போவோமா பொன்னுலகம்!
ஆர்.சுமதி
Verlag: Pocket Books
Beschreibung
கண்ணாடியும் தாயும் ஒன்று.அழகைத் தந்தவள் தாய். அதையே திருப்பி தருகிறது கண்ணாடி.கண்ணாடி எதிரே நின்று சேலை உடுத்திக் கொண்டிருந்தாள் தேன்மொழி.இளமஞ்சள் நிற சேலை. மெல்லிய நூல்வேலை. எளிமையும் அழகையும் கூட்டிக்காட்டியது.வளைந்த இரு புருவங்களுக்கிடையில் திலகத்தை தீட்டியவாறே “அம்மா...” என குரல் கொடுத்தாள்.“சொல்லு...” பதிலுக்கு சமையலறையிலிருந்து குரல் வந்தது.“டிபன் ஆச்சா?”“எடுத்து வச்சுட்டேன்” என்று கையில் டிபன் பாக்ஸுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த கோதை நாயகி ஐம்பது வயதில் அதிகமாகத் தளர்ந்திருந்தாள். முகத்தில் சோர்வும், களைப்பும் தெரிந்தது. சுகரும், பி.பி யும் நாங்கள்தான் காரணம் என்றது.அதே சமயம் அறையிலிருந்து வெளிப்பட்டாள் தேன் மொழி. மகளை ஒருகணம் பார்த்து திருப்தியாக சிரித்துக் கொண்டாள்.“உன்னைப் பார்த்தா யாரும் லெக்சரர்னு சொல்ல மாட்டாங்க. ஸ்டூண்ட்டுன்னுதான் சொல்லுவாங்க.”“நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு கோவில்ல ஒருத்தர் கேட்டாங்க. இது யாரு உன் அக்காவான்னு?”“போடி! இவ ஒருத்தி. சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு, நானே எழுபத்திரண்டு வியாதியை வச்சுக்கிட்டு அல்லாடறேன். ஒரு நாள் போறது ஒரு வருஷம் போறமாதிரியிருக்கு. இப்பத்தான் இளமை ஊஞ்சல் ஆடறமாதிரி பேசறா. உடம்புல கொஞ்சம் நல்ல சத்து இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டா அது போதும் எனக்கு. உங்கப்பாவுக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்ட்டு.” அனிச்சையாகஅவளுடைய கண்கள் சுவரில் மாலையோடு சிரித்த கணவரைப் பார்த்தன. பார்த்த நிமிடத்திலேயே கலங்கின. “அம்மா இப்பத்தானே என்னைப் பார்த்தா ஸ்டூடண்ட் மாதிரியிருக்குன்னு சொன்னே. ஸ்டூடண்ட்டுக்கு யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? அப்புறம் கம்பி எண்ண வேண்டிய வரும். தேன்மொழியின் இந்த வார்த்தைகளுக்கு அம்மா சிரித்துவிட்டாள்.“நல்ல மாப்பிள்ளை வந்தா நீயே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிடுவே! இந்த வீட்டு மருமகன் எங்கே பிறந்திருக்கானோ?”அம்மா சொல்லவும் தேன்மொழியின் மனதில் ஒரு கணம் பாலா தோன்றினான். கண்ணடித்து காதல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மறைந்தான்.வெட்கத்தை மறைக்க முந்தானையை எடுத்து முகத்தை துடைப்பதைப் போல் பாவனை செய்துக் கொண்டாள்.அம்மாவிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்ட தேன்மொழி அவசரமாக வெளியே வந்தாள். வாசலில் நின்றிருந்த தன் வாகனத்தை நோக்கிச் சென்றாள்.வாசல் வரை வந்த அம்மா “ஜாக்ரதையாப் போம்மா வரும்போது காய்கறி வாங்கிட்டு வா” என்று சொன்னபடியே டா டா” காட்டினாள்.அம்மாவிற்கு கையசைத்து விட்டு வாகனத்தைக் கிளப்பினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவளுடைய வாகனம் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது.மாணவ மாணவிகள் ஆங்கங்கே நிற்பதும் நடப்பதும் பேசுவதும் சிரிப்பதுமாகயிருந்தனர்.சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சில மாணவ மாணவிகள் அவளுக்கு வணக்கம் சொல்லியபடி நாசுக்காக விலகி நடந்தனர்.புரிந்ததைப் போல் சிரித்தாள் தேன்மொழி.மறுபடியும் பாலா மனதில் தோன்றி சிரித்தான். கண்ணடித்தான்
