Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கற்பனையோ அற்புதமோ! - cover

கற்பனையோ அற்புதமோ!

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

அம்மா!” என்று, தன் ‘சன்னி’யைக் கிளப்பியவாறே உரக்க அழைத்தாள் சித்ரகலா. “நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறேன்...” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, அவளுடைய அன்னை மாலினி வந்து சேர்ந்தாள்.கையிலிருந்த உணவு பாக்கெட், தண்ணீர் அடங்கிய பையை ‘சன்னி’யில் தொங்கவிட்டவள், “சரிதான்மா, போய் நல்ல பிள்ளையாய்ப் படித்துவிட்டு வாடாம்மா, கண்ணு!” என்று உருக்கமாய்க் கூறவும் தாய் மகள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.“நூற்றுக்கு ஒரு பத்து... அல்லது பதினைந்து மார்க் வாங்குகிற அளவு படித்தால் போதுமா?” என்று மகள் அப்பாவியாய்க் கண்களை விரிக்க, “சேச்சே! அவ்வளவு கஷ்டப்படாதே, கண்மணி! சும்மா ஓர் ஐந்து, ஆறு மதிப்பெண் எடுத்தால் போதாது?” என்று கேட்க மீண்டும் சதங்கை ஓசையாய் நகையொலி கலகலத்தது.“ம்கூம்! அந்தக்காலத்தில் நீங்கள் என்ன மாதிரி படித்தீர்கள் என்று இப்போது தெரிகிறது. இருக்கட்டும், உங்களை வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று செல்ல மிரட்டலுடன் வண்டியைக் கிளப்பிச் சென்றாள் மகள்.வெறும் ‘பான்ட்’ மட்டும் மாட்டி விட்டிருந்த நீளக் கூந்தல் காற்றில் பறக்க, எழில் ஓவிமாய்ச் சென்ற மகளின் அழகை ரசித்தபடி நின்றிருந்த மாலினிக்குத் திடுமென உள்ளூரத் திக்கென்றதுபெற்றவளின் கண்தானே பிள்ளைகளுக்கு ஆதாரம்!சேச்சே! அதெல்லாம் சும்மா! பெற்று வளர்த்த தாயார் அன்பாய் ஆசையாய்ப் பார்ப்பதனாலேயே பிள்ளைகளுக்குக் கெடுதல் நேருமா, என்ன? வெறும் கதை!... ஆனாலும், ‘என் மகளை எந்தத் தீமையும் அணுகாமல் கூடவே துணையிருந்து காப்பாற்று, முருகா!’ என்றும் வேண்டிக் கொண்டது அந்த அன்னை மனம்
 
தாயின் மனதில் இப்படி ஒரு சில சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை நல்லபடியாகவே சென்றடைந்தாள் சித்ரகலா.‘காது கேளாதோர், வாய் பேசாதோர்’ பள்ளி அது அவளது பள்ளி இறுதி ஆண்டிலும், கல்லூரி நாட்களிலும் ‘வாலன்டரி வொர்க்’காக அவ்வப்போது இங்கு வந்து. அவள் பணியாற்றினாள். ஏனோ, மனதிற்கு மிகவும் பாந்தமாக இருக்கவே, படிப்பு முடிந்தபின், இங்கு ஒரு முழுநேர ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கினாள்.அவளுடைய தாயார் மாலினிக்கு முதலில் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘பொழுது போகவில்லை என்றால் மேலே படி, படிப்பு விருப்பம் இல்லை என்றால் தையல், பெயிண்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எதிலாவது சேர். எல்லாம் விட்டு, இது எதற்கு? முதலில் பணி, தொண்டு என்று பெருமையாக இருந்தாலும், எப்போதும் அந்தப் பிள்ளைகளின் இழப்பை எண்ணி ஒரு வேதனையுடனேயே வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏனம்மா இந்தத் தலையெழுத்து?” என்று மகளைத் தடுக்க முயன்றாள்.“எல்லோரும் இப்படியே நினைத்து விலகிப் போனால் யார் அம்மா அவர்களுக்கு உதவுவார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் மகள்.“சம்பளத்திற்காக வருகிறவர்கள் இருப்பார் என்று சொல்லாதீர்கள், மன ஈடுபாடு இல்லாமல் வெறும் கூலிக்காக உழைக்கிற உழைப்பு இங்கே போதாது!” என்று கூறிப் பிடிவாதமாக இந்த வேலையில் சித்ரகலா ஈடுபட்டாள்.ஆனால், அவளை அறிந்த அவளுடைய அன்னை சொன்னது உன்மையில், உள்ளூர ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும்போது அவளுக்கு மகிழ்ச்சியும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டுவந்து காட்டியபோது, மாலினியே மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவ்வளவு நேர்த்தி அவற்றில்! இல்லாத புலன்களின் சக்தியெல்லாம் இருக்கிற மற்ற புலன்களில் வந்து அதிகப்படியாகச் சேர்ந்துவிட்டது போல அவ்வளவு திறமையோடு செய்யப்பட்டிருந்தன
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 252 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • பரிசு - cover

    பரிசு

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    ”அறுகம்புல்லும் ஆலாமரமும் தெய்வங்களல்ல. பஞ்சபூதங்களும் தெய்வங்களல்ல. அவற்றிலிருந்து வெளிப்படும் சக்திகளும் தெய்வங்களல்ல. தத்வமஸி அதுவே நாமான அவைகளின் சாரமாயுள்ள மனிதனின் இருதயத்தில் அடங்கிய சத்தியமே தெய்வம் என்பதை விளக்கவே பரிசு என்ற இந்நூல் எழுதியுள்ளேன்.”  
    வெள்ளியங்காட்டானின் உபநிடதவழித் தத்துவ விளக்கம் பேராசிரியர் ரமணியின் குரலில்…. 
     
    Voir livre
  • La Sa Ra Short Stories - cover

    La Sa Ra Short Stories

    La Sa Ramamirtham

    • 0
    • 0
    • 0
    Short Story Collection from La Sa Ra - Ezhuthin Pirappu, Dhaakshayani, Manni, Paarkadal, Sumangalyan, Varigal, Mahabaliலா ச ராவின் சிறுகதை தொகுப்பு - எழுத்தின் பிறப்பு, தாக்ஷாயணி, மன்னி, பாற்கடல், சுமங்கல்யன், வரிகள், மஹாபலி
    Voir livre
  • Sarmavin Uyil - cover

    Sarmavin Uyil

    Ka Naa Subramaniam

    • 0
    • 0
    • 0
    கதையோ, சம்பவங்களோ, ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணசித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் 1938இல் சேலத்தில் உட்கார்ந்து எழுதிய நாவல் சர்மாவின் உயில். எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது.
    Voir livre
  • Parinaamam - cover

    Parinaamam

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஜெயமோகனின் "பரிணாமம்" எழுத்து அதன் ஆழம், தத்துவ நுண்ணறிவு மற்றும் மனித நிலையை உள்நோக்கத்துடன் ஆராய்வதற்காக அறியப்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம், இருப்பின் தன்மை மற்றும் உள் நிறைவுக்கான தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது இந்த நாவல் . 
    ஒட்டுமொத்தமாக, "பரிணாமம்" என்பது சிந்தனையைத் தூண்டும் படைப்பாகும், இது அதன் ஆழ்ந்த கருப்பொருள்கள் மற்றும் செழுமையான தத்துவ சொற்பொழிவுகளுக்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று. 
    இந்த  நாவல் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பும் அறிவு என்ற மனிதனின் கதையை விவரிக்கிறது. 
    அறிவின் திரும்புதல் கிராமப்புற வாழ்க்கை, குடும்ப இயக்கவியல் மற்றும் சமூக விதிமுறைகளின் சிக்கல்களை அவிழ்க்கும் தொடர் நிகழ்வுகளைத் தூண்டுகிறது. அவர் தனது வேர்களுடன் மீண்டும் இணைந்தபோது, அறிவு தனது கிராமத்தின் முரண்பட்ட மதிப்புகள் மற்றும் மரபுகளுடன் தன்னைப் பற்றிக் கொள்கிறார். அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக கிராமவாசிகள் உட்பட அவரைச் சுற்றியுள்ள மக்களின் போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளில் சிக்கிக் கொள்கிறார். 
    அறிவின் பயணத்தின் மூலம், ஜெயமோகன் அடையாளம், கலாச்சார மாறுபாடு மற்றும் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையிலான மோதல் போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறார். மனித உறவுகளின் நுணுக்கங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை நாவல் ஆழமாக ஆராய்கிறது.
    Voir livre
  • Eeram Kasindha Nilam - cover

    Eeram Kasindha Nilam

    C R Ravindran

    • 0
    • 0
    • 0
    கல்வி, மருத்துவம், கழிப்பிடம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத சிறிய கிராமத்தில் மண்ணை நம்பி உழைத்து வாழும் எளிய, படிப்பறிவற்ற மனிதர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாமல் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அதுவரையிலான நெருக்கமான மனித உறவுகள் சிதைந்து கிராமத்தின் அடிப்படைகள் ஆட்டம் காண்கின்றன. மறைந்துபோன கொங்கு கிராமம் ஒன்றின் கதை மட்டுமல்ல இந்த நாவல். இழந்துபோன பண்பாட்டுக் கூறுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சான்றும்கூட.
    Voir livre
  • Periya Thirumozhi - cover

    Periya Thirumozhi

    Thirumangaiazhvar

    • 0
    • 0
    • 0
    இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் (அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர் திருமங்கை ஆழ்வார். பெருமாளின் 108 திருப்பதிகளில் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது. பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி நெறியைப் புலப்படுத்தினார். சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார். தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி பாவத்தை அருளினார். அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை பக்தியின் முதிர்கனிகள் ஆகும். மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த பெருமைக்கு உரியவர். பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் வித்திட்டவர்.
    Voir livre