Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கற்பனையோ அற்புதமோ! - cover
LER

கற்பனையோ அற்புதமோ!

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அம்மா!” என்று, தன் ‘சன்னி’யைக் கிளப்பியவாறே உரக்க அழைத்தாள் சித்ரகலா. “நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறேன்...” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, அவளுடைய அன்னை மாலினி வந்து சேர்ந்தாள்.கையிலிருந்த உணவு பாக்கெட், தண்ணீர் அடங்கிய பையை ‘சன்னி’யில் தொங்கவிட்டவள், “சரிதான்மா, போய் நல்ல பிள்ளையாய்ப் படித்துவிட்டு வாடாம்மா, கண்ணு!” என்று உருக்கமாய்க் கூறவும் தாய் மகள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.“நூற்றுக்கு ஒரு பத்து... அல்லது பதினைந்து மார்க் வாங்குகிற அளவு படித்தால் போதுமா?” என்று மகள் அப்பாவியாய்க் கண்களை விரிக்க, “சேச்சே! அவ்வளவு கஷ்டப்படாதே, கண்மணி! சும்மா ஓர் ஐந்து, ஆறு மதிப்பெண் எடுத்தால் போதாது?” என்று கேட்க மீண்டும் சதங்கை ஓசையாய் நகையொலி கலகலத்தது.“ம்கூம்! அந்தக்காலத்தில் நீங்கள் என்ன மாதிரி படித்தீர்கள் என்று இப்போது தெரிகிறது. இருக்கட்டும், உங்களை வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று செல்ல மிரட்டலுடன் வண்டியைக் கிளப்பிச் சென்றாள் மகள்.வெறும் ‘பான்ட்’ மட்டும் மாட்டி விட்டிருந்த நீளக் கூந்தல் காற்றில் பறக்க, எழில் ஓவிமாய்ச் சென்ற மகளின் அழகை ரசித்தபடி நின்றிருந்த மாலினிக்குத் திடுமென உள்ளூரத் திக்கென்றதுபெற்றவளின் கண்தானே பிள்ளைகளுக்கு ஆதாரம்!சேச்சே! அதெல்லாம் சும்மா! பெற்று வளர்த்த தாயார் அன்பாய் ஆசையாய்ப் பார்ப்பதனாலேயே பிள்ளைகளுக்குக் கெடுதல் நேருமா, என்ன? வெறும் கதை!... ஆனாலும், ‘என் மகளை எந்தத் தீமையும் அணுகாமல் கூடவே துணையிருந்து காப்பாற்று, முருகா!’ என்றும் வேண்டிக் கொண்டது அந்த அன்னை மனம்
 
தாயின் மனதில் இப்படி ஒரு சில சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை நல்லபடியாகவே சென்றடைந்தாள் சித்ரகலா.‘காது கேளாதோர், வாய் பேசாதோர்’ பள்ளி அது அவளது பள்ளி இறுதி ஆண்டிலும், கல்லூரி நாட்களிலும் ‘வாலன்டரி வொர்க்’காக அவ்வப்போது இங்கு வந்து. அவள் பணியாற்றினாள். ஏனோ, மனதிற்கு மிகவும் பாந்தமாக இருக்கவே, படிப்பு முடிந்தபின், இங்கு ஒரு முழுநேர ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கினாள்.அவளுடைய தாயார் மாலினிக்கு முதலில் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘பொழுது போகவில்லை என்றால் மேலே படி, படிப்பு விருப்பம் இல்லை என்றால் தையல், பெயிண்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எதிலாவது சேர். எல்லாம் விட்டு, இது எதற்கு? முதலில் பணி, தொண்டு என்று பெருமையாக இருந்தாலும், எப்போதும் அந்தப் பிள்ளைகளின் இழப்பை எண்ணி ஒரு வேதனையுடனேயே வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏனம்மா இந்தத் தலையெழுத்து?” என்று மகளைத் தடுக்க முயன்றாள்.“எல்லோரும் இப்படியே நினைத்து விலகிப் போனால் யார் அம்மா அவர்களுக்கு உதவுவார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் மகள்.“சம்பளத்திற்காக வருகிறவர்கள் இருப்பார் என்று சொல்லாதீர்கள், மன ஈடுபாடு இல்லாமல் வெறும் கூலிக்காக உழைக்கிற உழைப்பு இங்கே போதாது!” என்று கூறிப் பிடிவாதமாக இந்த வேலையில் சித்ரகலா ஈடுபட்டாள்.ஆனால், அவளை அறிந்த அவளுடைய அன்னை சொன்னது உன்மையில், உள்ளூர ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும்போது அவளுக்கு மகிழ்ச்சியும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டுவந்து காட்டியபோது, மாலினியே மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவ்வளவு நேர்த்தி அவற்றில்! இல்லாத புலன்களின் சக்தியெல்லாம் இருக்கிற மற்ற புலன்களில் வந்து அதிகப்படியாகச் சேர்ந்துவிட்டது போல அவ்வளவு திறமையோடு செய்யப்பட்டிருந்தன
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 252 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Maaya Peru Nadhi - மாயப் பெரு நதி - cover

    Maaya Peru Nadhi - மாயப் பெரு நதி

    Haran Prasanna

    • 0
    • 0
    • 0
    Maaya peru nadhi - A proud Aurality tamil audio book production ebook by Thadam Publications.  
    Download FREE Aurality app now on play store and or iphone ios store இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி. ஹரன் பிரசன்னா 2001ம் ஆண்டில் இருந்து கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நிழல்கள் (கவிதைத் தொகுப்பு), சாதேவி (சிறுகதைத் தொகுப்பு), புகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்) ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளன. நான்கு வருடங்களாக வெளி வந்துகொண்டிருக்கும் ‘வலம்’ என்ற தமிழ்ப் பத்திரிகையின் எடிட்டர்களுள் ஒருவராக இருக்கிறார். ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது. எழுத்தாளர் ஹரன் பிரசன்னா எழுதி தடம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.
    Ver livro
  • பட்டினத்தாரின் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் - cover

    பட்டினத்தாரின்...

    பட்டினத்தார், பத்திரகிரியார்

    • 0
    • 0
    • 0
    பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.  பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.  
    அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதிணென் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்று மிகவும் புகழ் பெற்றவை. மிக எளிய வார்த்தகளையும் ஆழமான பொருளும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை. 
    இந்த ஒலிநூலில் சந்த ஓசையில் ரமணி படைத்திருக்கும் நூல்கள், அருட்புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், கோயிற்றிருவகவல், தாயார் தகனக்கிரியை, திருத்தில்லை, முதல்வன் முறையீடு, மற்றும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்
    Ver livro
  • Sivagamiyin Sabatham Part 2 - cover

    Sivagamiyin Sabatham Part 2

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    'Sivagamiyin Sabadham' is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikesi II, and the Pallava Emperor, Mahendra Varmar and at a later stage, his son, Narasimha Varmar, forms the core of the novel. 
    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது."
    Ver livro
  • Oru Vaarthai - cover

    Oru Vaarthai

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    படைப்பிலக்கியத்தின் நோக்கமே மனிதநேய அடிப்படையையும், வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும் படிப்பவர் மனங்களில் ஏற்பட செய்வதே. திருமதி சிவசங்கரி அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பு அதனை செவ்வனே நிறைவேற்றி உள்ளது. இந்த சிறுக்கதைகள் தொகுப்பில் ஆசிரியர், நம் தற்போதைய வாழ்வின் பல நிலைகளை பிரதிபலிக்கச் செய்து உள்ளார். இப்படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி இருக்கிறார்.
    Ver livro
  • Nizhal Mutram - cover

    Nizhal Mutram

    Perumal Murugan

    • 0
    • 0
    • 0
    ஒரு பி சென்டர் – அதாவது ஒரு நடுவாந்தர ஊரின் (திருச்செங்கோடு) சினிமா தியேட்டர். தியேட்டர் கூட இல்லை, டெண்டு கொட்டாய். அதன் உப தொழில்களாய் ஒரு சோடாக்கடை, ஒரு டீக்கடை. அங்கே வேலை செய்யும் பதினைந்து சொச்சம் வயது இளைஞர்கள். அவர்களின் வாழ்க்கையை மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதி இருக்கிறார் பெருமாள் முருகன். சினிமா காட்சிளை எடிட்டர் கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைக் காட்சிகளாக அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தயும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளியாக நாவலின் வடிவம் அமைந்துள்ளது. பெருமாள் முருகன் பேணும் எழுத்துக்கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த விரும்பாத அவரது கலைத்தன்மையும் நிழல் முற்றத்தைக் கச்சிதமான கதை உலகமாக ஆக்குவதில் கைகொடுக்கின்றன.
    Ver livro
  • Valayapathi Full - வளையாபதி - Tamil Audio Book - cover

    Valayapathi Full - வளையாபதி -...

    Unknown

    • 0
    • 0
    • 0
    தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. 
    கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துகளை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
    Ver livro