Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஜோடிப் புறாக்கள் - cover

ஜோடிப் புறாக்கள்

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

அன்புத் தோழி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வெளியேறிய கவிதா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.உடல் தன் போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. உறுதியாகத் தெரிந்துவிட்ட உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினாள்.“உயிரே நீதான்” என்று சொன்னவன் மாறி விட்டானே!‘வண்ண மலரே’ என்று கொஞ்சியவன் வண்டாகிவிட்டானா?இது உண்மைதானா? எப்படி இருக்க முடியும்? அவளால் நம்ப முடியவில்லை.மின்னாமல் வீழ்ந்த இடிபோல் எண்ணாமல் நேர்ந்த துன்பத்தின் சுமைதாளாமல் தவித்தாள்; தடுமாறினாள். அதுமட்டும் நடுத்தெருவாக இல்லாமல் வீடாக இருந்தால், ‘ஓ’ வென்று கதறியிருப்பாள்.சற்று நின்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டாள்.அதற்குள் சரவணனுடைய சிரித்த முகம் மனதில் எழுந்தது. உள்ளத்தில் கள்ளங்கபடு உள்ளவன் முகமா அது? இல்லவே இல்லை என்று சத்தியம்கூடச் செய்வாள் கவிதா. ஆனால் கண்ணெதிரே அவன் நடந்து கொள்ளும் விதம், அவன் கள்ளமனம் படைத்தவன்தான் என்பதைப் பறை சாற்றியது. மஞ்சுளா தெள்ளத் தெளிவாய்க் கண்டுவிட்டு அல்லவா சொன்னாள்? அவள் சொன்னதில் ஐயத்துக்கு இடம் இல்லையே...“சரவணன், உங்களை நல்லவர் என்று நம்பினேன் கடைசியில் இப்படி மோசம் செய்கிறீர்களே” அவள் இதயம் விம்மியது.‘வெளித்தோற்றத்தைக் கொண்டு ஒருவரை எடை போடாதே’ என்று யார் சொல்லியிருப்பார்கள்? யாரோ நம்போல அனுபவித்தவர்கள்தாம் சொல்லியிருப்பார்கள். ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று நம்மைஎச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். நாம்தான் என்னவோ நம்மை மிஞ்சிய மூளையில்லை என்று முட்டாள்தனமாக நடந்து கொண்டு பிறகு மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்று நொந்து கொண்டாள்.சரவணன் நல்லவன்! ஒருநாளும் சொல் மாறமாட்டான் என்று கவிதா நம்பிக்கையோடு நினைத்து இருந்தாள். அவனுடைய சீரிய பண்பும், நேரிய நோக்கும் அமைதியான போக்கும் அமரிக்கையான நடவடிக்கையும் அத்தகைய எண்ணங்களை அவள் மனதில் எழுப்பி இருந்தன.கூடவே சரவணனுடைய தூரத்து உறவினன் கோபாலின் நினைவு வந்தது. சில நேரம் சரவணனோடு அவன் வருவான்.அவனுடைய தொங்கு மீசையும், ஓயாத சிகரெட்டால் கறுத்த உதடுகளும், சதா பெண் முகம் நாடி அலையும் கண்களும், மட்டரகச் சிரிப்பும், சே சரவணனே, “அவன் பெண்களிடமும் பழக அருகதை உள்ளவன் அல்ல. நான் இல்லாத நேரம் வந்தால் வெட்டி விடுங்கள்” என்று எச்சரித்திருந்தான். அப்படி எல்லாம் அடுத்தவனைப்பற்றி எச்சரிக்கை செய்தவன், இப்போது அவனைப் போலவே நடந்துவிட்டான். இது எப்படி சாத்தியமாயிற்று?நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. பஸ் நிற்குமிடம் வந்தாயிற்று. எந்திரம்போல் பஸ்சுக்காக வரிசையில் நின்றாள். ஆனால் நம்ப வைத்து மோசம் செய்தவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து மனதை அகற்ற முடியவில்லை. சே... துரோகி.“என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார், வரிசையில் அவள் முன்னே நின்ற ஒருவர்.எண்ணியதோடு மட்டுமின்றி வாய்விட்டுச் சொல்லியும் விட்டோம் என்பதை அறிந்ததும் அவமானமாகிவிட்டது. அவளுக்கு. ‘ஒன்றுமில்லை’ என்று சமாளித்தாள். குனிந்து தன் தங்க நிற மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். அலுவலகத்திற்கு இன்னமும் நேரம் இருந்தது. இங்கே நிற்பதைவிட அடுத்த ‘ஸ்டாப்’ வரை நடக்கலாம் என்று நினைத்தாள். நடந்தால் நெஞ்சில் சுமை சற்றுக் குறையும் என்று தோன்றவே நடக்கத் தொடங்கினாள்.
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 188 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kanthapuranam Urpaththikantam - cover

    Kanthapuranam Urpaththikantam

    Kachiyappa Kachiyappasivachariyar

    • 0
    • 0
    • 0
    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். 
    பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். 
    கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.[1] 
    உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 135 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது. 
    ramaniaudiobooks.comக்காக முனைவர் ரமணியின் குரலில் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆறு ஒலி நூல்களாக வெளிவருக
    Voir livre
  • Hymns from 11th Thirumurai - cover

    Hymns from 11th Thirumurai

    ...

    • 0
    • 0
    • 0
    இளம்பெருமானடிகள் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் நூலின் ஆசிரியர். இவரது ஆசிரியப்பாக்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன. வெண்பாச் செய்தி அகத்திணையின் வரும் கைக்கிளைப் பாடல்களாக உள்ளது. கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. இவற்றில் சங்க காலத் தமிழ்ச்சொற்கள் பெரிதும் பேணப்பட்டுள்ளன. எனினும் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியப் பாங்கு தேவாரக் காலத்துக்குப் பிந்தியது. எனவே இவரது காலத்தை கி. பி. எட்டாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணிக்கின்றனர். 
    அதிராவடிகள் (அதிரா அடிகள்) என்னும் புலவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது. எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன. ஆனைமுகன் பற்றிய கற்பனைக் கதைகள் தழுவப்பட்டுள்ளன. இளம்பெருமான் அடிகள் இவர் வாழ்ந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர். என்றாலும் அவரது கைக்கிளைத் திணைப் பொருள் பாணி அதிராவடிகள் பாடல்களில் காணப்படவில்லை. 
    பதினோராம் திருமுறையில் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் 5 நூல்கள் பட்டினத்து அடிகளால் பாடப்பட்டவை. பட்டினத்தார், பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள் என்னும் பெயராலும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவரது புகார்ப்பட்டினம் பெரிய பட்டணம் ஆதலால் இவரைப் 'பட்டணத்தார்' எனவும் வழங்குகின்றனர்.
    Voir livre
  • Thiruvilaiyatarpuranam Thiruvalavaykantam - cover

    Thiruvilaiyatarpuranam...

    Paranjothimunivar

    • 0
    • 0
    • 0
    திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. 
    பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. 
    மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. 
    ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-ஆவது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது. 
    திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
    மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள் 
    முதல் பகுதியான மதுரைக் காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்களைக் கொண்டுள்ளது. அடுத்த கூடற் காண்டம் நான்மாடக் கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான 30 படலங்களையும், மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாயான படலம் ம
    Voir livre
  • Kapilathevarnayanar Hymns - cover

    Kapilathevarnayanar Hymns

    Kapilathevanayanar

    • 0
    • 0
    • 0
    பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் கபிலதேவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். 
    விநாயகர் வழிபாடு 
    விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால் மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர் சிலர். மேலும் இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
    Voir livre
  • கனாளன் - நம் கனவுகளை அழகுபடுத்தும் ஒரு ராஜ்ஜியத்தின் கதை - cover

    கனாளன் - நம் கனவுகளை...

    Novah Rozary

    • 0
    • 0
    • 0
    கனாளன் (Kanaalan) –எழுத்தாளர் : நோவா றொசாரி 
    முதல் அத்தியாயம்: முதற்கனா 
    நாயகன் ரமணன் ஒரு தெருவில் பயத்துடன் ஓடுகிறான், யாரோ துரத்துவது போன்ற உணர்வுடன். இந்த ஓட்டத்திற்கான காரணம், அவனது விசித்திரமான கனவில் உள்ளது. 
    கனவில், ரமணன் பலருக்கு உதவும் ஒரு அமைதியான காட்சியைக் காண்கிறான், அது திடீரென ஒரு ராஜாவுக்கும் கொடூர அரக்கனுக்கும் இடையேயான வாள் சண்டையாக மாறுகிறது. சண்டையின்போது, அரக்கனிடம் சிக்காமல் இருக்க, ராஜா தன் கழுத்திலிருந்த மின்னும் பதக்கம் ஒன்றை ரமணனை நோக்கிக் கீழே வீசுகிறார். ரமணன் அதைப் பிடிக்கும் அடுத்த கணமே, ராஜா ஆற்றில் வீழ்த்தப்படுகிறார். பதக்கத்தைத் தேட சிப்பாய்கள் வர, ரமணன் பயந்து ஓடுகிறான். எப்படி இறுதியில் தப்பித்து கொள்கிறான் என்பதே கதை.
    Voir livre
  • Valayapathi Full - வளையாபதி - Tamil Audio Book - cover

    Valayapathi Full - வளையாபதி -...

    Unknown

    • 0
    • 0
    • 0
    தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. 
    கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துகளை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
    Voir livre