Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
நிலவுக்கும் நிறமுண்டு! - cover

நிலவுக்கும் நிறமுண்டு!

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

அம்மாவின் முகம் கண்டு மகனும் மகளும் துணுக்குற்றனர்.“அம்மா, ஏன் ஒரு மாதிரியாயிருக்கே?”மகளின் கேள்விக்கு கிருஷ்ணவேணி எதுவும் சொல்லவில்லை.ஐயரிடம் அர்ச்சனைப் பொருட்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாள்அர்ச்சனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணவேணி நவநீதனிடம், “நீ காருக்குப் போ, நாங்க பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வர்றோம்” என்றாள்.இப்படி நேரத்தைக் கடத்துவது நவநீதனுக்கு எரிச்சலாக வந்தது.அவனுக்கு உடனடியாக கோகிலாவைப் பார்த்துவிட வேண்டும் என துடிப்பு உண்டானது.கோவில், அர்ச்சனை... இப்பொழுது பிரகாரம் சுற்றல் என அம்மா நேரத்தைக் கடத்துவது பிடிக்கவில்லையென்றாலும் எதுவும் சொல்லமுடியாமல் காருக்கு வந்தான்.கிருஷ்ணவேணியும், சாந்தியும் கோவிலைச் சுற்றினர்.‘சாந்தி உன்கிட்ட ஒரு விஷம் சொல்லணும்’ அம்மா அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும் கிசுகிசுப்பாகப் பேசினாள்.“என்னம்மா?”“ரொம்ப அதிர்ச்சியாயிருக்குடி!”“என்ன அதிர்ச்சி?”“நாம பார்க்கப்போற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்டி.”“அம்மா, நீ என்ன சொல்றே?” பிரகாரத்திலிருந்த பத்ரகாளியின் சிலையின் முக உணர்வுகளைப் பிரதிபலித்தாள் சாந்தி.“அம்மா, அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அவங்க ஏன் நம்மை பெண் பார்க்கக் கூப்பிடறாங்க? பொண்ணுக்கு ரெண்டாங்கல்யாணம் பண்றவங்க பொண்ணு விதவை, டைவேர்ஸி, அப்படின்னு விவரத்தை பதிவு பண்ணியிருப்பாங்களே. அந்த பொண்ணைப் பத்தின விவரத்துல அதெல்லாம் ஒண்ணுமில்லையே?”“வேணுமின்னே மறைச்சிருப்பாங்களோ?”“எனக்கு அப்படித் தோணலை. அம்மா, கோகிலான்னு ஊர்ல அவ மட்டும்தான் இருக்காளா? இது கிராமம். ஒரே பேர்ல ரெண்ட மூணு பொண்ணுங்க இருக்கலாம். மனசைப் போட்டு குழப்பிக்காம வாம்மா.”அம்மாவை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள்.காரில் - சாய்ந்தபடி நவநீதன் மெய்மறந்து கோகிலாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த சாந்தி திடுக்கிட்டாள்.‘அம்மா ஏதோ புதுக்கதை சொல்கிறாள். இவனோ கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கோகிலாவோட புகைப்படத்தை பார்த்துப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டிருக்கான்.’அவர்கள் வந்ததைக்கூட உணராமல் நின்று கொண்டிருந்த தம்பிக்காரனிடம் கிட்டத்தட்ட கடுப்படித்தாள் சாந்தி.“போதும் ஜொள்ளுவிட்டது. வண்டியை எடு” என்றாள்.“வந்துட்டீங்களா?” என்றவாறே காரில் அமர்ந்து இயக்கத் தொடங்கினான்.பத்து நிமிடங்களுக்குப் பிறகு கார் கோகிலாவின் வீட்டெதிரே நின்றது.புதிதாக கட்டப்பட்ட வீடு, பார்க்க பளிச்சென இருந்தது.எந்தவித மலர்ச்சியையும் கொள்ள முடியாமல் கிருஷ்ணவேணியின் உணர்வுகள் மாறியிருந்தன
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 77 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch