்ணிமா...! எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. குக்கிட்டே உடனே சொல்லி இந்த மெனுவை பிரிபேர் பண்ணச் சொல்லு.""தாங்க்யூ டாடி!""இதோ பாருங்க. அவளுக்கு நீங்க ரொம்பவும் செல்லம் தர்றீங்க. ஒரு பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் குடுக்கக்கூடாது.""என் நவீனாக்குட்டிக்கு அப்படித்தான் செல்லம் குடுப்பேன்"பூர்ணிமா இடுப்பில் கைவைத்து முறைக்க --நவீனா கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள்." ஸேம்... ஸேம்..! மம்மிக்கு ஸேம்!"சரியாய் பத்து மணிக்கு போர்டிகோவில் நின்றிருந்த வெளிநாட்டு 'லாரல்' நிஷாந்த் கார் கிளம்பியது. பின்சீட்டில் ராஜசேகரனும், பூர்ணிமாவும் உட்கார்ந்திருக்க, முன்சீட்டில் டிரைவர் கோபாலுக்குப் பக்கத்தில் நவீனா சாய்ந்து ஆப்பிளைக் கொறித்துக் கொண்டிருந்தாள்."கோபால்!""ஸார்...!""டாப் காரியரில் வீல்சேரை நல்லா கட்டியிருக்கியா?""கட்டியிருக்கேன் ஸார்.""காரை நிதானமாவே ஓட்டு, எந்த வெஹிகிளையும் ஓவர்டேக் பண்ணாதே. மொதல்ல பாரடைஸ் பாயிண்ட் போறோம். அப்புறம்தான் எஸ்டேட்டுக்கு.""சரி சார்..."கார் நிதான வேகத்தில் - பனி பெய்து இன்னமும் ஈரமாயிருந்த ரோட்டில் வழுக்கிக் கொண்டு போயிற்று. கார் இரண்டு இறக்கங்களைக் கடந்தது -"டிரைவர் அங்கிள்" நவீனா கூப்பிட்டாள்.
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 124 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Un Edhiril Oru Edhiri - cover

    Un Edhiril Oru Edhiri

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    அல்ஸீமர் என்கிற மறதி நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பின்புலம்
    எத்துணை மர்மம் வாய்ந்தது என்பதை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் கதை இது. அல்ஸீமர் பிரச்சனையோடு இணையும் போது ஏற்படுகிற அதிர்வலைகள் இந்த உன் எதிரில் ஒரு எதிரி.
    
    A woman suffering from Alzheimer's adds mystery and creates unforeseen ripples! Listen to Un Edhiril Oru Edhiri to know more.
    Voir livre
  • Moodu Pani Nilavu - cover

    Moodu Pani Nilavu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Yamuna is the only daughter-in-law of a respectable family. She is dutiful and loving towards her in-laws. But all is not well as she is accused of murder. Will she be acquitted? To know more, listen to the murder mystery - 'Moodu pani Nilavu'
    
    மதிப்பும் மரியாதையும் பணச்செழிப்பும் நிறைந்த குடும்பத்தின் ஒரே மருமகள் யமுனா. பொறுப்பாகவும் அன்பாகவும் தன் புகுந்த வீட்டில் வாழும் யமுனாவின் மேல் ஒரு கொலை பழி சுமத்த படுகிறது. நிழலாய் தொடரும் சங்கடங்களை அவள் எப்படி சமாளிக்கிறாள்? தெரிந்து கொள்ள கேளுங்கள் - மூடு பனி நிலவு
    Voir livre
  • Sorna Regai - cover

    Sorna Regai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Palmistry is an ancient art! The lines on the palm have the power to decide the fate! A prisoner with death sentence doesn't have the palm lines that hint his end, however the jailer's palm lines reveal that he will die on the date of the prisoner's death sentence? Listen to the intriguing story - Sorna Regai.
    
    ஆயகலைகள் 64. இதில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. இந்த கைரேகைகள் என்பது அவரவர் தலையெழுத்தை தெரிவிக்கும் கோட்டு மொழியாகும். தூக்கு தண்டனை கைதி ஒருவனின் கைரேகையில் அவன் மரணம் குறித்த செய்தி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. ஆனால் ஜெயிலர் கையில் அவர் மரணம் அதே தூக்கு நாளன்று தான். எப்படி ? மிகமிக பரபரப்பான ஒரு ஆய்வு பூர்வமான நாவல்.
    Voir livre
  • Sivappaai Sila Pulligal - cover

    Sivappaai Sila Pulligal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A loving husband, beautiful wife and two amazing children. The husband is a professional assassin but also has a full time job in an office. What happens to his family in such a peculiar situation. Listen to Sivappai Sila Pulligal.
    
    ஒரு அன்பான கணவன், அழகான மனைவி, பூத்த மலர்களைப் போல் ஏழு வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள். கணவன் ஒரு ப்ரொப்ஷனல் கில்லராகவும் இருந்து கொண்டு ஒரு அலுவலகத்தில் நல்ல வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை என்னவாகும் என்று சொல்கிறது இந்த சிவப்பாய் சில புள்ளிகள்.
    Voir livre
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும்,  ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Voir livre
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Voir livre