Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
சின்னஞ் சிறு கிலியே! - cover

சின்னஞ் சிறு கிலியே!

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

டாக்டர் தாராசந்திரிகா கடைசி நோயாளியைப் பார்த்து வாஷ்பேசினில் கைகளை லிக்விட் சோப்பால் கழுவிக் கொண்டிருந்தபோது நர்ஸ் எட்டிப் பார்த்தாள்.“டாக்டர்...’’“என்ன...?’’“உங்களைப் பார்க்க சுவர்ணான்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க... ஏதோ பர்சனலா பேசணுமாம்...’’“சுவர்ணா...?’’“ஆமா டாக்டர்...”“வயசு எவ்வளவு இருக்கும்...?”“முப்பது இருக்கலாம்... பெரிய இடத்து பொண்ணு மாதிரி தெரியுது. டாட்டா சியாராவில் வந்திருக்காங்க.”தாராசந்திரிகா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டு தன் நெற்றிப் பொட்டை பத்து விநாடிகள் யோசனையில் தேய்த்துவிட்டு நர்ஸைப் பார்த்து தலையாட்டினாள்.“வரச்சொல்லு...’’பேஷண்ட்டை அனுப்பிவிட்டு தாராசந்திரிகா காத்திருக்க, அந்த நிமிஷம் கரைவதற்குள் பாலிஷ் துணியால் தேய்த்த ஆப்பிள் பழம் போல் அந்த சுவர்ணா தள்ளு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.“வணக்கம் டாக்டர்...’“வணக்கம்!” கைகளைக் குவித்துக் கொண்டே தாராசந்திரிகா அவளை ஏறிட்டாள்.முப்பது வயதுக்குரிய சுவர்ணா எலுமிச்சை நிறத்தில் சதைபோட்டு மினுமினுப்பாய் தெரிந்தாள். கழுத்தில் ஒரு வைர நெக்லஸ் அநியாயத்துக்கு டாலடித்தது. மெருன் வண்ண ஃபாரின் சில்க் புடவைக்கு உடம்பைக் கொடுத்து அதே வண்ணத்தில் ஜாக்கெட் தரித்திருந்தாள்.“ப்ளீஸ் ஸீட்டட்...’’ டாக்டர் எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட “தாங்க்ஸ்” சொல்லி உட்கார்ந்த ஸ்வர்ணா ஒரு சின்னப் புன்னகையோடு கேட்டாள்,“டாக்டர் என்னை உங்களுக்குத் தெரியுதா?’’“தெரியலையே...”“கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க...’’தாராசந்திரிகா ஸ்வர்ணாவின் முகத்தை உன்னித்துப் பார்த்தாள். பின் தன் தலையை மெல்ல ஆட்டினாள்.“தெரியலையே...?”“மறந்துட்டீங்க போலிருக்கு... நீங்க நிர்மலா காலேஜ்லதானே படிச்சீங்க...?”“ஆமா...”“பி.எஸ்.ஸி... படிச்சுட்டு அதுக்கப்புறமா மெடிக்கலுக்கு போனீங்க இல்லையா...?’’“ஆமா...’’“நீங்க பி.எஸ்.ஸி படிக்கும்போது உங்க கூட பவ்யா படிச்சது ஞாபகம் இருக்கா டாக்டர்...?”“பவ்யா...? ம்... ஞாபகம் இருக்கு. வீடு கூட ராம்நகர்ல...’’“கரெக்ட் டாக்டர்... அதே பவ்யாதான்... பவ்யா எனக்கு அக்கா...’’தாராசந்திரிகாவின் முகம் ஒரு மலர்ச்சிக்கு உட்பட்டது.“நீ... அந்த பவ்யாவோட சிஸ்டரா...?”“ஆமா டாக்டர்... ரெண்டாவது தங்கை“மைகுட்னஸ்...! நீ பவ்யாவோட சிஸ்டரா...? கொஞ்சம் கூட அடையாளமே தெரியலையே... பனிரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. அக்கா இப்போ எங்கே இருக்கா...?”“அபுதாபியில, மாப்பிள்ளை என்ஜீனியர்... இந்தப் பக்கம் வர்றதே கிடையாது... ரெண்டாவது சிஸ்டர் பம்பாய்ல இருக்கா. அவளோட ஹஸ்பெண்ட் பிசினஸ்மேன்...’’“அப்பா... அம்மா...?’’“கிராமத்துல இருக்காங்க...’’“உன்னைப் பத்தி சொல்லலையே...?”“எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு டாக்டர். கணவன் பிசினஸ்மேன். பேரு ஆதிநாராயணன். ஆதி க்ரூப்பைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க...”“ஆமா தெரியும்...”“அந்த ஆதி க்ரூப்ஸ்க்கு எம்.டி. என் கணவர்தான்.”“ஆதி க்ரூப்ஸ் வெரி வெல் நோன் க்ரூப்பாச்சே! இன்னிக்கு ஷேர் மார்க்கெட்ல டாப் ரேட்ல இருக்கிறது அந்த க்ரூப்தானே...?”“எஸ் டாக்டர்... எனக்கு கிடைச்சிருக்கிற கணவரும் ஒரு ஜெம்தான். கல்யாணமானதிலிருந்து இதுவரைக்கும் நான் கண் கலங்கியது கிடையாது. என்னோட கணவர் காட்ற அன்பில் நிறையத் தடவை திக்கு முக்காடிப் போயிருக்கேன்...”“குட்... குட்... கேட்கவே சந்தோஷமாயிருக்கு. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில இந்த சந்தோஷத்தைக் காட்டிலும் வேற எது வேணும்...’’“யூ... ஆர் கரெக்ட் டாக்டர்... பட் கடந்த ஒரு மாச காலமா என்னால சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை...’’“ஏன்?”“மனசுக்குள்ளே ஒரு திகில் நுழைஞ்சிருக்கு.
Verfügbar seit: 08.02.2024.
Drucklänge: 64 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Zum Buch
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Zum Buch
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Zum Buch
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Zum Buch
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Zum Buch
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Zum Buch