Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உனக்கே உயிரானேன் - cover

உனக்கே உயிரானேன்

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

யாழினி வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சிப் பெருக்கிலும் ஒரு விதப் படபடப்பிலும் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினாள். பூட்டக் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.“அம்மா...”அம்மா துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் உற்சாகமான குரல் கேட்டுத் திரும்பினாள்.“என்னடி... இன்டர்வியூ நல்லா இருந்ததா? நல்லா பதில் சொன்னியா? வேலை கிடைக்க அறிகுறி ஏதாவது இருந்ததா?” என்றாள்.வியர்த்துக் கொட்ட நின்றிருந்தாள் யாழினி. அருகே வந்த அம்மா தன் முந்தானையால் அவளுடைய முகத்தைத் துடைத்தாள்.“அறிகுறி என்னம்மா? வேலையே கிடைச்சாச்சு” என்றாள்.“என்னடி சொல்றே?”“உண்மையாத்தாம்மா சொல்றேன். எனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு.”“ரொம்ப சந்தோஷமா இருக்குடி. எனக்குத் தெரியும். உனக்குத்தான் இந்த வேலைன்னு. ஆனால்... வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லைடி, ஒரு பொண்ணுக்கு. நல்ல வாழ்க்கை கிடைக்கணும். எவ்வளவோ படிச்சுட்டுப் பெரிய பதவியில இருக்கற பெண்களுக்கு நல்லவாழ்க்கை கிடைக்கலைடி. உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... நான் மனசுல நினைக்கிற மாதிரி உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ எந்தக் கவலையும் இல்லாம இங்க இருக்கற மாதிரியே சந்தோஷமா வாழணும். அதான் என் ஆசை...”“அம்மா... வேலை கிடைச்சதும் கல்யாணப் பேச்சை எடுத்திட்டியா?காலா காலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமையணும். எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு வாழ்க்கையை இல்லை. மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத ஒரு இடமா உனக்குப் பார்க்கணும்.”“இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாளைக்கு என்னை சுதந்திரமா இருக்கவிடு.”கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யாழினி சாப்பிட்டு விட்டு எழுந்தாள். நிம்மதியாக சற்று நேரம் படுத்தாள். மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு செல்வதைப் பற்றியே நினைவு சுழன்றது. அந்தப் பள்ளிக்கூடமே நினைவிற்கு வந்தது. சுகமாக இருந்தது அந்த நினைவு.அப்படியே கண்கள் சொருக உறங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதைப் போலவும் பாடம் எடுப்பதைப் போலவும் பகல் கனவு வந்தது. கூடவே அவளுடன் பேசிய அந்த இளைஞனின் முகமும் அவனுடன் ஏதேதோ பேசுவதைப்போலவும் காட்சிகள் வந்தன.விழித்தபோது மணி மாலை நான்கு. எழுந்து குளியலறைக்குள் சென்று சந்தன சோப்பில் முகம் கழுவி வாசனையாக வந்தாள்.அம்மா, சூடாக காபியும் பஜ்ஜியும் தந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்த போது எதிர்வீட்டுக்கார அம்மாவின் மகள் வந்தாள். அவள் கல்லூரியில் படிப்பவள்.“அக்கா... வாழ்த்துக்கள்.. வேலை கிடைச்சிருக்காம். அம்மா சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.“வா... ராணி... உட்கார்.” தனக்கு வேலை கிடைத்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.“நல்ல ஸ்கூல்க்கா” என்ற ராணி, “அக்கா... கோவிலுக்கு வர்றியா? போயிட்டு வருவோம்” என்றாள்.“கோவிலுக்கா?” யோசனையாய் முகத்தில் அதிகப்படியாய் இருந்த பவுடரைத் துடைத்தாள் யாழினி.“போ போயிட்டு வாயேன்டி. வேலை வேற கிடைச்சிருக்கு. அம்பாளுக்கு உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா” என்றாள் அம்மா.யாழினிக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது.“சரி வர்றேன்” என்றாள்.பூஜைக் கூடையுடன் சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். இரண்டு தெரு தாண்டி ஒதுக்குப் புறமாய் அமைதியாய் இருந்த அம்மன் கோவிலுக்கு இருவரும் வந்தனர்.உள்ளே நுழையும் போதே கவனித்தாள் யாழினி. தீபன் ஒரு தூணோரம் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 107 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch