Vanangaan
Jeyamohan
Narrateur Deepika Arun
Maison d'édition: Kadhai Osai
Synopsis
வணங்கான் பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன். தாழ்த்தப்பட்ட நான் சிறுவனென்றும் பாராமல் யானை காலடியில் கிடத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு பல பாதைகள் கடந்து ஒரு நாள் யானை மீது ஒய்யாரமாய் அமர்ந்து வீதி உலா வந்தேன். கடந்து வந்த பாதை கடினம் தான் ஆனால் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் ...என் மகன் பெயர் வணங்கான் !!
Durée: environ une heure (00:57:35) Date de publication: 10/04/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

