Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
மணமகளே மருமகளே வா - cover

மணமகளே மருமகளே வா

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“நம்பிக்கைங்கிற தலைப்பில் எல்லாரும் கட்டுரை எழுதி, நாளை எடுத்துட்டு வரணும், சரியா?”ஒன்பது, பத்து வயதில் அவள் முன் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் தலையாட்டுகிறார்கள்.“அக்கா நான் நல்லா படிச்சு பெரிய ஆபிசராக வருவேன்னு நினைக்கிறேன். அதுவும் நம்பிக்கைதானே.”“எண்ணங்கள்தான் நம்மைசெயல்படுத்துது சுமி. மனசுக்குள் ஒன்றையே நினைத்து செயல்படும்போது அது நிறைவேறுவதற்கான வழியும் பிறக்கும். நீ விருப்பப்படி பெரியவளாகி, ஆபிசராகி, உன் அம்மா, அப்பாவை பெருமைப்படவைப்பே.”“தாங்க்ஸ் அக்கா....”கண்களில் ஒளிதெரிய கள்ளமில்லாமல் சிரிக்கிறாள் அந்த சிறுமி.செருப்பை வாசலில் கழட்டிவிட்டு, ஒருக்களித்து இருந்த கதவை திறந்து உள்ளே வருகிறார் சம்பத். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தந்து கொண்டிருந்த நந்தினி...“பெரியப்பா... வாங்க...”வரவேற்கிறாள்...“அப்பா இருக்கானா நந்தினி. என்ன பிள்ளைகளுக்கு டியூஷனா?” கேட்டபடி வர...“சரி. எல்லாரும் கிளம்புங்க. நாளைக்கு வரலாம்.” புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓட...“உட்காருங்க பெரியப்பா... இதோ அப்பாவை கூப்பிடறேன்.” அதற்குள் அண்ணனின் குரல் கேட்டு உள்ளிருந்து வேகமாக வருகிறார் சதாசிவம்.“அண்ணா வாங்க, வாங்க... அண்ணி வரலையா... நீங்க மட்டும்தான் வந்தீங்களா... ப்ரக்யா நல்லா இருக்காளா...”அண்ணனை பார்த்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிகிறது.“எல்லாரும் நல்லா இருக்கோம். உள்ளூரில் இருக்கோம்னுதான் பேரு. பார்க்கக்கூட முடியலை. இத்தனைக்கும் இரண்டு பேரும் ரிடையர்ட் ஆயிட்டோம்.”சிரிப்புடன் சொன்னவர்...“ரமேஷ் ஸ்கூல் போயிட்டானா?”“ப்ளஸ்டூ இல்லையா... ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சீக்கிரமே போயிட்டான்.”“பெரியப்பா... காபி எடுத்துட்டு வரட்டுமா. அம்மா குளிச்சுட்டு இருக்காங்க...”“என்னம்மா கேள்வி. போய் எடுத்துட்டு வா...” சதாசிவம் சொல்ல.“வேண்டாம் சதா... இப்பத்தான் வீட்டில் சாப்பிட்டு வந்தேன். நீ ஏன் நிக்கிறே... உட்காரு...”அண்ணன் முன் பவ்யமாக நிற்கும் சதாசிவம். எதிரில் இருந்த ஸ்டூலில் உட்காருகிறார்.தம்பியை பார்க்கிறார் சம்பத். சிறு வயதிலிருந்து இன்றுவரை அண்ணன் என்ற மரியாதை குறையாமல் நடக்கிறான். இருவருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாசம், அன்பில் கடுகளவும் குறையாமல். அண்ணன் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து நன்கு சம்பாதித்து வீடு வாசல் என்று சகல வசதிகளோடு இருக்கிறார் என்று பொறாமைப்படாமல். ஸ்கூல் டீச்சராக இருந்து வாடகை வீட்டில் சொற்ப வருமானத்தில் மகன், மகள் என்று செலவுகளை சமாளித்து வாழ்கிறார்.அவரவருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும். அண்ணன் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தபோது ஓடி, ஓடி உழைத்தவர் அவர்தான்.எங்கண்ணன் நல்லா இருந்தா நான் நல்லா இருக்கிற மாதிரி.உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்குப்பா... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம. அண்ணன் கூப்பிட்டாருன்னு பத்து நாளா ஒரு வேலைகாரனை போல உழைக்கிறே. உன் மனசு எனக்கு கிடையாதுநானாக இருந்தால் பொறாமையிலேயே வெந்து போயிருப்பேன்... கிரகப்பிரவேசம் வீட்டில் தூரத்து உறவு முறை ஒருவர் சதாசிவத்திடம் சொல்ல...யாரை பார்த்து யார் பொறாமைப்படறது. அவர் என் ரத்தம். எங்கண்ணன் புத்திசாலி. என்னை விட அதிகம் படித்தார். நல்ல வேலை கிடைச்சு. அண்ணியின் குடும்ப நிர்வாகத்தில் இன்னைக்கு வீடு கட்டியிருக்கிறார். அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா.எங்க பரம்பரையில் எல்லாரும் சராசரியாக வாழ்ந்தாங்க... சொந்த வீடு இல்லை. இப்ப எங்கண்ணன் தலையெடுத்து வீடு கட்டியிருக்கிறார். பெருமைப்பட வேண்டிய விஷயத்தை பார்த்து பொறாமைப்பட முடியுமா...தயவு செய்து என்கிட்டே இப்படி பேசாதே... அன்பு, பாசத்தில் இணைஞ்சிருக்கிற எங்களை இப்படியெல்லாம் பேசி பிரிக்க பார்க்காதீங்க...தம்பியின் பேச்சை அங்கு எதேச்சையாக வந்த சம்பத் கேட்டு மனம் நெகிழ்ந்தார். இப்படியொரு உடன்பிறப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Disponible depuis: 12/02/2024.
Longueur d'impression: 60 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre