கலைந்து போகும் கோலங்கள்
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Verlag: Pocket Books
Beschreibung
வாழ்க்கையே வெறுமையாக தோன்றியது குமாருக்கு.யோசிக்க யோசிக்க மனதில் வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.இருபத்தாறு வயதிற்குரிய சுறுசுறுப்பு அவனிடம் இல்லை.எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டான்.“குமார்... குமார்... மணி எட்டாச்சு. இன்னுமா தூங்கறே”போர்வையை விலக்கி அம்மாவை பார்த்தவன்...“இப்ப உனக்கு என்ன வேணும்.”“என்னப்பா இப்படி கேட்கிற. வயசு புள்ளை பொழுது விடிஞ்சு... இப்படி படுத்திருக்கலாமா... எழுந்து வா குமார். காபி கலந்து தரேன்.”லட்சுமியின் மென்மையான குரல், அவனை இளக்க...“சரி, நீ போ... நான் வரேன்...”வெளியே வந்தாள்.“என்ன உன் மகனை சுப்ரபாதம் பாடி எழுப்பிட்டியா...”“ராத்திரி ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தான். லேட்டாகத்தான் தூங்கினான். அதான் போய் பார்த்தேன். எழுந்துட்டான்.”“ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு அவர் ப்ரோக்ராம் என்னவாம்... படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காட்டி... கிடைச்சதை ஏத்துக்கணும். இப்படி வெட்டியா உட்கார்ந்திருந்தா என்ன நடக்கும்” சலிப்பு தெரிந்ததுஅவனும் முயற்சி பண்ணிட்டுதாங்க இருக்கான்.”“ஒவ்வொரு நாளா போயிட்டு இருக்கு... நாள் மட்டும் போகலை. அதோடு மட்டும் போகலை. அதோடு வயசும் போகுது. ஒரே பிள்ளை அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாம் போச்சு.”“சரி, நான் கிளம்பறேன். பென்ஷன் மட்டும் வரலைன்னா... நாம் தெருவில்தான் நிக்கணும்.”“சோமசுந்தரம் வேளச்சேரியில் ஒரு கடையில் வேலையிருக்குன்னு சொன்னான். போய் பார்க்கிறேன். அஞ்சு, பத்து கிடைச்சா செய்யறது.”எழுந்து காலில் செருப்பை நுழைக்க,“என்னங்க... இட்லி ஊத்திட்டேன். சாப்பிட்டு போங்க.”“அது ஒண்ணுதான் குறைச்சல். எல்லாம் வந்து சாப்பிட்டுக்கறேன்.”ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்த டி.வி.எஸ். பைக்கை எடுக்கிறார் ரத்தினம்.இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவன்...“என்னை என்னம்மா செய்ய சொல்றே. நான் என்ன சும்மா ஊர் சுத்திட்டா இருக்கேன். வேலை தேடிட்டுதான் இருக்கேன்.”“இப்ப முடிச்சுட்டு வர்ற பசங்க... லட்டு லட்டா மார்க் வாங்கினவங்களைதான் சேர்த்துக்கிறாங்க. என்னை மாதிரி இரண்டு வருஷத்துக்கு முன்னால் அரியர்ஸில் பாஸானவங்களை கண்டுக்க மாட்டேன்கிறாங்க. நெட்டிலும் நிறைய கம்பெனிக்கு பயோ-டேட்டா அனுப்பி வச்சுட்டுதான் இருக்கேன். எதுவும் நடக்க மாட்டேன்குது.”“இதுக்குதான் அப்பா படிக்கிற காலத்திலேயே, உன்கிட்டே போராடினாரு.”,“நான் சாதாரண குமாஸ்தாதான். பெரிசா சொத்து, சுகம் எதுவுமில்லை. நான் சம்பாதிக்கிற பணம்தான் நம்மை காப்பாத்திட்டிருக்கு. நீ நல்லா படிச்சு உன் தகுதியை வளர்த்துக்கன்னு கிளி பிள்ளைக்கு சொல்றமாதிரி சொன்னாரு. வயசு திமிரு. அவர் சொன்னதை கேட்டியா... இப்ப தடுமாறுவது நீதானே. நல்லா படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.”சாப்பிட்டு கொண்டிருந்த தட்டைதூர வீசுறான்.“குமார்... என்னப்பா இது... நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு தட்டை வீசுறே... தப்புப்பா... இப்படியெல்லாம் செய்யக்கூடாது.”பரிதவிப்புடன் இறைந்து கிடந்த சாப்பாட்டை பார்த்து சொல்கிறாள்
