கல்யாணமாலை
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Maison d'édition: Pocket Books
Synopsis
“ஸ்ருதி குட்டி பாட்டிகிட்டே வாடா செல்லம். நான் உனக்கு டிரஸ் பண்ணி விடறேன்.”“மாட்டேன். போ பாட்டி... டாடி தான் எனக்கு கவுன் போடணும்.”ஜட்டியுடன் நிற்கும் நான்கு வயது பேத்தியை இழுத்து அணைக்கிறாள் தேவகி“டிபன் ரெடியாச்சா செல்லம்மா?”டைனிங் ரூமிற்கு வருகிறான் மதன்.“சாம்பார், பொங்கல் டேபிளில் இருக்கு. சூடா தோசை இரண்டு ஊத்தட்டுமா தம்பி?”“வேண்டாம், இதுவே போதும். அம்மாவும், ஸ்ருதியும் எங்கே?”“மாடியில் இருக்காங்க, கூப்பிடட்டுமா?”“இல்லை. நானே போறேன். நீங்க தட்டை எடுத்து வைங்க.”நாலு நாலு படியாக தாவி ஏறுகிறான்.“ஏய்... குட்டிம்மா. என்ன இது ஜட்டியோடு... ஷேம்... ஷேம்... டிரஸ் போடலையா செல்லம்.”மகளை தூக்கி முத்தமிட,“அதை ஏன் கேட்கிற மதன், இன்னைக்கு என்னமோ எல்லா வேலையும் டாடி தான் செய்யணும்னு அடம். இன்னும் டிபன் சாப்பிடலை.”“அப்படியா... நோ... ப்ராப்ளம். என் குட்டிம்மாவிற்கு எல்லாம் நானே செய்யறேன்.”அம்மாவிடமிருந்த கவுனை வாங்கி மகளுக்கு போடுகிறான்.என் தங்கம்... குட்டி தேவதை மாதிரி எவ்வளவு அழகா இருக்கா. டாடியோடு டிபன் சாப்பிட வர்றியா குட்டிம்மா?”மகளை தூக்கி கொண்டவன்,“அம்மா நீயும் வாயேன், சாப்பிடலாம்.” அழைக்க,“இல்லப்பா. நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க. நான் இன்னும் குளிக்கலை. குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு வரேன். எனக்கென்ன அவசரம்.’’மகளுடன் படி இறங்குகிறான் மதன். கம்யூட்டர் இஞ்சினியராக வேலை பார்க்கும் மதன், அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்... மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டினாள் தேவகி...“உன் மனசுக்கு பிடிச்சிருக்கு. காலம் பூரா சேர்ந்து வாழப் போறவங்க நீங்க. இதிலே நான் சொல்ல என்னப்பா இருக்கு.என் வேலையை சுலபமாக்கிட்டே... என் மருமகளை நீயே செலக்ட் பண்ணிட்டே. எனக்கு பூரண சம்மதம் மதன். நானே அவளோட அம்மா, அப்பாவை பார்த்து பேசறேன்.”கல்யாணம் சிறப்பாக நடந்தது. எந்த குறையுமில்லாத நிம்மதியான வாழ்க்கை. கல்யாணமான அடுத்த வருஷமே பேத்தி பிறக்க, தேவகியின் மனதில் நிறைவு.அத்தை, என் ப்ரெண்டு கல்யாணம் அடுத்த வாரம் தென்காசியில் நடக்குது... நாங்க ப்ரெண்ட்ஸ் நாலைஞ்சு பேர் ஒண்ணாசேர்ந்து போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். மதன் ஓ.கே. சொல்லிட்டாரு. இரண்டு நாள் தான் உங்க பேத்தியை உங்களால் சமாளிக்க முடியும் தானே... போய்ட்டு வர்றோம் அத்தை.”“என்ன ரேவதி...! கைபிள்ளையை விட்டுட்டு போறேன்னு சொல்ற... உன்னை தேடினா... என்ன செய்யறது...?”“நான் இல்லாமல் கூட உங்க பேத்தி இருந்துடுவா... அவளுக்கு நீங்க தான் வேணும். மதனும், நீங்களும் இருக்கீங்க...ப்ளீஸ் அத்தை போய்ட்டு வரேன்... குற்றாலத்தில் அருவியில் குளிச்சு, என்ஜாய் பண்ணிட்டு வரேன்...”சிறு குழந்தைபோல கெஞ்சும் மருமகளை புன்னகையுடன் பார்த்தாள் தேவகி.பேத்தியை தூக்கியபடி, மருமகளுக்கு கையசைத்து விடை கொடுத்தவள். ஒரேடியாக ரேவதி விடை பெற்றுப் போகிறாள் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.கல்யாணம் முடிந்து சிநேகிதிகளுடன் அருவியில் குளிக்க சென்றவள், வழுக்கி விழுந்து, பின் மண்டையில் பலத்த அடியோடு... உலகத்தை விட்டே பிரிந்து விட்டாள்.இடியாய் வந்த செய்தி. நிலைகுலைந்து போனாள் தேவகி. மதனின் நிலையோ அதற்கும் மேல். கையில் ஒரு வயது குழந்தை. காதல் மனைவி போய்விட்டாள். என்ன செய்யப் போகிறேன். எப்படி வாழ்க்கையை தொடரப் போகிறேன். துடித்தான், துவண்டான்...மகளின் முகம் பார்த்து மனம் தேறினான். தேவகியும் தன் துக்கத்தை மறந்து, மகனுக்கு ஆதரவாக இருந்தாள்.இனி வாழ்க்கையில் எல்லாமே ஸ்ருதி தான். அவளுக்காக வாழ வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டான்.நாட்களும், மாதங்களும் நகர, இதோ நான்கு வயது மகளாக ஸ்ருதி... வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது
