Perumal Thirumozhi
Kulasekarazhvar
Erzähler Ramani
Verlag: RamaniAudioBooks
Beschreibung
குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகியவற்றின் தலங்களை தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று. பெருமாள்திருமொழி திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார். பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்: மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே! என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ! குலசேகரப் படி திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவ
Dauer: etwa eine Stunde (00:51:49) Veröffentlichungsdatum: 20.03.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

