Pavalakkoti
Pukazhendi
Narrateur Ramani
Maison d'édition: RamaniAudioBooks
Synopsis
நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
Durée: environ 5 heures (04:42:28) Date de publication: 21/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

