சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
ரமணிசந்திரன்
Maison d'édition: Pocket Books
Synopsis
டெல்லி.பிரதமரின் இல்லம், உதவியாளர், கனோஜ் நேஷனல் செக்யூரிடி ஃபோர்ஸ் அதிகாரி ஃப்ரெட்ரிக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.“இன்னர்லிங் செக்யூரிடி ஃபோர்ஸில் இருக்கிற ஆறு பேரை இன்றைக்கு. ராத்திரி மாற்ற வேண்டும்இல்லையா...?”“ஆமாம்...”“ட்யூட்டியை யார் யார்க்கு மாற்றுகிறீர்கள்...?”“தன் சர்ட் பாக்கெட்டில் இருந்த - காலிகோ பைண்ட் செய்யப்பட்ட சிறிய டயரியை எடுத்து - பெயர்களைப்படித்தார் ஃப்ரெட்ரிக்.“சில்வா, மஜீம்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், - சித்திக்...”“மிஸ்டர் ஃப்ரெட்ரிக்! தற்போதைய அரசியல் நிலைமையம், நாட்டின் நிலைமையும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்... பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னும் ஒரு மூன்று மாத காலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னம் ஒரு முன்று மாதகாலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கு தேவைப்படும்... இந்த காலகட்டத்தில்... அறிமுகம் இல்லாத அந்நிய ஆட்கள் யார்க்கும்…... பிரதமரின் இல்லத்திற்குள் நுழைய அனுமதி யில்லை... விசேஷ க்ரீன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பிரதமரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்... க்ரீன் கார்டுகள்மொத்தம் ஐந்து பேர்க்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன... அவர்கள் - யார் யார் என்பதை அடுத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.”ஃப்ரெட்ரிக் தலையாட்டினார்.உதவியாளர் கனோஜ் தொடர்ந்தார். இன்னர் லிங்க் செக்யூரிடியில் அடுத்த ஒருவார காலம் பணிபுரியப்போகும் அந்த ஆறுபேர்களையும் நான் இப்பொழுது பார்த்து பேச வேண்டும். முடியுமா...?”““முடியும். செக்யூரிடி க்வார்ட்ர்ஸில் தற்போது... ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் வரவழைக்கட்டுமா?”“வரவழையுங்கள்...!“ஃப்ரெட்ரிக் அருகே இருந்த செக்யூரிடி ஸெல்லுக்குள் நுழைந்து க்வார்ட்டர்ஸை தொடர்பு கொண்டு விபரம் சொல்லிவிட்டு - வெளியே வந்தார்.அடுத்த பத்தாவது நிமிடம்சில்வா, மஜும்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், சித்திக் - ஆறு பேரும் பாட்டில் பச்சை யூனிஃபார்ம்களில்பூட்ஸ் சத்தங்களோடு வந்து நட்டு வைத்த - கத்திகள் மாதிரி நின்றார்கள்பிரதமரின் உதவியாளர் கனோஜ் அவர்களை ஏறிட்டார். “இன்னர்லிங்க் செக்யூரிடி கார்டஸாக நீங்கள் ஆறுபேரும் பிரதமரின் குடும்பத்தை பாதுகாக்கப் போகிறீர்கள். ரிக்கார்ட்ஸ்படி உங்களுடைய ஆறுபேரின் திறமைகள் எனக்குத் தெரியும். ஒரு நெருப்பு வளையம் போல் இருந்து - நீங்கள் செயல்படவேண்டும்.“எஸ்... ஸார்...”“நாட்டில் தற்போது இனக்கலவரங்கள் அதிகம். பழைய கோயில் களை புதுக் கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மதத் தலைவர்கள் இதனால் சில அரசியல் தலைவர்களின் மேல்... ஜனங்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களிடையே சிலர் தீவிரவாதிகளாக மாறி - ஆங்காங்கே இனக்கொலைகளைசெய்து வருகிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை... நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...”கனோஜ் சொல்லி முடித்ததும் - ஆறு பேரும் அட்டென்ஷனுக்கு வந்து - இடுப்பிலிருந்த வளைவான கத்திகளை உருவிக் கொண்டு மண்டியிட்டார்கள். “இந்த தேசம் எங்களுக்கு பெரிது. இந்த நாட்டில் தலைவர் எங்களுக்கு முக்கியமானவர். அவரையும் அவருடைய குடும்பத்தையும் - எங்கள் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை காப்போம், இந்த தேசத்திற்காக எங்களை அர்ப்பணிப்போம்...”“ஸெக்யூரிடி ஸெல்லுக்குள் டெலிபோன் கிணுகிணுத்தது
