தேசிய இயக்கப் பாடல்கள்
Bharathiyaar
Narrateur Ramani
Maison d'édition: Ramani Audio Books
Synopsis
தேசிய இயக்கப் பாடல்கள் பாரதியாரி்டம் விடுதலை உணர்வு, நாட்டுப் பற்று முதலியவை ஊறிக் கிடந்தன. சத்ரபதி சிவாஜி மகாராட்டிர சுயராஜியத்திற்கு அடிப்படைக் காரணமானவர். சிவாஜியின் வீரம், நடுவு நிலைமை முதலிய அருங்குணங்களை இந்தியர் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாரதி சத்ரபதி சிவாஜி தம் படைகளுக்குக் கூறியதாகப் பாடியுள்ளார். ஆங்கிலேயருக்குத் தொண்டு செய்து அவர்களை அண்டி அடிமையாய் இருந்து வாழ்தலே மேன்மையானது என்ற எண்ணத்துடன் வாழும் மக்களைப் பாரதியார் அடிமை என்றே குறிப்பிடுகிறார். இந்தியர்கள் தங்களுக்குள்ளே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, சமயப் பிரிவு, இனப்பிரிவு எனப் பல்வேறு வழக்கங்களுக்கும் சமுதாயப் பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இவற்றுக்கும் விடுதலை வேண்டும் என்று கருதினார். இழிந்தவர் என்று யாரும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம் உடையதாக இருந்தது.ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார். பாரதியாரின் தேசாபிமானத்தையும் வென்று நிற்கிறது மனிதாபிமானம். உருசியத் தோழர்கள் செய்து வரும் முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று உருசியாப் புரட்சி பற்றிப் பாரதியார் பாடுகிறார். உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். பாரததேசத்தின் பெருமை, பாரத மக்கள், அவர்களது விடுதலை வேட்கை, விடுதலை பெறுவதால் அடையும் மகிழ்ச்சி, பயன் தேசத்தலைவர்கள், பிற நா
Durée: environ une heure (01:14:24) Date de publication: 07/05/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

