Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கேட்கும் வரம் கிடைக்கும் வரை - cover

கேட்கும் வரம் கிடைக்கும் வரை

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

காலை சரியாக ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி ஒலித்தது.ஸ்ரீதர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். விழித்ததும்தான் ஞாபகம் வந்தது ரமேஷ் வருவதாக சொன்னது. அவசரமாக எழுந்து லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து கதவைத் திறந்தான்.திறந்ததுமே முதல் பார்வை ரமேஷின் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் மேல்தான் விழுந்தது.ஒரு நிமிடம் உடம்பு முழுவதும் மின்சாரம் தாக்கியதைப் போல் இருந்தது.வெகு அமைதியான அந்த முகம் மிகப்பெரிய தாக்கத்தை இதயத்தில் உண்டு பண்ணியது.ஒரு நிமிடம் செயல்பட முடியாமல் நின்றான்.புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் மலர்ந்தும் மலராத மலரைப் போன்ற அந்த முகம்.மங்கிய வெளிச்சத்திலும் பொங்கும் நிலவொளியைப் போன்ற முகம்.அழகிய பெரிய கண்கள். நீண்ட நாசி. வலது பக்கம் மின்னிய ஒற்றைக்கல் மூக்குத்தி. வடிவான உதடுகள். இதயத்தில் மெல்லிய பூக்களால் வருடுவதைப் போலிந்தது.“உள்ள வாங்க!” இருவரும் உள்ளே வர வழிவிட்டு நகர்ந்தான்.அவள் அவனுடன் கடந்து உள்ளே வந்தபோது அவளைத் தொட்ட காற்று அவனைத் தொட்டதில் அவன் சிலிர்த்துப் போனான்.கலைந்து பறந்த கூந்தல் அவனை உரசியும் உரசாமலும் உணர்ச்சிகளைக் கூட்டியது.“உட்காருங்க...” இருவருக்கும் எதிரேயிருந்த சோபாவை காட்டினான்.வாசல்பக்க இருட்டிலிருந்து உள்ளே வந்த அவளுடைய உருவம் இப்பொழுது பளிச்சென தெரிந்தது.லைட் வெளிச்சத்தில் இப்பொழுது தெரிந்த அந்த முகம் மேகத்திலிருந்து வெளிப்பட்ட நிலவைப்போல் பளீரென மின்னியது.இருவிழிகளிலும் அவள் உணர முடியாதபடி காந்தக் குவியல்.பார்த்த ஒவ்வொரு பார்வையும் காந்த வீச்சு.நேற்று வரை ஏன் சென்ற மணித்துளிகள் வரை நினைக்கவில்லை, இப்படி தனக்குள் ஏதோ உடைந்து சிதறும் என்று. சிதறும் உணர்வுகளை நிலை நிறுத்த முடியாமல் அவன் தடுமாறினான்.இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.அவள் அமர்ந்திருந்த அழகு தேவதை ஒன்று வானிலிருந்து இறங்கி வந்து அமர்ந்ததைப் போல்...நிமிடத்திற்கு நிமிடம் அவனுக்குள் சிலிர்ப்பு எழுந்து எழுந்து அடங்கியது.வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பனிடம் பேச நிறைய இருந்தது.ஆனால் எதுவுமே பேச முடியவில்லை. உலக அழகி என்று அறிவிக்கப்பட்ட ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறான் என்று தோன்றியது.“நான் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு சமையலறைக்கு வந்தான்.சட்டென்று பாலை எடுத்து அடுப்பில் வைக்கவோ கேஸை பற்ற வைக்கவோ தோன்றாமல் சமையலறை ஜன்னலைத் திறந்தான்.தோட்டத்து மல்லிகையின் வாசனை கும்மென காற்றோடு வந்து நாசியைத் தாக்கியது.தினமும் நுகரும் வாசனைதான். ஆனால் இப்பொழுதோ அந்த வாசனை அவளுடைய அழகை நுகர்வதைப் போல்...அவள் தன்னை கடந்து உள்ளே வந்தபோது நாசியை தழுவிச் சென்ற அதே வாசனைமல்லிகை வாசனை என்ற அடையாளம் போய் அவளுடைய வாசனை - அவளுடைய பிரத்யேக வாசனை என்பதைப் போல் அவனுக்கு அறிமுகமாகியது.அவளுடைய பெயர் என்ன? சுபாவா... இல்லையே... சுபா என்ற பெயருடன் இன்னும் ஏதோ சேர்த்து சொன்னதாக ஞாபகம்.யோசித்தான்.‘சுபாங்கி...’ஞாபகம் வந்தது.‘சுபாங்கி...?’ எத்தனை அழகான பெயர்.ஜன்னல் வழியே உள்ளே வந்த காற்றோடு அவன் உச்சரித்த பெயரும் கலந்ததால் வாசனை சுமந்த பெயராக இதயத்தை நிரப்பியது
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 78 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch