Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கேள்வியின் பதில் என்னவோ? - cover

கேள்வியின் பதில் என்னவோ?

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

“அப்பா! நாம் தர்ம கட்டளை வைத்து நடத்தவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவோ உதவலாம். ஆனால், எந்தத் தொழிலிலும் ஈவு இரக்கம் பார்ப்பது நமக்கே கெடுதலாகத்தான் முடியும். அதிலும் இந்தத் தொழிலில் கொஞ்சங்கூட பார்க்கக் கூடாதுப்பா! பாருங்கள், நாலைந்து கணக்குகளை பல ஆண்டுகளாக தொடவே இல்லை போலிருக்கிறதே! சும்மா மனக் கணக்காய் கூட்டிப் பார்த்தால்கூட சில கோடிகளை எட்டுகிறது!” என்றான் ஜெயநந்தன் குரலில் சிறு அழுத்தத்துடன்.அந்த அழுத்தம் தெரிவித்த அதிருப்தியை உணர்ந்த சாரங்கன் சற்று ஆச்சரியத்துடன் மகனைப் பார்த்தார்.பெற்று வளர்த்து ஆளாக்கியவர். அவன் விரும்பிய கல்வியையும் சிறந்த முறையில் அளித்தவர். எல்லாம் இந்தத் தொழிலில் வந்த வருமானத்தைக் கொண்டுதான்.பிள்ளை படித்து முடித்த பின், எல்லோரையும் போன்ற அனுபவம் வேண்டும், அதனால் வெளியே வேலை செய்யப் போகிறேன் என்றபோதும், அவர் தடுக்கவில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதிரி தந்தையின் கீழ் அடங்கிக் கிடப்பதை விட, மகன் வெளியே போய் உலக அனுபவம் பெறுவது நல்லது என்றே அவரும் கருதினார். அத்தோடு முதலாளியுடைய மகனாகப் பெறும் அனுபவமும் அவ்வளவு சரியானதாக இருக்காதுதானே?அத்தோடு அவரது தொழிலில் அப்போது இரண்டு தலைகளுக்கு இடமோ அவசியமோ இருக்கவுமில்லை.அதுவரை வளர்த்த அவருக்கு, வளர்த்த தொழிலை தான் மட்டுமாகவே நடத்தும் தென்பும் இருந்தது. ஆனால், அது ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக.
 
அப்போது அவரது வயது அறுபதின் பக்கத்தில் கூட வந்திருக்கவில்லை. வெறும் ஐம்பத்தி ஐந்து மட்டுமே. ஆனால், இப்போது ஓர் உடல்நிலைக் கோளாறுக்குப் பிறகு, உழைப்புக்கு ஒரு துணை தேவைப்பட, அதன் பிறகே மகனை அழைத்தார்.மறுக்காமல் உடனே வந்தவன் இப்போது தந்தைக்கே புத்தி சொல்கிறானா?தந்தையின் முகத்தில் வியப்பைக் கண்டு ஜெயநந்தன் லேசாக தலையசைத்தான். “அப்பா! இந்தத் தொழிலை நீங்கள் எப்படித் தொடங்கி எப்படி வளர்த்து எப்படி நம் குடும்பநிலையை உயர்த்தினீர்கள் என்று எனக்குத் தெரியும். அதை நீங்களாக அதிகம் கூறா விட்டாலும், பாட்டியும் அம்மாவும் பலமுறை சொல்லி என் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒன்று சொல்லுங்கள்! நேற்று வரை நன்றாக உண்டோம் என்று இன்றிலிருந்து பட்டினி கிடக்க முடியுமா? அது ஆரோக்கியத்துக்கு நல்லதா? நாம் வளர்த்த உடம்பு போலத்தானே தொழிலும்? உடலாவது நம்முடையது மட்டுமானது. பாதிப்பு நம் ஒருவருக்கு மட்டுமாய் இருக்கும். தொழிலில் எத்தனை போட்டிகள், ஏமாற்றுகள், பொய், திருட்டு... இதையெல்லாம் தாண்டித்தானே வென்றாக வேண்டும்? எத்தனை பேரின் வாழ்வுக்கு வழி செய்யும் நிறுவனம் இது! இப்படியெல்லாம் வளர்த்துவிட்டு இப்போது ஏன் இந்தத் தளர்வு? இயலவில்லை, வா என்றீர்கள். எல்லாம் உதறி வந்து விட்டேன். ஆனால், என் வேலையில் தடை, இடையூறு இருக்கக்கூடாது. சொல்லுங்கள்! இந்தக் கணக்குகளில் என்ன பிரச்சினை?” என்று பேச்சின் தொடர்பை விடாமல் மீண்டும் கேட்டான் மகன்.பொதுவாகவும், மரியாதை கெடாமலே நண்பர்களாகப் பழகி வந்த வழக்கம் அவர்களுக்குள் இருந்தது. எனவே, சாரங்கனும் மகனுக்கு மதிப்புக் கொடுத்துப் பேசினார்.
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 182 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த முதல் ஒலிநூலில் சமுதாயம் என்ற துணைத் தலைப்பில் அவருடைய 35 கவிதைகள்.
    Zum Buch
  • Sirappuranam Nubuvvaththukkantam - cover

    Sirappuranam Nubuvvaththukkantam

    Umaruppulavar

    • 0
    • 0
    • 0
    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். 
    நபிப்பட்டம் பெற்ற படலம்; தொழுகை வந்த வரலாற்றுப் படலம்; தீனிலைக்கண்ட படலம்; உமறுகத்தாபீமான் கொண்ட படலம்; உடும்பு பேசிய படலம்; உத்துபா வந்த படலம்; அபீபு மக்கத்துக்கு வந்த படலம்; மதியையழைப்பித்த படலம்; தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்; அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்; ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்; மானுக்குப் பிணை நின்ற படலம்; ஈத்தங்குலை வரவழைத்த படலம்; ஒப்பெழுதித் தீர்ந்த படலம்; புத்து பேசிய படலம்; பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்; பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்; அத்தாசீமான் கொண்ட படலம்; சின்களீமான் கொண்ட படலம்; காம்மாப் படலம்; விருந்தூட்டுப் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) 20 படலங்கள் உள்ளன.
    Zum Buch
  • Sandhosham - cover

    Sandhosham

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Zum Buch
  • Kadal Purathil - cover

    Kadal Purathil

    Vanna Nilavan

    • 0
    • 0
    • 0
    இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
    மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாக்க் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது.
    Zum Buch
  • Manmadhan Vandhaanadi - cover

    Manmadhan Vandhaanadi

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    திருமண உறவின் மூலம் கிடைக்கும் புதிய சொந்தமான கணவன் அல்லது மனைவி தவறு செய்யும் போது நடுவில் வந்த அந்த உறவை சட்டரீதியாக வெட்டி விடும்வரை கோபம் ஏற்படுகிறது. இந்த கதையின் நாயகி வேறுவிதமாக இதை அணுகுகிறாள்.அவளின் புதிய அணுகுமுறை வென்றதா?
    Zum Buch
  • Moodargalin Sorgam - cover

    Moodargalin Sorgam

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Zum Buch