Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கண்ணிமைக்க நேரமில்லை - cover

கண்ணிமைக்க நேரமில்லை

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

நந்தா வீறிட்டாள்.“அ... அண்ணா…!”கார் கிறீச்சிட்டு நின்றது. உத்தம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கலவரமானான்.“இப்படி திடீர்ன்னு குறுக்கே ரோட்டை கடப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை நந்தா…”“வா… இறங்கிப் பார்க்கலாம்…”“வேண்டாம் நந்தா…! போயிடலாம்… கார்மோதி தூக்கி எறிஞ்ச வேகததுல... அந்தப் பொண்ணு கண்டிப்பா செத்திருப்பா! இறங்கிப் பார்த்துட்டிருந்தா… பிரச்சினையில் மாட்டிக்குவோம்…”“ஒரு வேளை... அந்தப் பொண்ணு உயிரோட இருந்துட்டா…?”“நந்தா...! அவ உயிரோடு இருந்தா என்ன…? செத்துப் போயிருந்தாதான் என்ன…? இந்த விபத்தைப் பார்த்தவங்க யாரும் இல்லை... நாம இங்கிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது…’“ஒரு நிமிஷம் இறங்கிப் பார்த்துடலாம்.”“வேண்டாம் நந்தா...! நான் சொல்றதைக் கேளு, நாம பாட்டுக்கு போயிட்டே இருப்போம்…”“எனக்கு மனசு கேக்கலை... அண்ணா...” நந்தா சொல்லிக்கொண்டே காரின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள், நிசப்தமான இருட்டின் பின்னணியில் சில்வண்டுகள் விதவிதமாய் சுருதி சேர்த்துக் கொண்டிருக்க, நந்தா பத்தடி தள்ளி குப்புற விழுந்திருந்த அந்தப் பெண்ணை நெருங்கினாள்.குனிந்தாள்.தலையில் இரத்தக்காயம் தெரிய – அந்தப் பெண்ணின் உடல் லேசாய்த் துடித்துக் கொண்டிருந்தது. சின்னதாய் முனகல் சத்தம். இரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக சேலையைக் கிழித்து தலைக்குக் கட்டுப் போட்ட நந்தா திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள்.“அண்ணா…!”“என்ன…? போயிட்டாளா...?”“தலையில் மட்டுந்தான்காயம். உயிர் இருக்கு…”“இருந்தா இருக்கட்டும்… வந்து கார்ல ஏறு. நாம போய்க்கிட்டே இருப்போம்…”“நீ முதல்ல இறங்கி வாண்ணா…”“எதுக்கு?”“வா… சொல்றேன்…”“நந்தா...! நீ விபரீத்தை விலை கொடுத்து வாங்கிட்டிருக்கே… வேற ஏதாவது வாகனம் இந்த வழியா வர்றதுக்கு முந்தி வந்து கார்ல ஏறு…”“நீ இப்போ… காரை விட்டு கீழே இறங்கி வரப் போறியா?இல்லையா...?”உத்தம் எரிச்சலோடு காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு வேக வேகமாய் நடந்து வந்து நந்தாவின் பக்கத்தில் நின்றான்.“என்ன…?”“ஒரு கை பிடி... இந்தப் பொண்ணை நம்ம காருக்கு கொண்டு போயிடலாம்...”“நந்தா...! என்ன உளர்றே…?”“உளரலை அண்ணா... உயிரோடு இருக்கற பொண்ணை இப்படியே விட்டுட்டுப் போனா… கொஞ்ச நேரத்தில் செத்துடுவா… ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துட்டு போயிடுவோம்...”உத்தம் கோபத்துக்குப் போனான். “நந்தா! நீ புரிஞ்சு பேசறியா…? இல்ல புரியாம பேசறியா…? இந்தப் பொண்ணை மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தா… விபத்து எப்படி நடந்துசுன்னு டாக்டர் கேக்க மாட்டாங்களா?”“கண்டிபப்பா கேப்பாங்க...”“அப்படி கேட்டா என்ன பதில் சொல்றது…?”“ஒரு பொய் தயாராயிருக்கு…”“என்ன பொய்…?”“நாங்க கார்ல வரும் போது ரோட்டோரமா இந்தப் பொண்ணு விழுந்துகிடந்தா… என்னாச்சுன்னு தெரியலை. உடம்பை சோதிச்சுப் பார்த்தோம். உயிர் இருக்கவே கொண்டு வந்துட்டோம்…”ரோட்டின் மேல் வளைவில் ஏதோ ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் தெரிந்து ஹாரன் சத்தம் கேட்டது.“பீங்க்கக்க…’“அண்ணா...! ஏதோ... வாகனம் வந்துட்டிருக்கு. யோசனை பண்ண நேரமில்லை. ஒரு கை பிடி. இவளை காருக்கு கொண்டு போயிடுவோம்…”“நந்தா...! நான் சொல்றதைக் கொஞ்சம்…”“அண்ணா…! வர்ற வாகனம் போலீஸ் ஜீப்பாக்கூட இருக்கலாம்… ம்… சீக்கரம்… இவளைத் தூக்கு…”உத்தம் நந்தாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே கீழே குனிந்து அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கினான். கைகளில் இரத்தம் பிசுபிசுத்தது.
Available since: 02/08/2024.
Print length: 137 pages.

Other books that might interest you

  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Show book
  • Kaatru Kaatru Uyir - cover

    Kaatru Kaatru Uyir

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Saravanan, a bank officer, builds his dream home upon taking loans. One night, a murder happens in his new home and the body is buried there. Next day, during the house-warming ritual, the ghost of the dead person enters Saravanan's body and seeks revenge! Listen to this blood curdling story - Kaatru Kaatru Uyir to know what happens.
    
    சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது. உடல் உயிர் ஆத்மாவின் ரகசியங்களை கூறும் நாவலே காற்று காற்று உயிர்.
    Show book
  • Kadaisi Theekkuchi - cover

    Kadaisi Theekkuchi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு விஞ்ஞானி தனது பயோ டெக்னாலஜி கண்டுபிடிப்புகளை எதிர்கால மனிதசமூகத்தை காப்பாற்றும் நோக்கில் தன் மனைவியுடன் பாதுகாக்க போராடுகிறார். தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களையும், எதிர்பாராத சம்பவங்களையும் இந்த ஜோடி ஒரு கொலையை மறைக்கும்போது எதிர்கொள்கின்றனர்.
    Show book
  • Sivappu Iravu - cover

    Sivappu Iravu

    Anonymous

    • 0
    • 0
    • 0
    ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.
    Show book
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Show book
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Show book