Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஓடாதே! ஒளியாதே! - cover

ஓடாதே! ஒளியாதே!

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

முரளி, ஜமுக்காளத்தை உதறி - முன்னறையில் விரித்தான். கல்யாணத் தரகர் கன்னையன் ஒரு கை பிடித்து மடிப்புகளை நீக்க உதவினார்.வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே சொன்னார்.‘‘தாம்பூலத் தட்டை கொண்டு வந்து வை. அப்படியே நாலு ஊதுபத்தியையும் கொளுத்தி வை. கமகமன்னு வாசனையா இருக்கட்டும்...’’ தும்பைப் பூ நிறத்தில் வேஷ்டி, சர்ட் அணிந்த முரளி, அவர் சொன்னபடி செய்தான்.‘‘தரகரே... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’“சரியா நாலு மணிக்கெல்லாம் வந்துருவாங்க. அதுக்கு முன்னால உன் தங்கை காயத்ரி ரெடியாயிரணும். அவங்க வந்தப்புறம் புடவையைச் சொருகறதும், ஜடையைத் திருகறதுமா இருந்தா நல்லாயிருக்காது. வந்ததும் டாண்ணு அவ ஸ்வீட், காரத்தை தட்டில் கொண்டு வரணும். ஆமா... ஸ்வீட், காரமெல்லாம் தயார் பண்ணியாச்சா...?’’‘‘கடைல வாங்கி வெச்சுட்டேன். காயத்ரிக்கு சரியாய் போட வராதே...’’அடுத்த அறையில் காயத்ரிக்கு அலங்காரம் பண்ணி விடும் பக்கத்து வீட்டுப் பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டது.முரளி, தரகரை ஏறிட்டான்.‘‘எல்லா விஷயத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே மறைக்காம சொல்லிட்டீங்க இல்லே?’’“சொல்லிட்டேம்ப்பா...’’‘‘அப்பா இறந்தப்புறம்தான் எனக்கு குடும்ப பாரம்ன்னா என்னான்னு தெரிஞ்சது. அது வரைக்கும் ரெஸ்டாரண்ட்ல ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட புகை விட்டுட்டிருந்தேன்..“உணர்ந்துட்டே இல்லே...?’’“ரொம்ப லேட் தரகரே. இப்ப ஒரு டப்பாக் கம்பெனில - மாசம் ஆயிரம் ரூபா வாங்கிட்டிருக்கேன். முப்பது நாளைக்கு ஆயிரம் ரூபா எந்த மூலைக்கு? சல்லிக்காசு சேமிக்க முடியலை. ‘தங்கச்சிக்கு வயசு ஏறிட்டே போகுது. உங்கப்பா மாதிரியே நீயும் இவளை விட்டுரப் போறியா? அவ கழுத்துல மூணு முடிச்சு விழ வேண்டாமா?’ எல்லாரும் இதையே கேட்டு என்னை உசுப்பி விட்டாங்க. கல்யாணச் சந்தைல இறங்கினப்புறம் மலைச்சுப் போயிட்டேன். இருபது பவுன்... நாப்பது பவுன்னு கூசாமக் கேக்கறாங்க...! காயத்ரிக்கு இந்த ஜன்மத்தில் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணித்தர முடியுமான்னு திணறிட்டிருக்கும் போது நல்லவேளையா நீங்க வந்தீங்க...’ தரகர் சிரித்தார் வாய் கொள்ளாமல்...‘‘இனிமே கவலையை விடு... உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான்...’’தரகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சரேலென ஒரு டாக்சி வந்து நின்றது. கதவுகள் நான்கும் சட்டென்று ஒரே நேரத்தில் விரிந்தன.பட்டுப்புடவையில் மின்னும் மாப்பிள்ளையின் அம்மா. சில்க் ஜிப்பா, வேஷ்டி தரித்த அப்பா. மாப்பிள்ளைப் பையன் பூப் போட்ட சட்டையை கறுப்பு பேண்ட்டில் இன் பண்ணியிருந்தான். தவிர இரண்டு உறவுக்கார நபர்கள். தரகர் எதிர்கொண்டார்.‘‘வாங்க... வாங்க...’’ முரளி பவ்யமாய் கும்பிட்டான். மாப்பிள்ளைக்கு மட்டும் ஒரு ஃபோல்டிங் சேர் போடப்பட, மற்றவர்கள் ஜமுக்காள விரிப்பில் தங்களை இருத்திக் கொண்டார்கள்.‘‘அட்ரஸ் கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களா?’’ கேட்ட தரகரைப் பார்த்து புன்னகைத்தார் மாப்பிள்ளையின் அப்பா
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 66 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Yandhira Jaalam - cover

    Yandhira Jaalam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is the story of Yantras and Mantras! The protagonist who tries to kill himself is saved by a monk and he gives a Yantra to him. In 48 days, the protagonist becomes a Lakhpati. The monk asks for the Yantra back. What does he do? Listen to Yandhira Jaalam.
    
    யந்திர மந்திர தந்திரத்தில் யந்திரம் ஒன்றின் ஜாலத்தை சொல்லும் கதை இக்கதை. தற்கொலைக்கு முயல்பவன் கையில் ஒரு சன்யாசி யந்திரம் ஒன்றை தந்து பூஜிக்க சொல்கிறார். 48  நாளில் லட்சாதிபதி ஆகிறான் அவன். தான் கொடுத்ததை திரும்ப கேட்கிறார். அவன் தந்தானா?
    Zum Buch
  • Sivappu Iravu - cover

    Sivappu Iravu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.
    Zum Buch
  • Vivekum 41 Nimishangalum - cover

    Vivekum 41 Nimishangalum

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Police, judges and other law enforcing officials are cornered to release a convict who is in prison for a heinous crime committed. Crime Branch Officer Vivek comes up with a solution to this unique situation in just 41 minutes. Listen to Vivekum 41 nimishangalum to know the story.
    
    காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
    Zum Buch
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Zum Buch
  • Sorna Regai - cover

    Sorna Regai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Palmistry is an ancient art! The lines on the palm have the power to decide the fate! A prisoner with death sentence doesn't have the palm lines that hint his end, however the jailer's palm lines reveal that he will die on the date of the prisoner's death sentence? Listen to the intriguing story - Sorna Regai.
    
    ஆயகலைகள் 64. இதில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. இந்த கைரேகைகள் என்பது அவரவர் தலையெழுத்தை தெரிவிக்கும் கோட்டு மொழியாகும். தூக்கு தண்டனை கைதி ஒருவனின் கைரேகையில் அவன் மரணம் குறித்த செய்தி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. ஆனால் ஜெயிலர் கையில் அவர் மரணம் அதே தூக்கு நாளன்று தான். எப்படி ? மிகமிக பரபரப்பான ஒரு ஆய்வு பூர்வமான நாவல்.
    Zum Buch
  • Irumbu Pattampoochigal - cover

    Irumbu Pattampoochigal

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
    Zum Buch