Kamparamayanam Aranyakantam
Kampar
Erzähler Ramani
Verlag: RamaniAudioBooks
Beschreibung
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 3 ஆரண்ய காண்டம் 13 படலங்கள் விராதன் வதைப் படலம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் அகத்தியப் படலம் சடாயு காண் படலம் சூர்ப்பணகைப் படலம் கரன் வதைப் படலம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் மாரீசன் வதைப் படலம் இராவணன் சூழ்ச்சிப் படலம் சடாயு உயிர் நீத்த படலம் அயோமுகிப் படலம் கவந்தன் படலம் சவரி பிறப்பு நீங்கு படலம் இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள். இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.
Dauer: etwa 7 Stunden (06:44:16) Veröffentlichungsdatum: 31.03.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

