Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கானமழை நீ எனக்கு! - cover

கானமழை நீ எனக்கு!

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

அழகிய மெல்லிய விரல்கள், மடிமீது சாத்தியிருந்த வீணையின் தந்திகளைத் தன் போக்கில் மெல்ல மீட்ட, அதில் எழுந்த இனிய ரீங்காரம் அறையை நிரப்ப, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பாரதி.சிந்தனையில் சுற்றுப்புறம் மறந்து இலக்கற்று வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்த நிலையிலும் மகளின் அழகை ரசித்தவாறு சற்றுநேரம் அறை வாயிலிலேயே நின்றாள் சரஸ்வதி.தம்பூரா போலச் சும்மா மீட்டுவது தவிர, மகளின் மோனநிலை கலைவதாக இல்லை என்று நிச்சயப்பட்டு விடவும் பாரதியின் அருகே சென்று, “என்னடா பாரதி, இன்றைய கச்சேரிக்கு வாசிக்க வேண்டிய எல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டு விட்டாயா? போன வாரக்கச்சேரியில் தோடி வர்ணம் வாசித்தாய், மறக்கவில்லைதானே. இன்றைக்கு... சங்கராபரணத்தில் ‘கருணை செய்...திட... வாசிக்கிறாயா? அடுத்து...” என்றவள் மகள் சும்மா உச்சுக்கொட்டவும் வியந்து, “என்னம்மா?” என்று விசாரித்தாள்.“ஒன்...றுமில்லயம்மா” என்று அலுப்புடன் கூறி வீணையை நகர்த்தி வைத்தாள் பாரதி.“என்னம்மா, சாதகம் செய்யவில்லை?”“என்ன சாதகம் செய்து என்ன, அம்மா? கச்சேரிக்குக் கச்சேரி வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்று கடவுள் வாழ்த்திலிருந்து மங்களம் வரை மாற்றித் திட்டமிட்டு, ஸ்வர சுத்தமாகச் சாதகம் செய்து கஷ்டப்பட்டு வாசிக்கிறோமே, யாராவது முழு ஈடுபாட்டுடன் கேட்கிறார்களா? சபாக்களிலாவது பரவாயில்லை, பத்துக்கு இரண்டு பேராவது ரசித்துக் கேட்கிறார்கள். இந்த மாதிரித் தனியார் நிகழ்ச்சிகள் என்றால் எனக்கு வெறுப்பாக இருக்கிறதம்மா” என்று உரைத்த வண்ணம் வீணையை உறையிலிட்டு, கயிறுகளைக் கவனத்துடன் கட்டினாள் பாரதி
 
பேச்சை நிறுத்தி இதழ்களை இறுக மூடிக் கொண்ட போதும், மகளின் கண்களில் கோபம் குமுறுவதைக் கண்டு “பாரதி, உன்னுடைய கலையே வேறுவிதம். இதே. நாட்டியம் என்றால் கவர்ச்சி என்கிற பெயரில் ஆபாசமாக ஆடலாம். பாட்டில்கூட கண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதற்கேற்ப உடலை ஆட்டிப் பாடலாம். ஆனால் இது... இதில் இதெல்லாம் முடியாது. ஆனால் இது தெய்வீகமான கலை அம்மா. வீணையைப் பார்க்கும் போதே கலைமகளின் நினைவுதானே வருகிறது. மட்டரக ‘கிக்’ வேண்டும் என்பவர்கள் வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யமாட்டார்கள். அதுவும் இவ்வளவு பணம் கொடுத்து தரமான ஓர் இசை விருந்தைத் தானே ரசிக்கும் ஆவலும், தான் ஏற்பாடு செய்யும் விழாவுக்கு வருகிறவர்கள் ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லாதவர்கள் இந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார்களா? சொல்லு. அதனால் ஒட்டு மொத்தமாய் ஒருவரும் ரசிப்பது இல்லை என்று ஒதுக்கக் கூடாதம்மா” என்று இதமான குரலில் எடுத்துரைத்தார் கங்காதரன்.சற்று யோசித்துவிட்டு, “ஒரேயடியாக அப்படியும் சொல்லி விட முடியாது அப்பா. நீங்களே சொன்னது போல வீணையில் பெரிய ‘ஆர்டிஸ்ட்’டின் கச்சேரி வைத்தேன் என்று ஜம்பம் அடிக்கக்கூட என் கச்சேரியை வைக்கலாமே!” என்றாள் பாரதி.மீண்டும் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக் கவனித்த மகள் சட்டென இளகிப் போனாள். அவளுக்கு எப்போதுமே அவளுடைய பெற்றோரிடம் இது பிடிக்கும். எப்போதும் ஒருவருக்கொருவர் இசைந்து நடப்பதும், திடுமெனப் பிரச்சினைகள் எழும்போதும் ஒருவர் முகத்திலிருந்து அவர் கருத்தை அறிந்து அதற்கேற்ப அடுத்தவர் செயல்படுவதும் காண, கவனிக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு சமயம் உடன் பயின்ற தோழிகள், ‘என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரீ...ய்ய சண்டை’ என்று கூறும்போது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்பாவும் அம்மாவும் எப்படிச் சண்டை போடுவார்கள்?வளரவளர, உலக விவரம் புரியத் தொடங்கிய பிறகு பெற்றோரைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தாள். அம்மாவுக்கு அமைந்தது போல ஒத்த கருத்து உடைய கணவன் அவளுக்கும் கிடைத்தால்... என்றோர் எண்ணமும் தோன்றியதுண்டு.
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 92 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • La Sa Ra Sirukathai Thoguppu - cover

    La Sa Ra Sirukathai Thoguppu

    La Sa Ramamirtham

    • 0
    • 0
    • 0
    தமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள், காட்டாற்றைப் போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெதுவாகத் ததும்பும் வரிகள்.. லா.ச.ராவை புரிந்துக்கொள்வது எளிதல்ல. சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும். இவர் கதைகளில் ஊடாடுவது பக்தி, கடவுள் பக்தி, குடும்ப அமைப்பின் மேல் பக்தி, பக்தியின் மேல் பக்தி, தமிழ் கொச்சையில் விளையாடும் அழகின் மேல் பக்தி, துக்கத்தின் மேல், கோபத்தின் மேல், ஏழை மேல், சங்கேதங்களின் மேல்.. ராமாமிருதத்தைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப் பேச லாயக்கில்லை - சுஜாதா
    Zum Buch
  • கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985 - cover

    கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

    கி. கி.ரா

    • 0
    • 0
    • 0
    கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
    1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
    கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
    ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
    இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய 
    சுப்பண்ணா 
    நிலை நிறுத்தல் 
    அவுரி 
    ஒரு செய்தி 
    மொத்தைப் பருத்தி 
    விடுமுறையில் 
    குருபூசை 
    சுற்றுப்புற சுகாதாரம் 
    தாச்சண்யம் 
    இவர்களைப் பிரித்தது 
    உண்மை 
    தாவைப் பார்த்து 
    நாற்காலி 
    என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன‌
    Zum Buch
  • Kamparamayanam Balakantam - cover

    Kamparamayanam Balakantam

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    1            பாலகாண்டம்           24 படலங்கள் 
    1. ஆற்றுப் படலம் 
    2. நாட்டுப் படலம் 
    3. நகரப் படலம் 
    4. அரசியற் படலம் 
    5. திரு அவதாரப் படலம் 
    6. கையடைப் படலம் 
    7. தாடகை வதைப் படலம் 
    8. வேள்விப் படலம் 
    9. அகலிகைப் படலம் 
    10. மிதிலைக் காட்சிப் படலம் 
    11. கைக்கிளைப் படலம் 
    12. வரலாற்றுப் படலம் 
    13. கார்முகப் படலம் 
    14. எழுச்சிப் படலம் 
    15. சந்திரசயிலப் படலம் 
    16. வரைக்காட்சிப் படலம் 
    17. பூக் கொய் படலம் 
    18. நீர் விளையாட்டுப் படலம் 
    19. உண்டாட்டுப் படலம் 
    20. எதிர்கொள் படலம் 
    21. உலாவியற் படலம் 
    22. கோலம் காண் படலம் 
    23. கடிமணப் படலம் 
    24. பரசுராமப் படலம் 
    இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் - கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். நால்வரும் தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர். இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர். மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார். வழியில் கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள். அவளை
    Zum Buch
  • Kundalakeshi Full Story | குண்டலகேசி | நாதகுத்தனார் | Tamil Audio Book - cover

    Kundalakeshi Full Story |...

    Nathakuthanaar

    • 0
    • 0
    • 0
    குண்டலகேசி  தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு. 
    தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
    Zum Buch
  • Kutumpa Vilakku - cover

    Kutumpa Vilakku

    Bharathithasan

    • 0
    • 0
    • 0
    பாரதிதாசன் குடும்ப விளக்கு 
    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்னும் கருத்தை முன்னிறுத்தி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமது குடும்ப விளக்கு நூலினை எழுதியுள்ளார். 
    குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு, பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார். 
    குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கு தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைந்து, இல்லறம் சிறக்கிறது என்கிறார். 
    அதிகாலையில் துயில் எழுவது முதல் தனது கடமைகளைச் செவ்வனே செய்யும் ஒரு பெண்ணாகக் குடும்ப விளக்கின் தலைவியை மிளிரச் செய்துள்ளார். 
    நேர்மையாக வாணிபம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான்.‌ 
    அன்பான பெற்றோர், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வழியாகக் காட்டியுள்ளார். 
    பாரதிதாசனின் குடும்ப விளக்கு வழிநின்று, குடும்பங்கள் சிறப்புற அமையுமானால், இந்தச் சமுதாயம் உயர்வடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    Zum Buch
  • Gomathi - cover

    Gomathi

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Zum Buch