காத்திருக்கிறேன் ராஜகுமாரா
ரமணிசந்திரன்
Verlag: Publishdrive
Beschreibung
அந்தப் பழைய கால அரண்மனையின் அலங்கார மாடிப்படியில் தடதடவென்று இறங்கி வேகமாக ஓடிவந்தாள் அவள். மற்றவர் பார்க்குமுன் சென்று, வாயில் புறத்துத் தூணை தொட்டு விட்டால் அன்று அவளே வென்றவள் ஆவாள்.பின்புறமாய்ப் பார்வையைச் செலுத்தியபடியே விரைந்தோடி இறங்கியவள், மாடிப்படி வளைவில் நிதானமாக ஏறி வந்து கொண்டிருந்த அவன் மேல் நன்றாக மோதிக்கொண்டு விட்டாள்.அவள் ஓடிவந்த வேகத்துக்கு இருவருமே மிச்சப் படிகளை உருண்டுதான் கடந்திருக்க வேண்டும்.ஆனால் அவள் ஓடிவந்த சத்தம் கேட்டு ஏறி வந்தவன் தயாராயிருந்ததால் இருவருமே ரத்த காயமின்றித் தப்பினர்.அப்போதும் கால் தடுமாறியவளின் தோளை அழுந்தப் பற்றி, அவள் விழுந்து விடாமல் நிறுத்தினான் அவன்.மூச்சு வாங்க நின்றவளை ஏற இறங்க நோக்கியவனின் பார்வை கடைசியாக அவளது பூமுகத்தில் வந்து நிலைத்தது.பளீரிட்ட புன்னகையுடன், “என்ன அழகான முக அமைப்பு இன்னும் கொஞ்சம் வளர்ந்து, இன்னும் கொஞ்சம் மெலிந்து மேலே ஓர் ஐந்தாறு வயதேனும் கூடுதலாகவும் ஆகியிருந்தால், இப்போதே என் ராணி என்று அறிந்திருப்பேனே! பரவாயில்லை. அப்படி வளர்ந்த பிறகு வருகிறேன். அப்போது என்னையே மணப்பாயில்லையா, பிரின்சஸ்?” என்று ஆவலாகக் கேட்டவன், குனிந்து, அவளது பிரமித்த இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.அவள் திகைத்து விழிக்கவும், சிரித்து, அவளது குண்டுக் கன்னத்தில் லேசாக வருடி, அவளை வழியிலிருந்து விலக்கி, நிறுத்தி விட்டு மேலே ஏறிச் சென்றான் கனவில் நடப்பது போல எங்கோ வெறித்தபடி நடந்து சென்றாள் மடந்தைப் பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த அந்தச் சிறுமி
