மிஸ் பாரதமாதா
ரமணிசந்திரன்
Maison d'édition: Pocket Books
Synopsis
ஸ்... ஸார்... அது... டெட்பாடியா...? எனக்குத் தெரியாது ஸார்... அந்தப் பொண்ணு பேஷண்ட்ன்னு... சொல்லித்தான்...”சுந்தரேசன் கண்கள் விரிய அதிர்ச்சியாய் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - கான்ஸ்டபிளின் கையிலிருந்த லாட்டி அவனுடைய மோவாயை வலுக்கட்டாயமாய் நிமிர்த்தியது.‘‘உம்... பேர்... என்ன டா...?’’“சு... சு. சுந்தரேசன்...’’‘‘மொதல்ல கீழே எறங்கு...’’“ஸார்... எனக்கு ஒண்ணும் தெரியாது... அந்தப் பொண்ணுதான்...’’“‘எங்கடா அவ...?”“இ... இந்த சந்துக்குள்ளே போனா...’’‘‘பொய் பேசாதே...’’‘‘நிஜமாத்தான் ஸார்...”‘‘சந்துக்குள்ளே யாரை பார்க்கப் போனா?”‘‘அவ... அக்காவை...’’‘‘வா... சந்துக்குள்ளே போய் பார்க்கலாம்...’’ ஒரு கான்ஸ்டபிள் நின்று கொள்ள - இன்னொருவர் தன் கையில் வைத்து இருந்த லாட்டியால் சுந்தரேசனைத் தள்ளிக்கொண்டு அந்த அரையிருட்டுச் சந்துக்குள் நுழைந்தார்காற்றில் மூத்திர நாற்றம். குப்பைத் தொட்டிக்குள் ஒரு நாய் இறங்கி எதையோ கிளறிக் கொண்டிருந்தது. கார்ப்பரேஷன் விளக்கு கம்பத்தில் தூசி படிந்த ட்யூப் லைட் ஒன்று மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்து சந்துக்குள் இருந்த வீடுகளைக் காட்டியது.“‘எந்த வீடுடா...?”“எனக்கு தெரி... தெரியாது ஸார்...’’“ஏண்டா... ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகள் மாதிரி ஒரு டெட்பாடியை கார்க்குள்ளே போட்டு கொண்டு வந்திருக்கீங்க... எதுவுமே தெரியாத மாதிரி பாவ்லா பண்றியே...?’’“சத்தியமா எனக்கு... எதுவுமே தெரியாது ஸார்...’’“ரொம்ப நேரத்துக்கு இதையே நீ சொல்லிட்டிருக்க முடியாது. அந்தப் பொண்ணு யாரு...? டாக்ஸிக்குள்ளே செத்துக்கிடக்கிறவன் யாரு? எதுக்காக அவனை கொலை பண்ணுங்க...?’’‘‘ஸார்... டாக்ஸியில் இருக்கிறது டெட்பாடின்னு இப்பத்தான் எனக்குத் தெரியும்... அந்தப் பொண்ணு என்னை ஏமாத்திட்டா...”“நீ சொல்றது எதுவுமே நம்பற மாதிரி இல்லையே? உன்னை லாக்கப்புக்கு கொண்டு போனாத்தான் உண்மையைச் சொல்லுவே போலிருக்கு...’’‘‘ஸ... ஸார்...’’“ம்...”சுந்தரேசன் கண்கள் கலங்க கான்ஸ்டபிளைக் கும்பிட்டான்.‘‘எனக்கு கல்யாணமாகி மூணு மாசம்தான் ஸார் ஆச்சு... ஏதோ டாக்ஸியை ஓட்டி பொழைப்பை நடத்திட்டிருக்கேன்... இந்தக் கொலையைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது ஸார். என்னை இக்கட்டுல மாட்டிவிட்டு குடும்ப சந்தோஷத்தை கெடுத்துடாதீங்க ஸார்...சந்து இப்போது மறுபக்க ரோட்டுக்கு போய் முடிந்திருந்தது. பக்கெட்டில் பசையை வைத்துக்கொண்டு - 100-வது நாள் போஸ்டர் ஒன்றை சுவரில் ஒட்டும் முயற்சியில் இருந்த லுங்கி ஆசாமி ஒருவன் பார்வைக்கு கிடைத்தான்.கான்ஸ்டபிள் கூப்பிட்டார்.‘‘வாடா இங்கே...’’அவன் பசை கையோடு - பவ்ய நடையோடு - வந்தான். கண்களில் மிரட்சி.‘‘இந்தப் பக்கம் எந்த பொண்ணாவது வந்தாளா?’’“இ... இல்லீங்களே...’’‘‘நீ எவ்வளவு நேரமா இங்கே இருக்கே...?’’“இப்பத்தான் வந்தேன்ங்க...’’சுந்தரேசன் வியர்த்து வழிகிற முகத்தோடு எச்சில் விழுங்கிக் கொண்டே சொன்னான்.‘‘ஓடிட்டா போலிருக்கு...’’கான்ஸ்டபிள் அவனுடைய காலரைப் பற்றினார்.‘‘இங்கெல்லாம் நீ உண்மையை ஒத்துக்கமாட்டே... வா ஸ்டேஷனுக்குப் போயிடலாம்...’’‘‘ஸ... ஸார்... ஸார்...’’“பேசாதே... நட்றா... டாக்ஸிக்குள்ளே கொலை செய்யப்பட்ட டெட் பாடியை வெச்சுகிட்டு... பொய் கதா காலட்சேபமா பண்றே... லாக்கப்புக்கு கொண்டு போய் லாடம் கட்டினா... நான் முந்தி... நீ முந்தின்னு எல்லா உண்மையும் ஓடி வந்துடாதா... என்ன...?’’சுந்தரேசனை கான்ஸ்டபிள் நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்
