Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
இரும்பு கனவுகள் - cover

இரும்பு கனவுகள்

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

நான் வாசலை விட்டு இறங்கும் போதே -பூக்காரி எதிர்ப்பட்டாள். இடுப்பில் இருத்திக்கொண்ட கூடையில் - சம்பங்கியும் ரோஜாவும் மலர்ந்தது. பழக்க தோஷத்தால் என்னைப் பார்த்து சிரித்தாள். வெற்றிலைக்காவி பற்களைக் காட்டி கேட்டாள்.“என்னம்மா வேலைக்கு கிளம்பிட்டீங்களா?”“ம்...”“பூ... வேணுமா தாயீ...?”“வேண்டாம்...தலையில இருக்கே...?”“அது மல்லி தானே... ரெண்டு சம்பங்கியையும் சொருகு...”“நீ விடமாட்டியே...?”மணக்கிற சம்பங்கியும், ரோஜாவும்…. என் தலையில் ஏறிக் கொண்டது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை டம்பப் பையிலிருந்து எடுத்து அவளுடையகையில் திணித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி போனேன். இந்தப் பூக்காரி எனக்கு இரண்டு வருஷமாய் பழக்கம். வாரத்தில் மூன்று நாளாவது நான் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் போது எதிர்ப்பட்டு விடுவாள். என் தலையில் பூ இருந்தாலும் என்னிடம் போணி பண்ணாமல் நகர மாட்டாள்.இரண்டு நிமிஷ நடையில் பஸ் ஸ்டாப் வந்தது. கூட்டம் அதிகம் இல்லை. ஹிண்டு பேப்பரோடு ஒரு பெரியவர். காய்கறிகூடையோடு ஒரு கிழவி. கல்லூரி மாணவர்கள் போல தோற்றம் காட்டிய இரண்டு இளைஞர்கள். பஸ் ஷெல்டரின் பக்கவாட்டில் ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த போவதாக புதிதாக ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சொல்லியது. போஸ்டரில் தேவையே இல்லாமல் ஒரு நடிகையின் படம்.நான் போய் ஷெல்டர்க்கு கீழேநின்றேன். மணிக்கட்டில் நேரம் பார்க்க 9.20. பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. டிபன் ஃபாக்ஸ் இருந்த பைக்குள் ‘மனோசக்தி’ இதழ் இருப்பது ஞாபகத்துக்கு வரவே -, அதை எடுத்துக் கொண்டு பக்கங்களை புரட்டினேன்.ஒரு நிமிணம் கரைந்திருந்த போது - எனக்கு முன்பாய் ஏதோ வாகனம் ஒன்று வந்து நிற்க கலைந்தேன். நிமிர்ந்தேன்.‘சென்னை தூர்தர்ஷன்’ என்று ஆங்கிலத்திலும் இந்திலும் எழுதப்பட்ட வாசகங்களோடு ஒரு வேன்.நான்கைந்து பேர் இறங்கினார்கள். இரண்டு பேர்களின் கைகளில் காமிரா. ஒருவர் உருண்டை மைக்கோடு என்னை நெருங்கினார். ,“எக்ஸ்க்யூஸ் மீ...! நீ ங்க காலேஜ் ஸ்டூடண்டா...? இல்லை வேலைக்கு போகிற பெண்ணா...?”“வேலைக்கு போயிட்டிருக்கேன்.”“எங்கே...?”“தமிழ்நாடு டூரிஸம் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில்...”“என்ன வேலை...”“டெஸிக்னேஷன் கைடு...”“நீங்க மிஸ்ஸா... மிஸஸா...?”“மிஸ்… “நாங்க சென்னை தூர்தர்ஷன்... நேத்து வெளியான பட்ஜெட்டைப் பத்தி பொது மக்களோடகருத்தை திரட்டிட்டி வர்றோம்... நீங்களும் பட்ஜெட்டை பத்தி கமெண்ட் பண்ணனும்... இந்த பட்ஜெட்டைப் பத்தி என்ன நினைக்கறீங்க...?”நான் புன்னகைத்தேன்.‘‘என்னோட கமெண்ட் எப்படி இருந்தாலும் அதை அப்படியே டி.வி.யில் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா...?’’“பண்ணுவோம்...’’“இந்த இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படி நம்பிக்கையில்லையோ... அதேமாதிரி பட்ஜெட்டில் சொல்லப்படுகிற திட்டங்களிலும் அவங்களுக்கு நம்பிக்கையில்லை. – போடுகிறவரிகளையெல்லாம் முன்னாலேயே போட்டுவிட்டு அப்புறமும் எதுக்காக தனியா பட்ஜெட்…”“அப்படீன்னா… வரியே விதிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?’’“வரி விதிக்கலாம்... ஆனா... அந்த வரி விதிப்பு மக்களை இம்சைப்படுத்தாமே இருக்கணும்... பூவுக்கு வலிக்காமல் பூவை சேதப்படுத்தாமல் வண்டுதேன் எடுக்குமே... அந்த மாதிரி இருக்க வேண்டும்... ஆனா இப்போது போடப்படுகிற பட்ஜெட்டுக்கள் செடிகளின் ஆணி வேரையே ஹதம் பண்ணுகின்றன...”“இப்போது இருக்கிற நிதி அமைச்சரைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்...?”“அவர் தன்னை கெட்டிக்காரர் மாதிரி காட்டிக்கொள்கிறார். அவ்வளவுதான்...”“முடிவாக பட்ஜெட்டைப் பத்தி...?”“ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் சந்தோஷப்படுகிற மாதிரி என்றைக்கு ஒரு பட்ஜெட் வருகிறதோ... அன்னைக்குத்தான் உண்மையான பட்ஜெட்...”நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - தூரத்தில் பஸ்ஸின் முகம் தெரிந்தது. நான் போக வேண்டிய பஸ்
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 78 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Zum Buch
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Zum Buch
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Zum Buch
  • I am Tired - ஐ யம் டயர்ட் - துப்பறியும் நாவல் - cover

    I am Tired - ஐ யம் டயர்ட் -...

    Kavani

    • 0
    • 0
    • 0
    I am tired - ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத் திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!  
     - ஆசிரியர் - கவாணி  
    Zum Buch
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Zum Buch
  • Jadi Maleya Ratri - cover

    Jadi Maleya Ratri

    Yandamoori Veerendranath

    • 0
    • 0
    • 0
    ಬದುಕು ಇಂಡೆಕ್ಸ್ ಇಲ್ಲದ ರಟ್ಟಿನ ಪುಸ್ತಕ. ಎಚ್ರಿಕೆಯಿಂದ ಹುಡಿಕಿದರೆ ನಮಗೆ ಬೇಕಾದ ಪದಗಳು ಬೇರೆ ಬೇರೆ ಪುಟದಲ್ಲಿ ಸಿಗದೇ ಇರಲಾರವು! ನಾವು ಮಾಡಬೇಕಾಗಿದ್ದು ಅವುಗಳನ್ನು ಸಮನ್ವಯ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಮಾತ್ರವೇ...
    Zum Buch