Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
மனம் வருட வந்தாயா? - cover

மனம் வருட வந்தாயா?

ஆர்.மகேஸ்வரி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“என்னம்மா?” என்றான் அதிர்ச்சியாய்.“இதை ஏன் சாப்பிட்டே?”“ஏன் சாப்பிட்டா என்ன?”“இதையெல்லாம் சாப்பிடக்கூடாது!”“அதான் ஏன்?”“இது நம்மளோடது இல்லே... பக்கத்தாத்துல புதுசா குடிவந்தவ கொடுத்தது இது!”“சரி... இருக்கட்டுமே... இதை சாப்பிட்டா என்ன? ரொம்ப நல்லாதானே இருக்கு”“என்ன அகில் புரியாமப் பேசறே? அவ யாரோ? நம்மவா கெடயாது. கண்டவங்க கொடுக்கறதெல்லாம் சாப்பிடலாமா? வேலைக்காரிக்கு கொடுத்தனுப்ப வச்சிருந்தேன்... நீ சாப்ட்டுட்டியே...”அகிலனுக்கு அம்மாவை இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் பிடிப்பதிலை. ஜாதிப்பித்து அதிகம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியாச்சு... ஐம்பதில் வளையுமா என்ன? அதனால் அவள் இந்த டாபிக் பத்தி பேசும்போதெல்லாம் கப்சிப்பென்று வாயைப் பொத்திக் கொள்வான்.“உடம்புதான் சரியில்லையேம்மா... சமைக்கறதுக்கு ஒரு ஆளைப்போட்டுக்கலாம்” என்றாலும் விடமாட்டாள்.“அதெப்படி... அவாள்லாம் சுத்தபத்தமா இருப்பாள்ன்றது நமக்கு எப்படித் தெரியும்? ஏதோ, துடைக்க, கழுவன்னு ஒரு ஆளைப் போட்டாச்சு. அதுபோதும். என் கையும், காலும் நன்னாதானே இருக்கு? என் உடம்புல உசிர் இருக்கற வரைக்கும் என் ஒரே பிள்ளைக்கு நான்தான் சமைச்சிப் போடுவேன். அம்மா மேல நிஜமாகவே அக்கறை இருக்கற பிள்ளை... என் சுமையக் குறைக்க வேலைக்காரிய சேர்த்துக்கன்னு சொல்லமாட்டான்.”“பின்னே?“சீக்கிரமா பொண்ணைப் பாரும்மா... இந்த வீட்டுக்கு ஒரு மாட்டுப் பொண்ணைக் கொண்டு வந்து உன் சிரமத்தை குறைக்கிறேன்னு சொல்வான்!”“போச்சுடா... ஆரம்பிச்சிட்டியா?” சலித்துக் கொள்வான்.“உனக்கும் வயசாகல்லியோ... ஏன் எப்பப் பார்த்தாலும் கல்யாணப் பேச்சை எடுத்தாலே சலிச்சுக்கறே?”“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா... இப்ப வேண்டாங்கறேன். அவ்வளவுதான்!”“அதான் ஏன்?”“பிஸினஸ்ல கொஞ்சம் சரிவு. அதை சரிக்கட்டணும். அதுவேதான் இப்ப என்னோட கான்ஸன்ட்ரேஷன் எல்லாம். அது சரியான பிறகு பண்ணிக்கறேன்.”“எப்ப சரியாகும்?”“இப்ப சொல்ல முடியாதும்மா!” என்று நழுவி விடுவான்.அதனாலேயே அம்மா எதிரில் அதிகமாய் நிற்கமாட்டான். உடனே கல்யாணப் பேச்சை எடுத்து விடுவாளோ என்கிற பயம்.இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதற்கு பிஸினஸின் சரிவு மட்டுமல்ல... இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது.அது - வர்ஷினி!“அம்மா டிபன் ரெடியா?”“ரெடிதான்... நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா!”அகிலன் முகம் மாறினான்.“குளிச்சிட்டு வர்றதா? என்னைப் பார்த்தா பத்து நாளா குளிக்காதவன் மாதிரியாத் தெரியுது?” தன்னை குனிந்து பார்த்துக் கொண்டான்
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 83 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre