Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
என்னை யாரென்று எண்ணி - cover

என்னை யாரென்று எண்ணி

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

கைகளை உயர்த்தி, மேலே கோர்த்துச் சோம்பல் முறித்தான், சத்யசீலன்.அலுவலக வேலை முடிந்தது. இனி, அத்தையைப் போய்ப் பார்க்க வேண்டும். போனால் எதற்காகவாவது, ஙை, ஙை என்பார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் அறுப்பார்கள். இன்று அதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த சந்திப்பை, ஏற்கனவே, அவன், ஒருவாரம் தள்ளிப் போட்டுவிட்டான். அதுவும், ‘உடனே வா’ காமேசுவரி - அத்தை தான், உத்தரவிட்ட பிறகும்!காத்துக்கொண்டிருந்தாற்போல, சத்யசீலன், ‘பஸ்ஸ’ரை அழுத்திய மறுகணமே, ஆஃபீஸ் பையன் ரத்தினம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே தலையை நீட்டினான்.முதலாளியின் கண் குறிப்பை ஏற்று, மேஜை மீதிருந்த சிறு கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய்க் காரில் வைத்தான்.சலாம் அடித்துவிட்டு, அவன் கிளம்ப, ‘செக்யூரிட்டி’ ஆட்களிடம் ஒரு தலையசைப்புடன், சத்யசீலன் காரை எடுத்தான்.காமேசுவரியின் வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு. இறங்கி, வீட்டினுள் செல்லும்போது அவன் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை அரும்பியது;எப்போதுமே, இங்கு வரும்போதெல்லாமே, அவனுக்கு இதே உணர்வுதான் உண்டாகும்.ஏளனமும் கூடவே ஓர் இரக்கமும்.பித்தளைப் பூண்களும் பிடிகளுமாக எட்டடி உயரவெளிக் கதவுகளும், காரோடும் பாதையில் நூற்றுக்கணக்கான விலைஉயர்ந்த செடிகளுடன் கூடிய தொட்டிகள், தொட்டிகளும் விலை உயர்ந்தவையே, தரையில் பாவப்பட்டிருந்த அறுகோண வடிவச் செங்கல்கள், கொத்து விளக்குகள், இவை தாண்டி, உள்ளேசென்றால், சலவைக்கல் தரையும், காஷ்மீர்க் கம்பளமும், பெரிய பெரிய சரவிளக்குகளும், பளபளக்கும் உலோகச்சிலைகளும்...எதற்கு இந்தப் படாடோபம்?அத்தை பணக்காரிதான். இல்லையென்று சொல்ல முடியாதுதான்! ஆனால், இந்த அளவுக்குப் பெரும் பணக்காரி அல்லவே! கோடீசுவரியே, ஆனால், பெரும் கோடீசுவரி அல்ல.இந்தப் பெரும் கோடீசுவரித் தோற்றத்தைக் காப்பாற்றுவதற்காக காமேசுவரி அத்தை, செய்யவேண்டிய செய்து கொண்டிருக்கும் செலவை நினைக்கையில், சத்யனுக்கு உள்ளூர் ஆத்திரம் வரும். கூடவே, என்ன அசட்டுத்தனம் என்று பரிதாபமாகவும் இருக்கும்.அநாவசியம். இந்தப்பகட்டு இல்லையென்றால், இவளை யாரும் மதிக்கமாட்டார்களாமா?அல்லது, இந்த ஆடம்பரத்தில் மட்டுமே மயங்கி எந்தப் பெரிய பணக்காரனாவது. சுந்தருக்குத் தன் பெண்ணைக் கொடுத்து விடுவான் என்கிற எண்ணமா?அத்தையின் முக்கிய காரணம், இரண்டாவதுதான் என்பது, சத்யசீலனின் ஊகம்.அது, சரியே என்றது. அவன் அத்தையோடு அன்று, அவன் நடத்திய பேச்சு. அவனைக் கண்டதும், ஓடிவந்து நின்ற பணியாளரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அத்தையின் வரவுக்காக, ஹாலில் காத்திருக்க - அதுதான், அந்த வீட்டு வழக்கம் என்றாலும், அப்படிக் காத்திருக்க அவனுக்கு மனமில்லை.ஹாலில் அமர்ந்துகொண்டு, வேலையாளிடம் சொல்லியனுப்பினால், சந்தோஷம் போல, உடனேயோ, அன்றி, சற்றுத் தாமதமாகவோ காமேசுவரி, அங்கு வந்து தரிசனம் தருவாள்.பொதுவாக, அத்தையின் விருப்பப்படி, இந்த மாதிரியான அவள் வீட்டுச் சம்பிரதாயங்களுக்கு, சத்யனும் மதிப்புக் கொடுப்பது உண்டுதான்.ஆனால் இன்று, காமேசுவரியின் வருகையை எதிர்பார்த்து, உட்கார்ந்திருக்க, அவனுக்கு விருப்பமில்லை. முக்கியமாக, - அப்படிக் காத்திருக்கும் பொறுமை இன்று அவனுக்கு இல்லை எனலாம்
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 156 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • திருப்புகழ் - திருக்காளத்தி சிதம்பரம் - cover

    திருப்புகழ் - திருக்காளத்தி...

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் ஆறாம் தொகுதியாக 446 முதல் 515 வரையிலான 69 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் திருக்காளத்தி, சிதம்பரம் தலங்களில் பாடப்பட்டவை.
    Voir livre
  • Yatha Kasthyancha Kasthyancha - cover

    Yatha Kasthyancha Kasthyancha

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Voir livre
  • Natpu - cover

    Natpu

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Voir livre
  • Ettam Thirumurai Thirukkovaiyar - cover

    Ettam Thirumurai Thirukkovaiyar

    Manikkavasakar

    • 0
    • 0
    • 0
    திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதைத் திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். 
    இந்நூல் 400 பாடல்களை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இஃது இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பரத்தையிற் பிரிவு ஈறாக 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்திரிக்கப் பட்டுள்ளனர்.
    Voir livre
  • Suyasarithai - cover

    Suyasarithai

    Va Vu Chithamparampillai

    • 0
    • 0
    • 0
    "கப்பலோட்டிய தமிழன்" வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர். 
    அவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம். 
    நூல்கள் 
    வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை 
    சுயசரிதை-1946 
    இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.
    Voir livre
  • Oru Naal - cover

    Oru Naal

    Ka Naa Subramaniam

    • 0
    • 0
    • 0
    Recommended by Author Jeyamohan as one of the Top 100 novels in Tamil, this story narrates one day from the life of Major Murthy who has come to visit his maternal uncle in a small village. Philosophical and deep thoughts are embedded in a simple story. 
    மேஜர் மூர்த்தியின் வாழ்க்கைச்சுவடியிலிருந்து ஒரு நாளை அழகாய் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார் க. நா. சு இந்த நாவலில். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையத்தளத்தில் தமிழில் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்.
    Voir livre