Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஓசையின்றி மலரும் - cover

ஓசையின்றி மலரும்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஹலோ பெரியப்பா, எப்படி இருக்கீங்க?”“என்னம்மா, கல்யாண பொண்ணு... நீ எப்படி இருக்கே?”“நல்லா இருக்கேன் பெரியப்பா. நேத்து தான் பத்திரிகை வந்துச்சு. நாளைக்கு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.”“ரொம்ப சந்தோஷமாக இருக்கு மது. இதையெல்லாம் பார்க்க உங்க பெரியம்மா கொடுத்து வைக்கலை. உன் மேல் அலாதி பிரியம். சரி, சரி... நல்ல விஷயம் பேசும் போது, மனசு வருத்தப்படற விஷயங்களை நினைக்கக் கூடாது. உன் அப்பா எங்கே? வீட்டில்தான் இருக்கானா?”“இதோ ஒரு நிமிஷம். கூப்பிடறேன் பெரியப்பா... அப்பா அமெரிக்காவிலிருந்து பெரியப்பா பேசறாரு.”“அண்ணா, நல்லா இருக்கீங்களா. கல்யாணவேலை நடந்துட்டிருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு. நீங்களும் கல்யாணத்தில் கலந்துகிட்டா நல்லா இருக்கும். கடல் கடந்து இருக்கீங்க. குடும்பத்துக்கு மூத்தவர், உங்க ஆசியோடு மதுமிதா கல்யாணம் நடக்கணும். உங்களால வரமுடியுமா அண்ணா?”“எதுக்கு பரமு, தயக்கம்? நான் வரணும்... அவ்வளவுதானே? நான் இந்தியா வரப்போறேன் பரமு. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். இந்தியா வந்து - இந்த முறை ஒரு மாதத்தில் திரும்பப் போறதில்லை. உங்களோடு ஆறுமாசம் தங்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். செப். 10-ம் தேதி கிளம்பறேன். மதுமிதா கல்யாணம் என் முன்னிலையில் சிறப்பாக நடக்கும். சந்தோஷம் தானே!”ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. நீங்க வருவீங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை. எங்களோடு ஆறு மாதம் இருக்கேன்னு சொன்னது மனசுக்கு நிறைவா இருக்கு. நீங்க இந்தியாவில் இருக்கும் போது சேர்ந்திருந்த நாட்கள்தான் ஞாபகம் வருது.”அவர் குரலில் உண்மையான அன்பும், பாசமும் தெரிந்தது.“எங்க அண்ணன், நம்ப மதுமிதா கல்யாணத்தில் கலந்துக்க, அமெரிக்காவிலிருந்து வர்றாரு. இந்தியாவில் ஆறுமாதம் தங்கப் போறதாக சொன்னாரு.”சந்தோஷ குரலில் சொல்லும் கணவனை பார்த்தாள் சரோஜா. “ம், அவருக்கென்ன தனி மனுஷன். உங்க அண்ணி இறந்து ஒரு வருடமாச்சு. மகனும், மகளும் அமெரிக்காவில் வாழ்ந்ததிலே, அந்த ஊர் பிரஜை மாதிரி, அந்த நாட்டுக் காரங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அமெரிக்க மருமகன், மருமகள். இவரை யார் திரும்பிப் பார்க்கப் போறா... அதான், தனியா பொழுதை ஓட்ட முடியாம... ஆறுமாசம் இந்த பக்கம் வரலாம்னு முடிவு பண்ணியிருப்பாரு.”“எப்படியோ, அவர் வாழற வாழ்க்கை நமக்கு எப்படி தெரியும்! வரணும்னு பிரியப்பட்டு வர்றாரு. வந்து சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். நாங்க மூணு பேர். ஒண்ணா ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம். இப்ப ஆளுக்கொரு திசையில் இருக்கோம். அண்ணன் அந்தக் காலத்திலிருந்தே குணம் மாறாமல் அதே பிரியம், பாசத்தோடு இருக்காரு. என் தங்கச்சி தான் உள்ளூரில் இருந்தும், இப்படி பேச்சு வார்த்தை இல்லாமலே போயிடுச்சி.”“இங்கே பாருங்க. இப்ப எதுக்கு உங்க தங்கச்சி பேச்சை எடுக்குறீங்க? அவளை, மனசிலிருந்து என்னைக்கோ தூக்கியெறிஞ்சாச்சு. சந்தோஷமான இந்த நேரத்தில் அவ பேச்சு வேண்டாம்.”பரமுவின் மனதில் - ஐந்து வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் - அவர் தங்கை சுமித்ரா வந்து போகிறாள்.“அப்பா, வாங்க சாப்பிடலாம். நேரமாச்சு.”மகள் அழைக்க, தங்கையின் நினைவுகளை ஒதுக்கி வைத்தவராக எழுந்து கொள்கிறார்.
Verfügbar seit: 12.02.2024.
Drucklänge: 53 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch