Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உன் பார்வை ஒரு வரம் - cover

உன் பார்வை ஒரு வரம்

ஆர்.மகேஸ்வரி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

பௌர்ணமி நிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல்... பளிச்சென்று... வைரத்தின் ஒளிவீச்சுடன்... அழகின் இலக்கணமாய் ஹாலுக்கு வந்தாள் கீர்த்தனா.சாதாரண காட்டன் சேலையிலும் தேவதைக்கணக்காய்... புத்தம் புது மலராய்... மணம் வீசிக் கொண்டு வந்து நின்றாள்.சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.“அம்மா... அம்மா...”“இதோ வந்துட்டேம்மா...” கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தாள் தாய் தமிழ்ச்செல்வி.“எனக்கு நேரமாயிடிச்சி...வரவா?” என்ற மகளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.“எங்கேடி...இந்த காலம் கார்த்தால போறே? இன்னைக்கு ஆபீசும் இல்லையே!”‘என்னம்மா மறந்துட்டியா? நேத்து நைட் சொன்னேனே! இன்று தைக்கிருத்திகை. வட சென்னிமலை கோவிலுக்கு போறேன்னு.”“ச்சே! நான் ஒரு ஞாபகமறதிக்காரி. எப்படியோ அந்த சென்னிமலை முருகன் இனிமேலாவது உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும். இந்த வருடமாவது திருமணயோகம் வந்து... சமூக சேவை, நியாயம், தர்மம் எல்லாத்தையும் விட்டு ஒழிச்சிட்டு... உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைய... அந்த கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்!” அம்மா கவலையாய் கூறினாள்.“ஏம்மா... சலிச்சுக்கிறே! நான் இப்போ அங்கே போறது சாமி கும்பிட மட்டும் இல்லை!’’ புதிராய் பேசினாள் கீர்த்தனா.“பின்னே?”வயதான பெரியவர்கள் எத்தனை பேர் முருகனை தரிசிக்க ஆசைப்பட்டு... படியேற முடியாமல்... தவிச்சிட்டு இருப்பாங்க. அவங்களை எல்லாம் என் ஸ்கூட்டியில ஏத்திட்டு... பாதை வழியா கொண்டு போய் சாமி கும்பிட வைத்து... திரும்ப மலையிறங்க உதவி செய்யத்தான் அங்கே போறதே!”“சேவை...ம்...சமூக சேவை! உன் வயசுல இருக்கிறவ எல்லாம் கையில ஒண்ணும், வயித்துல ஒண்ணுமா... புருஷனோட லட்சணமா இருக்க... நீ மட்டும் ஏன்டி வருகிறவனையெல்லாம் விரட்டிகிட்டு... சேவை சேவையின்னு அறிவு கெட்டத்தனமா அலையறே!” தமிழ்ச்செல்வி கோபமாய் கூறினாள்.“உன் பொண்ணு ஒரு நல்லது செய்தா...உனக்குப் பிடிக்காதே! திட்டாதேம்மா! நான் செய்யும் நல்லதிற்கு புண்ணியமே கிடைக்காது!”“பிடிக்காம இல்லடி கீர்த்தனா, நீ சேலத்துல இருந்து அவ்ளோ தூரம் ஸ்கூட்டியில போய்... மேலேயும், கீழேயும் மலை ஏறி இறங்கினால்... இந்த மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் உன் உடம்புக்கு..., ஏதாவது வந்துட்டா... என்னால் தாங்க முடியுமா? சொல்லு.”“வயசானவங்களுக்கு செய்யறது கோடி புண்ணியம்மா!”“புண்ணியமும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம். போக ஆசையானால்... பஸ்ல போயிட்டு உடனே திரும்பிடு” கட்டளையாய் தாய் கூற, தவித்து விட்டாள் கீர்த்தனா.“என்னம்மா நீ! நான் செய்யும் அத்தனை நல்லதோட பலனும், உன்னையும்... அப்பாவையும் தான் வந்து சேரும். என்னை ஆசீர்வதிக்கற அத்தனை பேரும்... நீயும். உன்னை பெற்றெடுத்த மகராசனும், மகராசியும் நல்லாயிருக்கணும்னு சொல்லும்போது... என்மனசு குளிர்ந்துடும். அப்போ எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? மனித ஜென்மமா பிறப்பதே ஒரு தடவைதான்! மனிதர்களுக்கு எந்த நேரத்துல எதுவரும் என்று சொல்ல முடியாது. அப்படியிருக்க உயிரோடு இருக்கும் காலம் வரை... மத்தவங்களுக்கு உபத்திரவம் இல்லாமல்... உதவியா இருந்தால்... என்னம்மா கெட்டுப்போகும்? ம்ம்...?” சாமர்த்தியமாய் பேசினாள்
Verfügbar seit: 15.02.2024.
Drucklänge: 148 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Irulil - cover

    Irulil

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஏழாண்டுகளாக அலைந்து திரியும் இளைஞன், இருபத்தொரு ஆண்டுகளாக மனைவியின் நிழலைத் துரத்தும் டிரைவர்... அவர்களின் கதைகள் ஒரு ராத்திரியில் மோதுகின்றன. ஏக்கம், புனிதம், பாவம் – எல்லாம் ஒரு பீடியின் புகையில் கரைந்து போகின்றன. 
    ஒரு சந்திப்பு. ஒரு ரகசியம். ஒரு கேள்வி: மனித மனதின் அளவு என்ன? 
    நெடுஞ்சாலையின் நிழல்களில் பதுங்கி லாரியின் விளக்கு வெளிச்சத்தில் வெளிவரும் உணர்வுகள்... கேளுங்கள் இருளில்!
    Zum Buch
  • Kumaravatara - cover

    Kumaravatara

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Zum Buch
  • Sarpadosha - cover

    Sarpadosha

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusunur
    Zum Buch
  • Kaadu Haadiya Jaadu Hatthi - cover

    Kaadu Haadiya Jaadu Hatthi

    Karthikadithya Belgodu

    • 0
    • 0
    • 0
    ನನ್ನ ಮೊದಲನೇ ಪುಸ್ತಕ ಕಾಡು ಹಾದಿಯ ಜಾಡು ಹತ್ತಿ ಎಂಬುದು ಒಂದು ರೀತಿಯ ಆಕಸ್ಮಿಕ ಕೃತಿ ಅಂತಲೇ ನನ್ನ ಭಾವನೆ. ಇದು ನನ್ನ ಪ್ರಥಮ ಪ್ರಯತ್ನವಾಗಿದ್ದರಿಂದ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಕಥೆಗಳನ್ನು ಯಾರೂ ಓದಲಾರರು ಹೀಗಾಗಿ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನೇ ಬರೆಯಬೇಕು ಎಂಬುದಷ್ಟೇ ತಲೆಯಲ್ಲಿತ್ತೇ ಹೊರತು, ಎಂಥಾ ಕಥೆಯನ್ನು ಬರೆಯಬೇಕೆಂಬ ಪೂರ್ವಾಲೋಚನೆ, ಸಿದ್ದತೆಯಿರಲಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಅದರಲ್ಲಿರುವ ಎಲ್ಲಾ ಕಥೆಗಳೂ ಸಂದರ್ಭಾನುಸಾರಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ಸೃಷ್ಟಿಸಲ್ಪಂಟಂತವು. ನಾನು ಕಂಡು ಕೇಳಿ, ಅನುಭವಿಸಿದ ಘಟನೆಗಳನ್ನೇ ಪುಟ್ಟ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನಾಗಿ ಹೊಸೆದೆ, ಓದುಗರಿಗೆ ಕಥೆಗಳು ಹತ್ತಿರವಾದವು. ಅನುಭವದ ಕಥೆಗಳಾಗಿದ್ದರಿಂದಲೇ ಅವು ಓದುಗರಿಗೆ ಆಪ್ತವಾಗಿದ್ದು. ಕಾರಣ, ನನ್ನ ಅನುಭವಗಳು ಅವರವೂ ಆಗಿದ್ದವು.
    ಹೀಗಾಗಿಯೇ ಈಗಲೂ ಎದುರಾಗುವ ಓದುಗರು ಆ ಪುಸ್ತಕದ ಕುರಿತೇ ಹೆಚ್ಚು ಮಾತನಾಡುತ್ತಾರೆ.
    Zum Buch
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Zum Buch
  • Washingtonil Thirumanam - cover

    Washingtonil Thirumanam

    Saavi

    • 0
    • 0
    • 0
    எழுத்தாளர் சாவியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை. ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே செய்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதே இந்தக் கதை.
    Zum Buch