Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
காகித ஆயுதங்கள் and வா அருகில் வா - cover

காகித ஆயுதங்கள் and வா அருகில் வா

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராட்சஸ இரைச்சலோடு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்க – பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.எஸ்-5 கம்பார்ட்மென்ட்டில் இருந்தாள் ஆஷிகா. பர்ப்பிள் நிறத்தில் தொள தொள டி.சர்ட்டும் கறுப்பில் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். தோள்வரை நின்றிருந்த கூந்தல் காற்றில் பறந்தது.ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக் கொண்டவள் - பெரிய சூட்கேஸை வலது கைக்கு கொடுத்து எடுத்துக் கொண்டாள்.ரயில் கம்பார்ட்மெண்ட்கள் ஏர் பிரேக்கின் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே கிறீச்சென்று அலறியபடி இயக்கங்களைப் படிப்படியாய் நிறுத்திக் கொண்டது.வாயிலை அடைத்துக் கொண்டு சக பயணிகள் இறங்க - சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு சிரம மூச்சுடன் கடைசி ஆளாக பிளாட்பாரத்தில் காலை வைத்தாள்.சூழ்ந்த போர்ட்டர்களைத் தவிர்த்துவிட்டு ரோலரின் உதவியுடன் சூட்கேஸை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.சூட்கேஸ் நாய்க்குட்டி மாதிரி விசுவாசமாய் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.எரிச்சலான - ஒரு போர்ட்டர் ஆசாமி மட்டும் விடாமல் அவள் பின்னே வந்தான். அழுக்காய் இருந்தவனின் முகத்தில் முள்முள்ளாய் தாடி. எண்ணெய்ப் பசை இல்லாத பரட்டைத் தலை.அவளோடு இணையாய் நடந்து வந்து கொண்டே சொன்னான்.“பிளாட்பாரம் முடிஞ்சதுன்னா ரோலரை வெச்சு சூட்கேஸை உருட்டிட்டுப் போக முடியாதும்மா...”நான் பார்த்துக்கிறேன்... நீ தொந்தரவு பண்ணாம போயிடு...”“ஸ்டேஷனை விட்டு ஆட்டோ ஸ்டாண்ட் கொஞ்சம் தள்ளி இருக்கும்... அது வரைக்கும் தூக்கிட்டுப் போறதுன்னா கஷ்டம்...”“நான்தான் போர்ட்டர் வேண்டாம்ன்னு சொல்றேனே.”“நான் போர்ட்டர் இல்லையம்மா... அவங்க இந்த லக்கேஜுக்கு பத்து ரூபா கேப்பாங்க. நீங்க எனக்கு அஞ்சு ரூபா தந்தா போதும். சாப்பிட்டு நாலு நாளாச்சு...”மூச்சு வாங்க நடந்து கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆஷிகா.நெற்றியில் ஒரு வெட்டுக் காயத் தழும்பு... கண்களில் நிரந்தரமாத் தேங்கியிருந்த சிவப்பு... அவன் வாய் திறந்து பேசும்போதெல்லாம் குமட்டலாய் வீசும் சாராய நாற்றம்...அவன் தோற்றம் அவளுக்குள் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை. சற்றே ஒதுங்கி நடந்து கொண்டே கொஞ்சம் இறுக்கமான குரலில் சொன்னாள்.“நீ இப்ப அந்தப் பக்கம் போறியா இல்லையா...?”அவள் சற்றே குரலை உயர்த்தியதும் - திடீரென்று அவன் முகத்தில் இருந்த கெஞ்சல்தனம் காணாமல் போனது.“நான் போறேண்டி… நியாயமா கேட்டா நீங்க தர மாட்டீங்க…”கோபமாய் கத்தியவன் - வெடுக்கென்று அவள் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேகை வேகமாய் இழுத்தான்.ஆஷிகா தடுமாறி அவனை அதிர்ச்சியாய்ப் பார்க்கிற போதே பேகின் வார் அறுந்து அவன் கைக்குப் போனது.அவன் ஒடத் துவங்கினான்.“பிடிங்க... பிடிங்க... திருடன்... திருடன்...”முன்னால் போய்க் கொண்டிருந்த நபர்களைத் பார்த்துக் கத்தினாள் ஆஷிகா.அவன் ஒரு கையால் கத்தியைக் காட்டிக் கொண்டே ஓட ஸ்டேஷனில் இருந்த எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.“யாரை நம்பியும் பிரயோசனம் இல்லை” ஒரு முடிவுக்கு வந்தவளாய்சூட்கேஸை அருகிலிருந்த பத்திரிகை ஸ்டால் ஆளிடம் தந்துவிட்டு அவனைத் துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் ஆஷிகா.ஐந்து நிமிஷ ராட்சஸ ஒட்டம்...சாலையின் கூட்டமான பகுதியை நெருங்கிய போது அவனுடைய வேகம் தடை பட - ஆஷிகா தன் மின்னல் ஓட்டத்தில் அவனை எட்டிப் பிடித்து அவன் சார்ட் காலரைக் கொத்தாய் பற்றினாள்.“நில்லுடா”அவன் பளபளக்கிற கத்தியை அவளுக்கு எதிரே நீட்டினாள்.“என்னை விடு! இல்லைன்னா சொருகிடுவேன்…”அவனுடைய மிரட்டலை அலட்சியப்படுத்திய ஆஷிகா மின்னல் வேகத்தில் காலை உயர்த்தி அவன் கையிலிருந்த கத்தியைத் தட்டி விட்டாள்.அது “டிங் டிணார்” என்ற சப்தத்தோடு ப்ளாட்பாரத்தில் விழுந்து கொண்டிருக்க - ஆஷிகாவின் அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தடுமாறி நின்றிருந்த அவனுடைய வயிற்றுப் பிரதேசத்தில் எட்டி உதைத்தாள்.“த்த்த்த்ட்ட்ட்ட்”அவன் நிலை குலைந்து விழுந்தான்.கும்பல் இப்போது பக்கத்தில் வர ஆஷிகா சீறினாள்.
Available since: 02/08/2024.
Print length: 106 pages.

Other books that might interest you

  • Ini Minmini - cover

    Ini Minmini

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The story starts with petition submitted at the Kovai Collector Office. What is the link between this incident and the mysterious inhabitants of a palace in NewYork? Protagonist Minmini is involved in all this. Why? Listen to Ini Minmini.
    
    கோயம்புத்தூரையும், நியூயார்க்கையும் இணைக்கிற ஒரு கதைக்களம்தான் இந்த நாவல். கோவை கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வரும் நபரிடம் ஆரம்பமாகும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம், நியூயார்க்கில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் வாழந்து கொண்டு இருக்கும் மர்மமான நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறது. இதில் கதையின் நாயகியான மின்மினியின் பங்கு என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியும்போது நமக்கு கிடைப்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
    Show book
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Show book
  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Anonymous

    • 0
    • 0
    • 0
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன் வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Show book
  • Moodu Pani Nilavu - cover

    Moodu Pani Nilavu

    Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    மதிப்பும் மரியாதையும் பணச்செழிப்பும் நிறைந்த குடும்பத்தின் ஒரே மருமகள் யமுனா. பொறுப்பாகவும் அன்பாகவும் தன் புகுந்த வீட்டில் வாழும் யமுனாவின் மேல் ஒரு கொலை பழி சுமத்த படுகிறது. நிழலாய் தொடரும் சங்கடங்களை அவள் எப்படி சமாளிக்கிறாள்? தெரிந்து கொள்ள கேளுங்கள் - மூடு பனி நிலவு
    Show book
  • Uyirin Marupakkam - cover

    Uyirin Marupakkam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Where is the soul in your body? How does it leave the body when someone's dead? Only mystics know! A mystic returns after his death. A journalist who investigates this story. A very different yet intriguing story. Listen to Uyirin Marupakkam.
    
    உடம்பில் உயிர் எந்த பாகத்தில் இருக்கிறது? அது எப்படி வெளியேறுகிறது? இந்த கேள்விகளுக்கு சித்தர்களை தவிர யாருக்கும் விடை தெரியாது. இறந்தபின் திரும்ப உயிரோடு வரும் ஒரு சித்த சன்யாசி. அது எப்படி என்று ஆராயும் பத்திரிகையாளன். வித்தியாசமான களம், விறுவிறுப்பான போக்கு.
    Show book
  • Sivappu Iravu - cover

    Sivappu Iravu

    Anonymous

    • 0
    • 0
    • 0
    ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.
    Show book