Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
பார்வைகள் புதிதா? - cover

பார்வைகள் புதிதா?

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

தேவஸ்ரீ வீட்டிற்கு வந்தபோது, சமைத்துக் கொண்டிருப்பது அடுப்பு புகையின் வாசனையின் மூலம் தெரிந்தது.மதியம் அடக்கி வைத்திருந்த பசி அவளைக் கொன்று விடும் சக்தியோடு எழுந்தது. உள்ளே வந்தவள் சுவரிலிருந்த பெரிய ஆணியில் புத்தகப் பையை மாட்டினாள்.“அம்மாடி...வந்துட்டியா...?” என்றபடியே அம்மா விறகை இழுத்துத் தீயைக் குறைத்து வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.“ராஜாத்தி...மத்தியானம் எதாவது சாப்பிட்டியாடா?”“இல்லை நீ எதுவும் தராம நான் எப்படிச் சாப்பிட முடியும்?”“உன் சிநேகிதிங்க யாரும் உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா? அந்த மீனாப் பொண்ணு உன் மேல உசிரையே விடுவாளே, அவ கூட உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா?”“கூப்பிட்டா, நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”“ஏம்மா...? சினேகிதிங்க கிட்ட சாப்பிடறதுல என்ன தயக்கம் உனக்கு. அந்த மீனா பொண்ணு உன் மேல எவ்வளவுஅன்பு வச்சிருக்கா. நீ அடிக்கடி அவளை பத்தித்தானே பேசிக்கிட்டிருப்பே.”“அவகிட்ட சாப்பிடறதுல எனக்கொண்ணும் தயக்கமில்லை. ஆனா...நீ பட்டினியோடு வேலை செய்துக்கிட்டிருக்கும் போது நான் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்?”கேட்கும்போதே தேவஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டன.அம்மா வேதம் அவளுடைய கைகளை பற்றினாள். விரல்கள் நடுங்கினஅம்மாடி...உங்கப்பா செத்துப் போனதுமே, என் மனசு மட்டும் இல்லைம்மா, என் வயிறும் மரத்துப் போயிடுச்சு. பசிக்கறதை உணர்ந்தே ரொம்ப நாளாயிடுச்சு. ஆனா... நீ அப்படியா? வயசுப் பொண்ணு. உன் வயித்தைப் பட்டினி போடக் கூடாதுன்னு நானும் எவ்வளவோ கஷ்டப்படறேன். ஆனா. சில நாள் இப்படி ஆயிடுது. வா...சூடா சாதம் பொங்கி வச்சிருக்கேன். சாப்பிடு!” என்று அழைத்துச் சென்றாள்.வடித்திருந்த சோற்றை நிமிர்த்தி ஆவி பரக்கத் தட்டில் போட்டுக் கருவாட்டுக் குழம்பை ஊற்றினாள்.“அம்மா! நீயும் சாப்பிடு.”இன்னொரு தட்டை எடுத்து அம்மாவிடம் நீட்டினாள்.வேதம் அந்தத் தட்டிலும் சாதத்தை போட்டுக் குழம்பை ஊற்றினாள்.பசி மயக்கத்தில் அரக்கப் பரக்கச் சாப்பிட்டாள் தேவஸ்ரீ. அவள் பரக்கப் பரக்கச் சாப்ப்பிட்டதாக கண்ணில் நீர் வரப் பார்த்த தாய்க்கு இதயத்தைப் பிசைந்தது.‘கடவுளே! என் குழந்தையின் பசியைக் கூட நேரா நேரத்திற்குத் தீர்க்க முடியவில்லையே!’“அம்மாடி...டவுன்லதானே அக்கா வீடு இருக்கு. அங்க போய்ச் சாப்பிட்டிருக்கலாமே!”“ப்ச்! அக்காவாயிருந்தா என்ன? கட்டிக் கொடுத்துட்டா வேறுதான். சாப்பாட்டுக்கெல்லாம் அக்கா வீட்ல போய் நிக்கறது நல்லதில்லை. கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னாடி தூர நிக்கறதுதான் எல்லாத்துக்கும் நல்லது.”“அப்போ...நாளைக்கு உன்னையும் கல்யானம் பண்ணிக் கொடுத்துட்டா நான் பசின்னு உன் வீட்ல வந்து நிக்கக் கூடாதா?”வேதம் இப்படிக் கேட்கவும் நெருப்பையள்ளிக் கொட்டியதை போல் துடித்துப் போய் விட்டாள் தேவஸ்ரீ .“அம்மா....என்ன...என்ன பேசற நீ? அக்காவும் நானும் ஒண்ணா? என்னை அப்படியே உதறிட்டுப் போய்ட முடியுமா? இப்ப நீ படற அத்தனை கஷ்டமும் எனக்காகத் தானே. ஆண் பிள்ளை இல்லாத உன்னைக் கடைசி வரை வச்சுக் காப்பாத்த வேண்டியது என்னோட கடமை இல்லையா? ஏன்... இப்படியெல்லாம் பேசறே?சாப்பிடறது கூட உடம்புல ஒட்டாது போலிருக்கு. எனக்குச் சோறும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம்.”சட்டென்று தேவஸ்ரீ எழ முயல, அம்மா பதறி விட்டாள்
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 106 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre