Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
அன்பின் தன்மையை அறிந்த பின்னே - cover

அன்பின் தன்மையை அறிந்த பின்னே

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

கண்ணாடி முன் நின்று முகத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உள்ளேயிருந்து உத்தர விட்டுக் கொண்டிருந்த தாயின் குரல், எரிச்சலூட்டியது.‘எப்படியாவது, இன்று வருகிறவனையாவது, விட்டு விடாமல் பிடித்துக் கொள்’ என்று, கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்? அவள் என்ன, வருகிறவனின் கையைப் பற்றியா, பிடித்து வைக்க முடியும்?அல்லது, ஒவ்வொருவனாக வந்து, நன்றாக மூக்குப் பிடிக்க முழுங்கிவிட்டு, அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் செல்வதில்தான், அவளுக்குச் சந்தோஷமா?அன்றி, இப்படி அடிக்கடி யார் முன்னேயாவது காட்சிப் பொருளாக நிற்பதில்தான், மகிழ்ச்சியா?சொல்லப் போனால், முதலிலிருந்தே அவளுக்கு அதில் மிகவும் வெறுப்புதானே? அருவறுப்பும் தானே? அவளும், உயிரோடு உணர்ச்சியும் உள்ள, கூடவே சிந்திக்கவும் தெரிந்த ஒரு மனிதப் பிறவியாயிற்றே என்கிற எண்ணமே இல்லாமல், அவளது மூக்கு, முழி, நிறம் பற்றி விலாவாரியாகப் பேசி, அதற்கு மேல் நகை, தொகை பேரம் நடத்துவதைக் கேட்க, அவளுக்கும் தான் எப்படி இருக்குமாம்?ஒருதரம் வந்தவர்களில், ஓர் அம்மாள், வசுவின் தலைமுடியை இழுத்துக் கூடப் பார்த்தாள். ஒட்டு முடியா என்று பரிசோதித்தாளாம். அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வசுந்தரா தலையை இழுத்துக் கொண்டு முறைக்க, ‘சந்தையிலே மாடு பிடிக்கும்போதுகூடப் பல்லைப் பிடித்துப் பாராமல் ஓட்டி வருவது இல்லை, வீட்டுக்கு மருமகளைச் சும்மா இழுத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டாள், அந்தப் பெண்மணி.இழுப்பதாமே?மாடும் நானும் ஒன்றா?’ என்று கேட்கத் துடித்த நாவை, உறுத்து நோக்கி, உதட்டின் மீது கை வைத்துக் காட்டிய தாயின் சைகை அடக்க, வசுந்தரா வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தாள்.‘இழுத்துக் கொண்டு போவது’ என்று சொன்னதற்காக, அம்மாவுக்கே, அந்த அம்மாள் மேல் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதைவிட்டு, மகளான அவளை அடக்குகிறார்களே என்று, உள்ளூரப் பொறுமிய போதும், தாயின் கோபத்துக்கு அஞ்சி, வசுந்தரா, தலையைக் குனிந்து, தரையைப் பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்தாள்.ஆயினும், அவள் முறைத்துப் பார்த்ததே, பெரும் குற்றமாகி, இந்தத் திமிர் பிடித்த பெண் வேண்டாம் என்று, அந்தப் பிள்ளை வீட்டார் சென்றுவிட, வசுவுக்கு அவள் தாயிடமிருந்து நல்ல திட்டு கிடைத்தது.பெண் என்றால் ஐம்புலன்களையும் அடக்க வேண்டுமாம், எரிச்சலைக் காட்டக் கூடாது, முகத்தைச் சுளிக்க கூடாது, நினைப்பதைப் பேசக் கூடாது, நிமிர்ந்து நோக்கக் கூடாது.ஆனால், இந்த மாதிரி அறிவுரைகள் எல்லாம், அடுத்த பெண் விஷயத்தில் மட்டும், அம்மாவுக்கு நினைவிருப்பதே இல்லையே?செல்லப் பெண் என்ன செய்தாலும் அது தான் சரியென்று, தோன்றி விடுகிறதே. அப்போதுதான், வசுந்தராவுக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாகிவிடும்.மூத்த மகள் செய்யும் போது, தப்பு என்று சொல்லித் திட்டுகிறவள், அதையே இளைய மகள் செய்தால், ஒரு புன்னகையோடு கண்டு கொள்ளாமல் போய்விடுவாள்.ஒருவேளை, அவளும், சௌந்தர்யாவைப் போல, அம்மாவைக் கொண்டு அதே அழகுடன், எலுமிச்சம்பழ நிறத்தில் பிறந்திருந்தால், அவளுக்கும் அம்மாவின் ‘செல்லம்’ கிடைத்திருக்கக் கூடும். ஆனால், வசு, அவள் அப்பாவின் வாரிசாக அல்லவா பிறந்து தொலைத்திருக்கிறாள். அதுதான், அம்மாவைப் பொறுத்தவரையில், வசுந்தரா செய்த பெரும் தவறாக ஆகிவிட்டது.ஆனாலும், இது ரொம்பவும் அநியாயமாகத்தான், வசுந்தராவுக்குப் பட்டது
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 230 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Kaatraai Varuven - cover

    Kaatraai Varuven

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    பரபரப்பான நாவல். இறந்தவர் காற்றாக ஆவியாக திரும்ப வந்து தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள முயலும் ஒரு கதை. விஞ்ஞானமும் இதில் கலந்திருக்கிறது. ஒரு புகை பட நிபுணன் எடுக்கும் ஒரு படத்தில் ஆவி ஒன்றின் வடிவம் அகப்பட அவன் அதை ஆராய முயல்வதில் உருவாகும் டென்ஷன் நாவல் முழுதும் தொடர்கிறது. பரபரப்பின் உச்சம் இந்த நாவல்.
    Zum Buch
  • Nilukada Chitragalu - cover

    Nilukada Chitragalu

    Lohit Naikar

    • 0
    • 0
    • 0
    Short story by Lohit Naikar
    Zum Buch
  • Kamparamayanam Yuththakantam 2 - cover

    Kamparamayanam Yuththakantam 2

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    6            யுத்த காண்டம்         42 படலங்கள் 
    22. பிரமாத்திரப் படலம் 
    23. சீதை களம்காண் படலம் 
    24. மருத்துமலைப் படலம் 
    25. களியாட்டுப் படலம் 
    26. மாயா சீதைப் படலம் 
    27. நிகும்பலை யாகப் படலம் 
    28. இந்திரசித்து வதைப் படலம் 
    29. இராவணன் சோகப் படலம் 
    30. படைக் காட்சிப் படலம் 
    31. மூலபல வதைப் படலம் 
    32. வேல் ஏற்ற படலம் 
    33. வானரர் களம் காண் படலம் 
    34. இராவணன் களம் காண் படலம் 
    35. இராவணன் தேர் ஏறு படலம் 
    36. இராமன் தேர் ஏறு படலம் 
    37. இராவணன் வதைப் படலம் 
    38. மண்டோதரி புலம்புறு படலம் 
    39. வீடணன் முடி சூட்டு படலம் 
    40. பிராட்டி திருவடி தொழுத படலம் 
    41. மீட்சிப் படலம் 
    42. திருமுடி சூட்டு படலம் 
    43. விடை கொடுத்த படலம் 
    இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான். அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான். இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார். இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார். அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.
    Zum Buch
  • Vibarithathin Vilai Vidhya - cover

    Vibarithathin Vilai Vidhya

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    மனோகரின் இளமைக்கால காதல், தெய்வ நாயகத்துடனான தொழில் வகை மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சை எப்படி மாற்றுகிறது?
    Zum Buch
  • Love @ Sangamitra Express - cover

    Love @ Sangamitra Express

    G. R. Surendranath

    • 0
    • 0
    • 0
    சென்னையைச் சேர்ந்த கெளதம், நேபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்த பயணத்தில் ஜனனி என்ற அழகிய வெகுளியான பெண்ணும், தன் அம்மாவோடு வருகிறாள். நாய்களால் உருவாகும் பிரச்சனைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்பான காதலைக் கூறும் லவ் @ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு
    Zum Buch
  • Aram Thirumurai - cover

    Aram Thirumurai

    Navukkarasaar

    • 0
    • 0
    • 0
    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். 
    முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 
    தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். 
    திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்
    Zum Buch