பொன் வானம் பன்னீர் தூவுது
ஆர்.மகேஸ்வரி
Maison d'édition: Pocket Books
Synopsis
கட்டைப் பையை தூக்கிக்கொண்டு புகழேந்தி வாசலுக்கு விரைய... வியப்புடன் பின்னேயே வந்தாள் ஜனனி.“மாமா... கடைக்குப் போறீங்களா?”“ஆமா... அப்படியே ஏடிஎம்-ல கொஞ்சம் கேஷ் எடுக்கணும். நாளைக்கு கரண்ட் பில் கட்டணுமே! உனக்கு ஏதாவது வாங்கணுமா? நான் ஃப்ரூட்ஸ் வாங்கதான் போறேன்!”“அந்த பேகை இப்படிக் குடுங்க! நைட்டெல்லாம் சரியா தூங்கலே நீங்க... இருமல் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சே...!”“அதுக்குதான் கஷாயம் வச்சுக் குடுத்தியே! நந்தன் தினமும் மாதுளம் பழம் ஜூஸ் குடிப்பான். ஃப்ரிட்ஜ்ல பழமே இல்லை. வாங்கிட்டு வந்திடறேன். கொஞ்சம் நடந்தா உடம்புக்கு நல்லாருக்கும்னு தோணுது!”“அதான் தினமும் நடக்கறீங்களே! இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தப்பில்லே. நான் போய் வாங்கிட்டு வர்றேன். உங்க பாஸ்வேர்டும் எனக்குத் தெரியுமே... கார்டு குடுங்க... எவ்வளவு எடுக்கணும்!” அவரிடமிருந்த பேகை உரிமையுடன் பிடுங்கினாள்.“விடமாட்டியே... இந்தா கார்டு. எட்டாயிரம் எடு! பழமும் வாங்கிக்க... -- குழந்தை எந்திரிக்கறதுக்குள்ளே வந்துடு. என் ஆக்டிவாலப் போய்டு... சாவி கீபோர்டுல இருக்கு பார்!”“சரிங்க மாமா!”வாசலில் நின்றிருந்த வாதமரத்தின் இண்டு இடுக்குகளின் இடையே சில்லறையைக் கொட்டி தரையில் பரப்பியிருந்தான் கதிரவன்.வாசலில் வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கனத்த பழப்பையுடன் ஏடிஎம்-மின் உள்ளே நுழைந்தாள்...செக்யூரிட்டி அவளையும், அவள் கட்டைப் பையையும் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்இவளைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தனர்.அதில் ஒருவன்... மிஷின் துப்பிய பணத்தை எண்ணியபடி இவளையே நெற்றிச் சுருங்கப் பார்த்தான்.ஜனனி எடுத்த பணத்தை சரி பார்த்து தன் ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்...வண்டியை ஸ்டார்ட் செய்தபோது அவன் அருகில் வந்தான்.“எக்ஸ்க்யூஸ் மீ...”“…...?!”பார்த்தாள்.“நீங்க... நீங்க... சாய்மதி ஃப்ரெண்ட்தானே?”“ஆமாம்... நீங்க?” வியப்புடன் கேட்டாள்.“என்னைத் தெரியலே...”“இல்லையே... யார் நீங்க?” வியப்புடன் கேட்டாள்.“என்னைத் தெரியலே...”“இல்லையே... யார் நீங்க? சாய்மதியோட கஸினா? எனக்குத் தெரிஞ்சு அவளுக்குக் கூடப் பிறந்த அண்ணன்னு யாருமில்லே!”“உண்மையிலேயே என்னைத் தெரியலியா?”அவன் அப்படிக் கேட்டதும் எரிச்சல் உண்டானாலும் எங்கோ ஒரு பொறித் தட்டியது. அவனை இதற்குமுன் பார்த்தது போல் மசமசப்பாய் ஒரு நினைவு! அந்த நினைவே உடம்பெங்கும் சூடாய்ப் பரவியது.“சார்... எனக்குப் பேச நேரமில்லே... உங்களை எனக்குத் தெரியல...”“ஹோட்டல்... பப்ல...!”அந்த வார்த்தை அவளை எங்கோ சுருட்டி தூக்கி எறிந்தது
