Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
லேகா என் லேகா - cover

லேகா என் லேகா

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

யதார்த்த நிலைக்கு வர நிமிஷ நேரம் பிடித்தது டாக்டர் சுகவனத்துக்கு. கையிலிருந்த கடிதத்தை மறுபடியும் படித்தார். எந்நேரத்திலும் வெடித்து விடக் கூடிய ஒரு வெடிகுண்டைக் கையில் வைத்திருப்பவரைப் போல் ஓர் அவஸ்தை அவரை வியாபித்தது."லேகா... இந்த லெட்டர் எப்போது வந்தது?""இப்பத்தாங்க. ஒரு பதினைந்து நிமிஷத்துக்கு முன்னாடி. படித்ததுமே கண்ணை இருட்டி தலையைச் சுத்திடுச்சு. மரகதா போன் பண்ணினாளா?""உம்.""ஆபரேஷன் பண்ணி முடிச்சுட்டீங்களா?""இல்லே லேகா. தியேட்டருக்குப் போறதுக்கு முன்னாடி போன் வந்தது. உடனே வந்துட்டேன். இப்போ உனக்கு உடம்பு எப்படியிருக்கு லேகா?""ஆபரேஷன்?""டாக்டர் சண்முகராஜனை பிக்ஸ் பண்ணிக்கச் சொல்லிட்டேன். நீ மயக்கமா விழுந்திருக்கிற விஷயம் தெரிஞ்ச பின்னாடி என்னால கத்தியை எடுக்க முடியுமா லேகா? டாக்டர் மாத்யூவுக்கு இதுல கொஞ்சம் வருத்தந்தான். அதிருக்கட்டும், உனக்கு ஒண்ணு ஆயிடுச்சுன்னு தெரிஞ்சப் பிறகும் இதயத்தை இரும்பாப் பண்ணிக்கிற மனோதிடம் என்கிட்டே இல்லே லேகா. ஒரு டாக்டர் இப்படிப் பேசக் கூடாதுதான். ஆனா பேசறேன்.லேகா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவருடைய மார்பினின்றும் விலகி உட்கார்ந்தாள். அவருடைய கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள்."இந்தக் கடிதத்திலே இப்படி எழுதியிருக்கே. என்னங்க பண்ணலாம்?" லேகாவின் குரலில் பயம் தெரிந்தது. சுகவனம் எழுந்தார்."போலீசுக்கு இன்பார்ம் பண்ணுவோம் லேகா. அவங்க பார்த்துப்பாங்க.""எனக்கென்னவோ பயமாயிருக்குங்க.""எதுக்காக பயம் லேகா? எவனோ விளையாட்டுத்தனமா மிரட்டி இருக்கலாம். போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்க. கையெழுத்தை வெச்சுக்கிட்டே ஆளைத் தேடி அமுக்கிடுவாங்க. பி.2 போலீஸ் ஸ்டேஷன்லே என்னோட படிச்ச கோகுல்நாத் இன்ஸ்பெக்டரா இருக்கார். அவரைக் கூப்பிட்டு லெட்டரைக் காட்டுவோம்."லேகா மிரட்சியோடு தலையை அசைக்க...சுகவனம் டெலிபோனை நோக்கிப் போனார்.ரிஸீவரின் தலையைத் தொடுவதற்குள் -- அதுவே கூப்பிட்டது. சுகவனம் ரிஸீவரை எடுத்தார். "ஹலோ!""ஹலோ! டாக்டர்" மறுமுனையில் ஒரு புதிய குரல் உற்சாகமாய்க் கொப்பளித்தது. கொஞ்சம் இளமையான குரல்."யார் பேசறது?" சுகவனம் குரலை உயர்த்தினார்."அதையெல்லாம் அடுத்த வாரம் சொல்றேன். டாக்டர், அந்த லெட்டரைப் படிச்சீங்களா? ஷாக் நியூஸ்தான். எனக்கு வேறே வழி தெரியலை..."சுகவனம் பயத்தில் மிடறு விழுங்கினார். "இந்தாப்பா, நீ யாரு? எதுக்காக அந்தக் கடிதம்? என் லேகாவை ஒண்ணும் பண்ணிடாதே. நீ எது கேட்டாலும் தர்றேன்.""டாக்டர்! பயப்படாதீங்க. உங்க பிரிய மனைவி லேகாவுக்கு அடுத்த வார முடிவுக்குள்ளே ஏற்படப்போற பயங்கரத்துக்கு நீங்க உங்களைத் தயார் பண்ணிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. நீங்க லேகா மேலேவெச்சிருக்கிற பிரியம் எனக்குத் தெரியும். அவ சுண்டு விரல்ல குண்டூசியைக் குத்தினா உங்களுக்கு நெஞ்சில கடப்பாறை பாய்ஞ்ச மாதிரி இருக்கும்ங்கிற சென்டிமெண்ட்ஸும் எனக்குத் தெரியும். ஆனா எனக்கு வேற வழியில்லை. லேகா எனக்கு வேணும்!""டேய்...ய்..ய்...ய்!""உங்களுக்கு ஆத்திரமாகத்தான் இருக்கும். மொதப் பொண்டாட்டி இறந்ததும் மறு கல்யாணம் செஞ்சுக்கப் பிரியப்படாத உங்களுக்கு உங்க மாமனார் சிவப்பிரகாசம் தன்னோட ரெண்டாவது மகள் லேகாவையே கட்டாயப் படுத்திக் கட்டி வெச்சார். யாருக்கு டாக்டர் கிடைக்கும் அந்த அதிர்ஷ்டம்? அந்த அதிர்ஷ்டத்தில் நானும் கொஞ்சம் கையை வைக்கிறேனே?""யூ...யூ...யூ ப்ளடி...""திட்டுங்க டாக்டர். அது உங்களோட ஆத்திரத்தை தணிச்சுக்க உதவும். ஒரு விஷயம் சொல்லட்டுமா? போலீசுக்குப் போகாதீங்க. உயிர் போன பின்னாடி ட்ரீட்மெண்ட் கொடுக்க வர்ற டாக்டர் மாதிரியான கேஸ் இது. இந்த ஒரு வாரம் உங்க லேகாவை நல்லாக் கொஞ்சிக்குங்க. அவளை நல்ல ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. சினிமாவுக்கு கூட்டிட்டுப் போங்க. அவ ஆசைப்பட்டதை வாங்கிக் குடுங்க. ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிரியப்பட்டா தடுக்காதீங்க."அவன் சிரித்துக் கொண்டே ரிஸீவரை வைத்து விட்டான்."யாருங்க அது?" கேட்டாள் லேகா."ஸ்கௌண்ட்ரல். லெட்டர் எழுதின ராஸ்கல். மிரட்டறான். போலீஸ்னா என்னான்னு அவனுக்குத் தெரியாது போலிருக்கு."சுகவனம் டயலைச் சுற்றி பி.2 போலீஸ் ஸ்டேஷனைக் கூப்பிட்டார். இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சுலபத்தில் கிடைத்தார்
Available since: 02/08/2024.
Print length: 120 pages.

Other books that might interest you

  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Show book
  • Iraval Sorgam - cover

    Iraval Sorgam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
    மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம்."
    Show book
  • Abaaya Malli - cover

    Abaaya Malli

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    When horror meets Romance, it is Abaaya Malli! Are ghosts real? Ghosts are better than traitors! With research done on ghosts, this is an enthralling story!
    
    திகிலும் காதலுமான மர்மக்கதை. ஆவிகள் உண்மையா? ஆவிகளை விட கொடியவர்கள் துரோகிகள். ஒரு ஆவியுலக ஆய்வு கொண்ட பரபரப்பான புதினம்.
    Show book
  • Mandhira Muzhakkam - cover

    Mandhira Muzhakkam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான்.
    
    இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
    Show book
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anonymous

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Show book
  • Thappu Thappaai oru Thappu - cover

    Thappu Thappaai oru Thappu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும் ? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர்.
    
    நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்தவர்கள். காயத்ரியிடம் சத்யநாராயணன் இப்போது நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவள் தன்னிடம் உள்ள பையைத் திறந்து காட்டி, "ஊதுவத்தி வியாபாரம்தான் என்னுடைய பிசினஸ். வீடுவீடாய் போய் விற்று வருகிறேன்" என்று சொல்ல சத்யநாராயணன் அதிர்ந்து போய் அவளிடம், " காயத்ரி ! இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கலை. பள்ளியிலும், கல்லூரியிலும் நீ ஒரு கெட்டிக்கார மாணவியாய் இருந்தாய். நீ ஒரு நல்ல வேலையில் இருந்து உனக்குத் திருமணமும் நடந்து இருக்கும் என்று நினைத்தேன். உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்று கேட்க காயத்ரி ஒரு விரக்தி சிரிப்போடு, " விதி சிரிக்கும்போது நாம் அழ வேண்டியிருக்கிறதே " என்று சொல்கிறாள். அவள் சொன்ன இந்த வரியில் இருந்துதான் " தப்புத் தப்பாய் ஒரு தப்பு " நாவல் சூடு பிடிக்கிறது.
    
    காயத்ரியின் தற்போதைய நிலைமைக்கு எது காரணம் யார் காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்போது வாசகர்கள் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உறைந்து போவது மட்டும் நிச்சயம். காரணம் palm membrane. அது என்ன "palm membrane" என்று கேட்கிறீர்களா ஆடியோவில் நாவலைக் கேளுங்கள்."
    Show book