பல்வகைப்பாடல்கள்
Bharathiyaar
Erzähler Ramani
Verlag: Ramani Audio Books
Beschreibung
ரமணி ஒலி நூலுக்காக பல்வகைப் பாடல்கள் என்ற தலைப்பில் அமைந்த 11 பாடல்களில் ரமணி இவ்வொலி நூலாக்கியிருக்கிறார். பாரதி பல்வகைப்பாடல்களில் நீதி என்ற தலைப்பின் கீழ் புதிய ஆத்தி சூடி அமைந்திருக்கிறது. விழுமியங்களும் பண்புகளுமே இந்தப் பாடலின் தலையாய பேசு பொருட்களாகின்றன. ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பாப் பாடல் பாடாத தமிழ் நாவேது! முரசு என்ற பாடல் விழுமியங்களின் வெற்றியைப் பறை சாற்றுகிறது. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் என்ற வரிகள் இப்பாடலில்தான் அமைகின்றன. சமுகம் என்ற தலைப்பின் கீழ் புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி, பெண் விடுதலை ஆகிய பாடல்களின் தாக்கம் நூறாண்டுகள் கடந்தும் தமிழ் நாட்டில் போற்றப்படுகின்றது. தொழில், மறவன் பாட்டு ஆகிய இரண்டு பாடல்கள் உழைப்பின் மேன்மையை வலியுறுத்துகின்றன. தாகூரின் ஒரு பாடலின் மொழிபெயர்ப்பாக நாட்டுக் கல்வி என்ற பாடல் அமைகிறது. புதிய கோணங்கி இனிவரும் காலம் இனிய காலம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
Dauer: 31 Minuten (00:30:59) Veröffentlichungsdatum: 30.05.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

