Kalaignar Early Poems
Kalaignar Karunanithi
Erzähler Ramani
Verlag: Ramani Audio Books
Beschreibung
நிலவைப்பற்றிப் பல நூறு கவிதைகள். எவராவது நிலவை ஒரு கைதியாகப் பார்த்திருப்பார்களா? கலைஞர் பார்த்தார். கவிதை படைத்தார். கலைஞரின் படிமக் கட்டமைப்பில் முயற்சியின் தாக்கம் சிறிதுமின்றி இயல்பாக வெகு இயல்பாக சமவெளியில் ஆழ்ந்த படுகையில் நகரும் நதியின் ஓட்டத்தைப் பார்க்கிறோம். ஆரவாரமில்லை; ஆர்ப்பாட்டமில்லை. "அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று" என்றார் சாத்தனார் சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில். அறமல்ல கண்ணகியின் மறச்சீற்றமே மன்னனுக்கு கூற்றானது. பிரெஞ்சுப் புரட்சியும் ரஷ்யப் புரட்சியும் மக்கள் மன்னருக்குக் கூற்றாவதைக் கூறும் சரித்திர நிகழ்வுகள். கரைகளுக்குள் ஓடும் நதி ஆர்ப்பரித்து ஓடினாலும் நிலைகெட்டு ஓடாத வரை அணை போட்டுத் தடுப்பாரில்லை. அரசு தறிகெட்டு ஓடாதவரை மக்கள் வெகுண்டெழுவதில்லை. தறி கெட்டு, நிலை கெட்டு, நெறி கெட்டு நியாயம் கெட்டு ஒழுக்கம் கெட்டு வெட்கம் கெட்டு அரசு இயங்குமானால் என்ன நடக்கும்? மக்களாட்சி ஒரு checks and balances mechanism என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் கலைஞர்! தனிமை என்ற கவிதையில் என்னடா இது என்று ஏறக்குறைய கவிதை முடிவு வரைக்கும் போகும்போது கவிதையில் பேசும் காதலி ஒரு பெண்ணல்ல; ஓர் உணர்வு; ஒரு மெய்ப்பாடு; ஓர் இருத்தல் நிலைமை என்று உணரும்போது அடாடா என்றிருக்கும். கேட்டுப் பாருங்கள். கோலரிட்ஜ் “willing suspension of disbelief for the moment which constitutes dramatic faith” என்பார். கலைஞரும் அதைப் பற்றி ஒரு கவிதையில் பேசுகிறார் கேளுங்கள். பிரியத்துக்குகந்தவரை எத்தனை செல்லப் பெயர்கள் வைத்து அழைத்தாலும் அவருடைய சொந்தப் பெயரை வைத்து அழைப்பதுதான் நாவுக்கின்பம், செவிக்கின்பம், மனதுக்கின்பம். தமிழுக்குச் சிறப்புப் பெயர்கள் பல. எனினும் தமிழைத் தமிழே என்றழைப்பதன் சுகமே சுகம். கலைஞர் சொல்கிறார். மு
Dauer: etwa 3 Stunden (02:49:50) Veröffentlichungsdatum: 09.06.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

