Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கொலைவிழும் மலர்வனம் - cover

கொலைவிழும் மலர்வனம்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

நித்யா ஆச்சரியமாய் நாகலட்சுமியைப் பார்த்தாள். புன்சிரிப்போடு கேட்டாள்.“ஏன் அத்தை அப்படிச் சொன்னீங்க?”“இந்த சம்பந்தம் எனக்குப் பிடிக்கலை”“உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கிறதா மாமா சொன்னாரே!” ‘‘அவர் பொய் சொல்லியிருக்கார்.”“அவர் ஏன் பொய் சொல்லணும்?”“நித்தி! உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி நான் ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கேன். உன்னோட குணத்துக்கும் அழகுக்கும் இந்த பெங்களூர் மாப்பிள்ளை கட்டுப்படியாக மாட்டான். உங்க மாமா உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு உயிலோட வாசகத்தை நிறைவேத்திடனும்னு நினைக்கிறார். உன்னைத்தேடி ஒரு ராஜகுமாரன் வர்றதுக்குள்ளே ஒரு சிப்பாயைப் பார்த்துக் கட்டி வெக்க ஆசைப்படறார்”நித்யா சிரித்தாள்.“அத்தை! மாமா எனக்கு என்னிக்குமே நல்லதைத்தான் பண்ணுவார். உங்களுக்கு நல்லாவே தெரியும். எனக்கு ரெண்டு வயசோ, மூணு வயசோ இருந்தப்ப அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. கிட்டத்தட்ட அம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை இந்தப் பதினேழு வருஷமா கட்டிக் காத்து ஒரு கார்டியனா இருந்து, ஒரு சல்லிக் காசுக்குக்கூட ஆசைப்படாமே என்கிட்ட மாமா குடுத்திருக்கிறார். இந்தப் பதினேழு வருஷத்துல அவர் நினைச்சிருந்தா என்னை எமாத்தியிருக்க முடியும் ஆனால் அவர் என்னை ஏமாத்தலை. எல்லாகாரியத்துக்குமே அவர் எனக்கு அப்பாவா, நீங்க அம்மாவா இருந்திருக்கீங்க. மாமா எனக்குப் பார்த்திருக்கிற இந்த மாப்பிள்ளை நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. அவர் முடிவு பண்ணிட்டார். நான் கழுத்தை நீட்டப் போறேன்”நாகலட்சுமி ‘உச்’ கொட்டினாள்உன்னோட மாமா மாதிரியே நீயும் அவசரப்படறே நித்தி. இப்போ பார்த்திருக்கிற பெங்களூர் மாப்பிள்ளையைப் பத்தி நான் எந்தக் குறையும் சொல்லத் தயாராயில்லை, என்னோட தம்பி கோபிநாத் பெங்களூர் போய் ஒரு வாரம் இருந்து மாப்பிள்ளையைப் பத்தின. சகல விஷயங்களையும் சேகரிச்சுட்டு வந்திருக்கான். அவனுடைய ரிப்போர்ட்படி மாப்பிள்ளைக்கு நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் தரலாம். இருந்தாலும் என் மனசுக்குப் பிடிக்கலை. இதைக் காட்டிலும் ஒரு நல்ல இடம் வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணு நித்தி”நித்யா பார்வையைக் கீழே தாழ்த்தி ஒரு ரோஜா மோக்கைக் கை விரலால் தடவிக் கொண்டே சொன்னாள். “ஸாரி அத்தை. நான் பெங்களூர் வரப்போறதா மாமாகிட்டே சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் மேலா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...”நாகலட்சுமி நித்யாவின் கன்னத்தை தட்டினாள்.சிரித்தாள்.“ஒகே நித்தி... உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்... உன்கூட பெங்களூர் வரணும்ன்னு எனக்கும் ஆசைதான். ஆனா இந்த நொண்டியாலே வர முடியாது... பங்க்‌ஷனை வீடியோ எடுத்தா கேஸட்டைக் கையோட வாங்கிட்டு வா. போட்டுப் பார்க்கலாம்...”நித்யா நாகலட்சுமியின் மின்சாரம் பாய்ந்து சாம்பல் நிறமாகிப் போன கால்களைக் கழிவிரக்கத்தோடு பார்த்தாள்.நாம கார்லதானே போறோம் அத்தை. வீல்சேரை காரோட டாப் காரியரில் கட்டி பெங்களூர் கொண்டு போயிடலாமே...!”“வேண்டாம் நித்தி... நான் வரலை. ஒரு சுப காரியம் நடக்கறப்போ நான் நாற்காலியை உருட்டிக்கிட்டு அலைஞ்சா அது பார்க்கிறதுக்கு நல்லா இருக்காது. மாமாவே வர வேண்டாம்ன்னு சொல்லிட்டார். சொர்ணம் இருக்கா. என்னைப் பார்த்துக்குவா...”“ஓ.கே… அத்தை நான் குளிச்சுட்டு வந்துடறேன்நித்யா நகர, நாகலட்சுமி மறுபடியும் கூப்பிட்டாள்.“நித்தி”“ம்...”நந்த கோபாலின் மனைவி லட்சுமியும், மகள் ஷோபனாவும் பக்கத்து அறையிலிருந்து ஒன்றாய் வெளிப்பட்டுப் புன்னகைத்துக் கொண்டே நித்யாவின் தோளைப் பற்றினார்கள்
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 93 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Voir livre
  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Voir livre
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre
  • Mattravai Nalliravu 105kku - cover

    Mattravai Nalliravu 105kku

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட
    பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம்
    சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான்.
    அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது.
    அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அதற்கு அடுத்த நாளே, ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கிறது. என்ன செய்வது என புரியாமல் இருப்பவளுக்கு மேலும் அதிர்ச்சி தரக் கூடிய
    சம்பவங்கள் நடைப்பெருகின்றன. சித்ரா அந்த பிரச்சினைகளையெல்லாம் எப்படி
    புத்திசாலித்தனமாய் சமாளித்து வெளிவருகிறாளா இல்லையா என்பது தான் மற்றவை
    நள்ளிரவு 1.05க்கு என்பதின் கதை. அது சரி.., தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன
    சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கேட்டால் புரியும் மர்மம் விலகும்."
    Voir livre
  • May June Julie - cover

    May June Julie

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண் திடிரென்று தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் கணவன் தன் மனைவி தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று நம்புகிறான். துப்பறிவாளர்கள் பரத்-சுசீலா களத்தில் இறங்க, மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
    
    A young woman kills herself. Her husband swears that there is no reason for her to commit suicide. Detectives Bharath and Suseela start investigating and mysterious incidents unfold. To know more listen to May June Julie.
    Voir livre
  • Oru Poi Podhum - cover

    Oru Poi Podhum

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஓரு பிரபலமான இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையில் பல பேர் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சியான முடிவு காத்திருக்கிறது.
    Voir livre