கிழக்கு வெளுத்ததம்மா
ரமணிசந்திரன்
Maison d'édition: Publishdrive
Synopsis
அன்றைய மீட்டிங் தன்னை இவ்வளவு தூரம் பாதித்து விடக்கூடும் என்று எட்டாத கற்பனையில் கூட மீரா எண்ணியிருக்கவில்லை. பாதிப்பை உணர்ந்த பிறகும் கூட அவளால் அதை நம்ப இயலவில்லை.ஆறு ஆண்டுகள்!நீண்ட நெடிய ஆறு ஆண்டுகளாகப் பயின்று வைத்திருந்த அமைதி அப்படிப் பறந்துவிடுமா?எதையோ இழந்துவிட்டாற்போல என்னவோ கிட்டாமல் போனதுபோல நெஞ்சுக் கூட்டினுள் ஏன் இந்தத் தவிப்பு?அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோடக்கூட! உள்ளுர அவளுக்கு அச்சமாக இருந்தது.அச்சமென்ன? அதற்கு அவசியமே இல்லையே என்று வெகு சிரமப்பட்டு ஓர் அலட்சியத்தை வருவித்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது அவளது காண்டஸா, கேட்டின் வழியே வழுக்கிய படி சென்று அவளது வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் முன்னே சென்று நின்றது.சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்து அவள் திரும்புமுன் பணியாளர் ஒருவன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்து விட்டுப் பணிவுடன் ஒருபுறம் ஒதுங்கி நின்றான்.தன் உடைக்குப் பொருத்தமாக எடுத்துச் சென்றிருந்த வெள்ளி நிறக் கைப்பையைக்கூட மறந்து, இயந்திரமாய் இறங்கி வீட்டுப் படியேறினாள மீரா.நேராக அவளது அறைக்குள் சென்று விட்டால், குளிரக் குளிர ஷவரில் குளித்து விட்டால் இந்தக் கொதிப்பு அடங்கி விடுமோ!ஆனால் கொதிப்பா இது?... கொஞ்...சம் கூடக் கோபமே இல்லையே முகத்துக்கு நேராகப் ‘பொய்க் கணக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர்கள்’ என்று அவன் குற்றம் சாட்டும் போது கூட ஆத்திரம் வரவில்லையே.ஆனால் உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இந்த அனலைக் குளிர்விப்பதே நினைவாக மாடிப்பக்கம் திரும்பியவளுக்குத் தன் அறையில் இருந்த ஆள் உயரப் படங்கள் நினைவு வந்தன.அவைகளைப் பார்த்தால் அமைதி திரும்பக் கூடுமோ என்று எண்ணி ஓர் எட்டு எடுத்து வைத்தவள் தயங்கி பக்கவாட்டில் இருந்த ‘ஃப்ரெஞ்ச் லிண்டோ’ வைத் திறந்து கொண்டு இறங்கித் தோட்டத்திற்குச் சென்று மரத்தடிகளில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஆசனங்களுள் ஒன்றில் அமர்ந்தாள்.சீராக வெட்டப்பட்டிருக்கும் பாந்த புல் தரையும், இடை இடையே வட்டப் பாத்திகளில் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகளும் ஆங்காங்கே மரங்களுமாக அந்தப் பரந்த தோட்டம் எப்போதுமே அவளுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது வழக்கம்.இன்று அதுவும் தோற்றது.இத்தனைக்கும் வானம் கொஞ்சம் அதிக நீலமாக, இலைகள் கொஞ்சம் அதிகப் பசுமையாகத் தான் தெரிகிறது. மலர்கள் கூடக் கொஞ்சம் அதிக அழகாகத்தான் பளிச்சிட்டன...ஆனாலும்...“என்ன நடந்தது மருமகளே!”சற்றுத் திகைத்து “ஓ...ஒன்றுமில்லை மாமா.” என்று பணிவுடன் எழுந்தாள் மீரா.“பரவாயில்லை. உட்காரம்மா.” என்று தானும் அமர்ந்து கொண்டார் சேதுபதி.அவள் மீண்டும் அமரும் வரையில் பொறுத்திருந்து விட்டுப் “பின் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார். “வந்து ஒரு காபி கூடக் குடிக்கவில்லை? இங்கேயே கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன்.” என்றார் கரிசனத்துடன்.பாசத்தைப் பொழியும் இவரிடம் என்னவென்று சொல்வது?
