Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கண்ணெல்லாம் உன் வண்ணம்! - cover

கண்ணெல்லாம் உன் வண்ணம்!

ஆர்.மகேஸ்வரி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ஒரு வழியாய் எல்லாப் பொருட்களும் வந்தமர்ந்துவிட குடும்பம் மொத்தமும்... இங்கே, அங்கே என்று நகர்த்தி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.“சொந்தமாய் வீடு வாங்கணும்ங்கறது எத்தனை வருஷக் கனவு? லேட்டானாலும்... இப்பவாவது நிறைவேறுச்சே... ரொம்ப சந்தோஷம்ங்க...” புனிதா... ப்ரிட்ஜுக்குள் உரிய இடத்தில் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தாள்.ரமணன் டி.வி. வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய யோசித்தவர்... மனைவியின் பக்கம் திரும்பினார்.“அதென்ன... லேட்டானாலும்? அத்தனை கடமையும் முடிச்சிட்டு... இதையும் வாங்கியிருக்கேனேன்னு சந்தோஷப்படு...”என்றவருக்கு நாற்பத்தி எட்டு வயது! தலைக்கு அடித்த டையின் உபயத்தாலும்... வகீகரமான முகத்தாலும் இளமை விலகவில்லை.அப்பா இல்லாக் குடும்பத்தை தாங்கிச் சுமந்தது ரமணன்தான்! தம்பியின் படிப்பு, இரண்டு தங்கைகளின் திருமணம் என்னும் கடமைகளை முடித்து நிமிர்வதற்குள்... இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து நிற்கிறார்கள்.நெடுநாளையக் கனவு சொந்த வீடு! இ.எம்.ஐ.யில் வாங்கியாயிற்று...! இரண்டு பெண்களையும் கரை சேர்க்க வேண்டுமே! ரமணன் படித்த படிப்பு... எங்கே சென்றாலும் வேலைக்கு இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்வார்கள்.“ஒண்ணும் சொல்லிவிடக்கூடாதே! நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலையே... நமக்குன்னு சொந்த வீடு! இனி ஹவுஸ் ஓனரோட தொணதொணப்பு இல்லே... இதைப் பண்ணாதீங்க... அதைப் பண்ணாதீங்கன்னு டார்ச்சர் இல்லே... சந்தோஷமா இருக்குங்க!”“சரி... சரி... ஆகற வேலையப் பாரு!”“எனக்கு இங்கே ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க டாடி!”“என்னது... ஃப்ரெண்டா? இங்கே வந்து முழுசா ரெண்டு மணி நேரம் கூட ஆகலே... அதுக்குள்ளே எங்கே புடிச்சே?” புனிதா ஆச்சர்யமாய் மகளைப் பார்த்தாள்.“லிஃப்ட்லம்மா... இதே அபார்ட்மெண்ட்ல இருக்காங்க... எத்திராஜ்ல படிக்கிறாங்களாம்...” என்றாள் திவ்யா.“சரி... சரி... சிந்து எங்கே?”“அவ புக்ஸையெல்லாம் ஷெல்ப்ல அடுக்கி வச்சிட்டிருக்காம்மா...!”“சரி... சரி... டைமாய்டுச்சு... நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட டிபன் வாங்கிட்டு வந்துடறேன்!” ரமணன்... கைகளை துடைத்தபடி ஸ்டூலில் இருந்து இறங்கினார்.“போன் பண்ணா டோர் டெலிவரி பண்ணிடப் போறாங்க. இத்தனை வேலைய வெச்சுக்கிட்டு ஓடணுமா?”“வேணாம்... வேணாம்... ஃபேஸ்புக்ல என்னென்னமோ போடறான்... யாரையும் நம்ப முடியல...!”“.....!”“லன்ச் சமைச்சிடறியா? முதல் நாள் சமைக்கணும்னு சொல்வாங்க!”“அதான்... நாம போன மாசம் பால் காய்ச்சும் போதே சமைச்சோமே...! இன்னைக்கு மட்டும் ஹோட்டல்ல பார்த்துக்கலாம்... எல்லாம் ஒழுங்குபடுத்தவே ரெண்டு நாளாகுமே!”சொன்ன மனைவியை ஒரு பார்வை பார்த்தபடி சட்டையின் பட்டன்களை போட்டார்.ஹைடெக் அலுவலகம் அது!பளபளக்கும் ஷூக்களும், நலுங்காத உடையுமாய், கண்களில் படிப்பும், சம்பளமும் தந்த அலட்சியம் மிதக்க ஆண்களும்.லிப்ஸ்டிக் கலையாமல்... கூந்தல் அலுங்காமல், சருமப் பொலிவுடன், நாகரீக உடையுடன் பெண்களும்.மாதவி அந்த அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவள். அங்கு பணிபுரியும் மற்ற பெண்களைவிட வயதில் மூத்தவளாய் இருந்தாலும்... மற்ற எல்லாரையும் விட அழகிலும் உயரத்தில் இருந்தாள்.இருபத்தைந்து வயது இளைஞன் கண்கள் கூட அவள் பார்க்காத நேரங்களில் அவசரமாய் அவள் உடம்பில் அலைந்து திரிந்தன.போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த மாதவியின் முகபாவனைகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்ததை தினகர் ரசித்துக் கொண்டிருந்தான்.அவளுக்கு அடுத்தபடி பொறுப்பில் இருப்பவன்.“இன்னைக்கேவா?”“.....!”“ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?”“.....!”“ஓ... ஓக்கே... ஓக்கே...?” யோசனையுடன் போனை கட் பண்ணினாள்.“தினகர்...!”“எஸ்... மேடம்!”“இன்னைக்கு ஆல் ஓவர் பிராஞ்லேர்ந்தும் ஆபீஸர்ஸ் மீட்டிங் லீ மெரிடியன்ல இருக்காமே...!”“ஆமாம்... மேடம்!”“ஏன் எனக்குச் சொல்லலே? இன்னைக்கு நம்ம ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?”“நான் உங்களுக்கு ரெண்டு நாள் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணினேன் மேடம்!”“சொன்னதா ஞாபகம் இல்லை... எனிவே... இங்கே மீட்டிங்கை நீங்க இருந்து பார்த்துக்குங்க...”“ஓக்கே. மேடம்!
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 88 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre