¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
தேடி வந்த தென்றல் - cover

தேடி வந்த தென்றல்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

“ம்... சொல்லுக்கா. எப்படி இருக்கே? மாமா என்ன... தொழில் விஷயமாக அலஞ்சிகிட்டு இருக்காரா?”“அவருக்கே இருபத்தி நாலு மணி நேரம் பத்தாது. சரி... பொண்ணோட படத்தைப் பார்த்தியா? உனக்கு சம்மதம்தானா? உன்கிட்டே போனை எதிர்பார்த்தேன். கூப்பிடவே இல்லை.”“ஸாரிக்கா. வேலைப் பளு. நானே கூப்பிடணும்னுதான் இருந்தேன்.”“பொண்ணு ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காடா.”அமைதியாக இருந்தான்.“அதான்க்கா எனக்கு தயக்கமா இருக்கு.”“என்னடா சொல்ற?”.“ஆளை அசத்தற அந்த அழகு, கண்களில் தெரிகிற கர்வம், எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்ற மாதிரியான புன்னகை.”“நீ என்ன பைத்தியமாடா! இப்படியொரு அழகி உனக்கு மனைவியா வர கொடுத்து வச்சிருக்கணும். அது புரியாம என்னென்னமோ பேசற?”“நீ என்ன சொல்றே?”“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுவும் அவ சென்னையிலே வேலை பார்க்கிறா. சவுகரியமாக இருக்கும்.”“வேண்டாம்க்கா. கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் வேலைக்கு அனுப்ப மாட்டேன்.”“அது உன் இஷ்டம்.”“சரி... மேற்கொண்டு பேசு... பார்ப்போம்“நான் அடுத்த வாரம் புறப்பட்டு வரேன். நிச்சயமே பண்ணிடலாம்.”“அக்கா, என் கல்யாண விஷயமா நான் பரத்கிட்டே பேசணும்.”“யாரு... துபாயிலே இருக்கானே... அவனை சொல்றியா?”.“ஆமா.”“நல்லா கேளுப்பா. ரெண்டுபேரும் இணைபிரியா நண்பர்களாச்சே! அவனையும் கேட்டுட்டு முடிவு பண்ணி சொல்லு. நான் புறப்பட்டு வரேன்.”“சரிக்கா, வச்சுடறேன்.”போனை வைத்தவன், காகித உறையில் இருந்து படத்தை எடுத்தான்.“என்னையா கல்யாணம் பண்ண இவ்வளவு யோசிக்கிற?”“என்னோட அழகு உன்னை மயங்க வைக்காம... பயப்பட வைக்குதா?”உதட்டைச் சுழித்து சிரிப்பது போல் தோன்ற, முதன் முதலாக வினிதாவின் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.சமையலறையில் எண்ணெயில் வேகும் உளுந்தவடையின் வாசனை, வாசல் வரை வந்தது.வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்த பரமசிவம், சூடாக இருந்த வடை ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.“என்னங்க... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஆறு மணிக்கு மேலதானே வரேன்னு சொன்னாங்க?”“ஆமாம். நீதான் எல்லாம் தயார் பண்ணிட்டே போலிருக்கே! காரட் அல்வா, பஜ்ஜி வடைன்னு அசத்திட்டே.”“இந்த வினிதா... நாம சொன்னதைக் கேட்காம வேலைக்கு கிளம்பி போயிட்டா. அதான் யோசனையா இருக்கு.”“சொன்ன மாதிரி அஞ்சு மணிக்குள்ள அவ வந்துடுவா.”“எதுக்கும் போன் பண்ணி ஞாபகப்படுத்துங்க.”“வேண்டாம் சிவகாமி. தேவையில்லாம அவளை ஏன் டென்ஷன் பண்ணணும்?“சொன்னா கேளுங்க.”“சரி... விடமாட்டியே! இரு, கூப்பிடுறேன்.”செல் போனை எடுத்து வினிதாவின் எண்களை ஒளிர விடுகிறார்...“அப்பா... நான் மறக்கலை. சரியா அஞ்சு மணிக்கு வீட்டில் இருப்பேன். அம்மா ஞாபகப்படுத்த சொன்னாங்களா? தெரியும்... அவங்க நச்சரிப்பு தாங்காமத்தான் நீங்க கூப்பிட்டிருப்பீங்க. வச்சுடறேன்.”“பார்த்தியா, உன் மகள் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா.”“சொன்ன மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ள உங்க பொண்ணு வந்தா சரி.”“வந்துடுவா... பொறுமையா இரு.”“சரி... உங்களுக்கு காப்பி தரட்டுமா?’’“வேண்டாம். வடை ரொம்ப நல்லா இருக்கு. அதையே எடுத்துக்கிறேன்.”தட்டில் மேலும் இரண்டு வடைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்.பஞ்சாயத்தில் கட்டட பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் பரமசிவம்.சம்பாத்தியத்தில் சின்னதாக ஒரு வீடு. மகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். கல்யாணம் நல்லபடியாக முடிந்துவிட்டால், தன் மனசின் பெரும் பாரம் குறைந்துவிடும் என்ற நினைப்பில் பொருத்தமான வரனைத் தேடிக்கொண்டிருந்தார்
Disponible desde: 12/02/2024.
Longitud de impresión: 69 páginas.

Otros libros que te pueden interesar

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro