Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
எண்ணம் போலக் கண்ணன் வந்தான் - cover

எண்ணம் போலக் கண்ணன் வந்தான்

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணிக் கேட்டியா? காலையிலேயே ஆபீஸ் போகும்போது உடம்புக்கு முடியலைன்னார். லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுங்கப்பான்னு சொன்னதுக்கும் கேட்கலை. எனக்கும் ஸ்கூல் டயத்துல மொபைல் யூஸ் பண்ண பர்மிஷன் இல்லையே. அதனால கேட்க முடியலை. நீ கேட்டியா?”வீட்டிற்கு வந்ததுமே கைப்பையை அதனிடத்தில் வைத்தவாறே கேட்டாள் நியதி.“அப்பா ஆபிஸுக்குப் போனதுமே ரெண்டு மணி நேரத்துல பர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டார். ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கார்.” என்றாள் அம்மா கல்பனா.“அப்படியா? ஏன், எனக்கு நீ போன் பண்ணி சொல்லியிருந்தா நான் லீவு போட்டுட்டு வந்திருப்பேனே. அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டுப் போயிருப்பேனே.”“நான் கூட்டிக்கிட்டுப் போறேன்னுதான் சொன்னேன். அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”அவசரமாக நியதி, அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.கார்த்திகேயன் சாய்ந்து படுத்திருந்தார்.கண்களை மூடிப் படுத்திருக்கிறார் உறங்கவில்லை என்பது பார்த்ததுமே புரிந்தது.அருகே அமர்ந்து ‘மெல்லத் தொட்டு ‘அப்பா’ என்றபோது கண்களைத் திறந்தார்.“வந்துட்டியாம்மா?” மெல்ல சிரித்தார்.“என்னப்பா செய்யுது?”“என்ன வழக்கம் போலத்தான் டயர்டாயிருக்கு, வேலை செய்ய முடியலை. அதான் வந்துட்டேன்”“ஹாஸ்பிடல் போகலாம்ப்பா. கிளம்புங்க.”“வேண்டாம்மா. ரெஸ்ட் எடுக்கணும் போலிருக்கு. வேற ஒண்ணும் இல்லை”“ஏதாவது சாப்பிட்டிங்களாப்பா?”“ம்... அம்மா தோசை சுட்டுக் கொடுத்தா, சாப்பிட்டேன். நீ ரொம்ப டயர்டாத் தெரியறே. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு காபி குடி.”கார்த்திகேயன் சொன்ன அதே நிமிடம் அம்மா காபியுடன் வந்தாள்.அம்மா இங்கயே காபியை கொண்டு வந்துட்டா...அம்மாவிடமிருந்து காபியை வாங்கிக் கொண்ட நியதி அதை பருகாமல் அப்பாவை கவலையாகப் பார்த்தாள்.“காபியை குடிம்மா”ஒரு வாய் காபியை உறிஞ்சிய நியதி “அப்பா... ரொம்ப கில்டியா யிருக்குப்பா...”“கில்டியா? எதுக்கும்மா கில்டி?”“எனக்கு நல்ல சம்பளத்துல வேலை கிடைக்லையேப்பா. எனக்கு மட்டும் நிரந்தரமா நல்ல வருமானத்துல வேலையிருந்தா நீங்க இப்படி முடியாமப் போய் வேலைப் பார்க்கணும்னு அவசியம் இல்லையேப்பா...”அப்பா கார்த்திகேயன் விரக்தியாக சிரித்தார்.“எனக்கும்தாம்மா குற்ற உணர்வாயிருக்கு. உன்னை எல்லார் மாதிரியும் பெரிய படிப்பு எதுவும் என்னால படிக்க வைக்க முடியலையே. டீச்சர் ட்ரெயினிங்தானே படிக்க வச்சேன்.ப்ரைவேட் ஸ்கூல்ல நிறைய சம்பளத்தை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? எனக்கு மட்டும் இப்படி நோய் நொடி வராமயிருந்தா உன்னை ஓகோன்னு படிக்க வச்சிருப்பேன். மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பேன். என் கனவுல கடவுள் மண்ணையள்ளிப் போட்டுட் டானேம்மா”நியதி அப்பாவின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 80 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre