Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
அன்பின் தன்மையை அறிந்த பின்னே - cover

அன்பின் தன்மையை அறிந்த பின்னே

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

கண்ணாடி முன் நின்று முகத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உள்ளேயிருந்து உத்தர விட்டுக் கொண்டிருந்த தாயின் குரல், எரிச்சலூட்டியது.‘எப்படியாவது, இன்று வருகிறவனையாவது, விட்டு விடாமல் பிடித்துக் கொள்’ என்று, கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்? அவள் என்ன, வருகிறவனின் கையைப் பற்றியா, பிடித்து வைக்க முடியும்?அல்லது, ஒவ்வொருவனாக வந்து, நன்றாக மூக்குப் பிடிக்க முழுங்கிவிட்டு, அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் செல்வதில்தான், அவளுக்குச் சந்தோஷமா?அன்றி, இப்படி அடிக்கடி யார் முன்னேயாவது காட்சிப் பொருளாக நிற்பதில்தான், மகிழ்ச்சியா?சொல்லப் போனால், முதலிலிருந்தே அவளுக்கு அதில் மிகவும் வெறுப்புதானே? அருவறுப்பும் தானே? அவளும், உயிரோடு உணர்ச்சியும் உள்ள, கூடவே சிந்திக்கவும் தெரிந்த ஒரு மனிதப் பிறவியாயிற்றே என்கிற எண்ணமே இல்லாமல், அவளது மூக்கு, முழி, நிறம் பற்றி விலாவாரியாகப் பேசி, அதற்கு மேல் நகை, தொகை பேரம் நடத்துவதைக் கேட்க, அவளுக்கும் தான் எப்படி இருக்குமாம்?ஒருதரம் வந்தவர்களில், ஓர் அம்மாள், வசுவின் தலைமுடியை இழுத்துக் கூடப் பார்த்தாள். ஒட்டு முடியா என்று பரிசோதித்தாளாம். அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வசுந்தரா தலையை இழுத்துக் கொண்டு முறைக்க, ‘சந்தையிலே மாடு பிடிக்கும்போதுகூடப் பல்லைப் பிடித்துப் பாராமல் ஓட்டி வருவது இல்லை, வீட்டுக்கு மருமகளைச் சும்மா இழுத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டாள், அந்தப் பெண்மணி.இழுப்பதாமே?மாடும் நானும் ஒன்றா?’ என்று கேட்கத் துடித்த நாவை, உறுத்து நோக்கி, உதட்டின் மீது கை வைத்துக் காட்டிய தாயின் சைகை அடக்க, வசுந்தரா வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தாள்.‘இழுத்துக் கொண்டு போவது’ என்று சொன்னதற்காக, அம்மாவுக்கே, அந்த அம்மாள் மேல் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதைவிட்டு, மகளான அவளை அடக்குகிறார்களே என்று, உள்ளூரப் பொறுமிய போதும், தாயின் கோபத்துக்கு அஞ்சி, வசுந்தரா, தலையைக் குனிந்து, தரையைப் பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்தாள்.ஆயினும், அவள் முறைத்துப் பார்த்ததே, பெரும் குற்றமாகி, இந்தத் திமிர் பிடித்த பெண் வேண்டாம் என்று, அந்தப் பிள்ளை வீட்டார் சென்றுவிட, வசுவுக்கு அவள் தாயிடமிருந்து நல்ல திட்டு கிடைத்தது.பெண் என்றால் ஐம்புலன்களையும் அடக்க வேண்டுமாம், எரிச்சலைக் காட்டக் கூடாது, முகத்தைச் சுளிக்க கூடாது, நினைப்பதைப் பேசக் கூடாது, நிமிர்ந்து நோக்கக் கூடாது.ஆனால், இந்த மாதிரி அறிவுரைகள் எல்லாம், அடுத்த பெண் விஷயத்தில் மட்டும், அம்மாவுக்கு நினைவிருப்பதே இல்லையே?செல்லப் பெண் என்ன செய்தாலும் அது தான் சரியென்று, தோன்றி விடுகிறதே. அப்போதுதான், வசுந்தராவுக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாகிவிடும்.மூத்த மகள் செய்யும் போது, தப்பு என்று சொல்லித் திட்டுகிறவள், அதையே இளைய மகள் செய்தால், ஒரு புன்னகையோடு கண்டு கொள்ளாமல் போய்விடுவாள்.ஒருவேளை, அவளும், சௌந்தர்யாவைப் போல, அம்மாவைக் கொண்டு அதே அழகுடன், எலுமிச்சம்பழ நிறத்தில் பிறந்திருந்தால், அவளுக்கும் அம்மாவின் ‘செல்லம்’ கிடைத்திருக்கக் கூடும். ஆனால், வசு, அவள் அப்பாவின் வாரிசாக அல்லவா பிறந்து தொலைத்திருக்கிறாள். அதுதான், அம்மாவைப் பொறுத்தவரையில், வசுந்தரா செய்த பெரும் தவறாக ஆகிவிட்டது.ஆனாலும், இது ரொம்பவும் அநியாயமாகத்தான், வசுந்தராவுக்குப் பட்டது
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 230 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Silappathikaram - cover

    Silappathikaram

    Ilangoatikal

    • 0
    • 0
    • 0
    சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு
    Voir livre
  • திருப்புகழ் - காஞ்சீபுரம் - cover

    திருப்புகழ் - காஞ்சீபுரம்

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் நான்காம் தொகுதியாக 309 முதல் 352 வரையிலான 44 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் காஞ்சீபுரம் தலத்தில் பாடப்பட்டவை.
    Voir livre
  • கனிச்சாறு முதல் தொகுப்பு - cover

    கனிச்சாறு முதல் தொகுப்பு

    Perunchiththiranar

    • 0
    • 0
    • 0
    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன. திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்க
    Voir livre
  • Edhiroliyaal - cover

    Edhiroliyaal

    Va Ve Su Iyer

    • 0
    • 0
    • 0
    தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. எளிமையான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான்.
    Voir livre
  • ரங்கோன் ராதா - cover

    ரங்கோன் ராதா

    சி.என்.அண்ணாதுரை

    • 0
    • 0
    • 0
    அண்ணா 1947ல் எழுதிய புதினம் ரங்கோன் ராதா. திராவிட இலக்கியத்தின் இலக்கணம் முழுக்க‌ inclusive என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும். 40களில் அதற்கு முந்தைய சில நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் எப்படிச் சிதைவுற்று இருந்தது என்பதைக் காண்பிப்பதே அண்ணா தொடங்கி சில தசாங்கங்களில் திராவிட இலக்கியத்தின் முனைப்பாக இருந்தது. திராவிடம் என்றாலே ஆரிய எதிர்ப்பு என்ற அனுமானம் பொய் அல்லது பேருண்மையின் ஒரு சிறு துளியே என்பதே அண்ணா மற்றும் கலைஞர் இலக்கிய ஆக்கங்களில் இருந்து வெளிப்படும் உண்மையாகும். சமகாலத்திய சமுதாயச் சீரழிவுகள், பிறழ்வுகள் ஆகிய போக்குகளை உள்ளவாறு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவையே இவ்விருவர் இலக்கியங்கள். தவிரவும் அரசியல், மாநில‌ உரிமைகள், மொழியுணர்வு, இன உணர்வு, பொதுப் பொருளாதாரம், இலக்கிய மேன்மை போன்றவை பற்றிப் பேசுவதற்கென்றே திராவிட எழுத்துப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைப்பிலக்கியத் துறையில் அண்ணா மற்றும் கலைஞரின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. சித்தாந்தவியலும் படைப்பிலக்கியமும் கைகோர்த்து அன்றைய திராவிட எழுத்துப் பணியைப் பீடு நடை போடச் செய்தன. 
    ரங்கோன் ராதா என்ற கவர்ச்சிகரமான தலைப்பில் மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், பேராசை, திருமண உறவின் பிறழ்வுகள், வெள்ளந்தியானவர்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, பக்தி துறவு மந்திரம் மாந்திரிகம் என்ற போலி வேடங்களுக்குப் பின் மறைந்திருக்கும் கபடம், துணையற்ற பெண்கள் சீரழிவு, துணிந்து தலை நிமிரும் பெண்களின் வலிமை, சம காலத்திய இளைய தலைமுறையினரின் லட்சிய வேகமும் தீர்மானமும் என்ற இன்னோரன்ன இழைகளைக் கோர்த்து அண்ணா எழுதிய புதினமே ரங்கோன் ராதா. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாவின் முழு எழுத்து வீச்சை வெளிக்கொணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படவியலுக்கே உரித்தான வரையறைககுள் பரந்த திரைச்சீலை உள்ள புதினத்தை அடக்க முடியாது என்பதற்கு சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் குலதெய்வம் ராஜகோபால், பி. எஸ். ஞானம் என்ற பெரும்படையே அந்தப் படத்தில் இருக்கின்றனர். என்றாலும் விரிந்த திரையை வெள்ளித்திரையில் சுருக்கும் போது சில பல நட்டங்கள் தவிர்க்க முடியாது போய்விட்டன. 
    Voir livre
  • Madhyastharu - cover

    Madhyastharu

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Voir livre