Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கூடு தேடும் பறவைகள் - cover

கூடு தேடும் பறவைகள்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

காலை நேரம் அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள் காந்திமதி. சமையல் ரெடியாகிவிட்டது. இன்னும் இட்லி, தக்காளி சட்னி செய்ய வேண்டும். வேலைக்கு போகும் கணவர், மகனுக்கு ஒன்பது மணிக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.இன்னும் ரிடையர்ட் ஆக ஆறு மாதமே இருக்கும் சாரங்கனுக்கு அரசு உத்தியோகம்.தயாளன் சாப்ட்வேர் இஞ்சினியராக, பெரிய நிறுவனம் ஒன்றில், கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.மகள் சுகுணாவுக்கும் இஞ்சினியர் மாப்பிள்ளை அமைய, சீர், நகையென்று தாராளமாக செய்து இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் முடித்தாள்.மகளுக்கு கொடுத்த வரதட்சணையை, தயாளன் மூலம் திரும்பவும் வசூலித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் காந்திமதி. பெரிய இடத்திலிருந்தெல்லாம் வரன்கள் வந்து கொண்டிருக்க தயாளன் கல்யாண பேச்சை எடுத்தாலே பிடிக்கொடுக்காமல் இருந்தான்.“என்னம்மா சாப்பிடலாமா”“ஆச்சுப்பா... அப்பாவையும் கூப்பிடு”இருவரும் சாப்பிட அமர, பரிமாறியபடி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.“தயாளா... என்னப்பா... அந்த சேலம் பெண்... படிச்சவளா... உனக்கேத்தவளா இருக்கா... என்னப்பா சொல்ற... எனக்கும், அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு பார்க்கலாமா...?”“இல்லம்மா... வேண்டாம்“இப்படி... எது சொன்னாலும் தட்டி கழிச்சுட்டுபோனா என்ன அர்த்தம்? அப்பாவும் இன்னும் ஆறுமாசத்தில் ரிடையர்ட் ஆகப் போறாரு. உன் கல்யாணத்தை நல்லவிதமாக முடிச்சா எங்க கடமை முடியும்.’’‘‘அப்ப, என் மனசுக்கு பிடிச்சவளை... கல்யாணம் பண்ணி கொடுங்க...”சாப்பிட்டு கொண்டிருந்த சாரங்கன் நிமிர்ந்து தயாளனை பார்க்க, “என்னப்பா சொல்றே”“ஆமாம்மா... நான் என்னோடு வேலை பார்க்கிற பெண்ணை விரும்பறேன். அப்பா இல்லாதவ... அம்மா மட்டும்தான். பெரிசா சொல்லிக்கிற மாதிரி எந்த வசதியும் இல்லை”திகைத்து போய் மகனை பார்க்கிறாள்.“இது நமக்கு ஒத்து வருமா? உன் அழகுக்கும், தகுதிக்கும் எத்தனையோ கோடிஸ்வரங்க வீட்டிலிருந்து பெண் வரும். நீ என்ன... இப்படி... எந்த தகுதியும் இல்லாதவளை கட்டிக்கிறேன்னு சொல்றே”“அப்ப பணம்தான் நீ எதிர்பார்க்கிற தகுதியா?”“அப்படி இல்லை. பணமும் ஒரு தகுதி. நல்ல இடம். பெயர் சொல்ற மாதிரி நல்ல சம்பந்தமாக உனக்கு அமையணும்னு நாங்க விரும்பறோம்.’’ சாரங்கன் சொல்ல,“நான் அப்படி நினைக்கலை மனசுக்கு பிடிச்சவளோடு வாழணும்ங்கிறதுதான் என் ஆசை. நீங்களும், அம்மாவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு லேட்டாச்சு... நான் கிளம்பறேன்.”மதிய சாப்பாடு... லஞ்ச்பாக்கில் - வைத்ததை கூட - எடுத்துக் கொள்ளாமல் பைக்கை ஸ்டார்ட் பண்ணி வேகமாக கிளம்புகிறான்.“என்னங்க இது... இப்படியொரு குண்டை தூக்கி போட்டுட்டுபோறான். இதுக்குத்தான் இத்தனை நாள் தள்ளி போட்டுட்டு இருந்தானா.?”“இங்கே பாரு வளர்த்து ஆளாக்கிட்டோம். நம்ப வேலை முடிஞ்சுது. அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானம் பண்றாங்கன்னு... போக வேண்டியதுதான்”“என்னங்க இப்படி சொல்றீங்க”பின்னே என்ன பண்ண சொல்ற. எனக்கும்தான் எரிச்சலாக வருது. நமக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிப் பாரு அவன்கிட்டேயிருந்து என்ன பதில் வருதுன்னு. ஏற்கனவே கோர்ட், கேஸ்னு அலைஞ்சுட்டு இருக்கேன். அதுவே மாசக்கணக்கில் இழுத்துட்டு இருக்கு. இதில் இவன் பிரச்சனை வேறு...”
Disponible depuis: 12/02/2024.
Longueur d'impression: 45 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre