Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
என் இனிய இளமானே - cover

என் இனிய இளமானே

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

பல்லவி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண் டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது.எழுந்து சோப்பு நுரையுடன் இருந்த கைகளை கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவாறே வந்தாள்.கதவைத் திறந்து பார்த்தாள்.“வரதன் புன்னகையுடன் நின்றிருந்தான்.அண்ணனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்த து.“அண்ணா... வாண்ணா” ஆவலுடன் வரவேற்றாள்.வரதன் உள்ளே வந்தான்.உள்ளே வந்த பல்லவி, “உட்காருண்ணா” என இருக்கையை எடுத்துப் போட்டாள்.“எப்படிம்மா இருக்கே?” நலம் விசாரித்தபடியே அமர்ந்தான் வரதன்.“ம்... நல்லா இருக்கேண்ணா’ நீ எப்படி இருக்கே? தேவசேனா எப்படி இருக்கா?”“எங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்கோம். இந்தா... தேவசேனா உனக்காக ஜாதிமல்லி கொடுத்தனுப்பினா...” பையிலிருந்து ஜாதிமல்லி சரத்தையும், வாங்கி வந்த பழங்களையும் எடுத்து நீட்டினான். ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.“எங்க மாப்பிள்ளையைக் காணோம்? கடைக்குப் போயிருக்காரா?” என்றான்.“அவர் எங்கே கடைக்குப் போறார்? எங்கயாவது சாராயக்கடையில் போய் உட்கார்ந்துக்கிட்டிருப்பார்.”“இப்படியே இருந்தா என்னம்மா அர்த்தம்? நீ திருத்தக்கூடாதா?”ஜென்மத்துல பொறந்ததை செருப்பால அடிச்சாக்கூட போகாதுண்ணா...”“என்னமோ போ... உன் கொழுந்தன் கண்ணும் கருத்துமா கடையைப் பார்க்குறார். நாளைக்கு பங்கு பாகம்னு வரும்போதுதானே தெரியும். நான்தானே பாடுபட்டேன். எனக்குத்தான் எல்லாம்னு எல்லாத்தையும் அவரே எடுத்துக்கப் போறார்.”“என்னை என்னண்ணாபண்ணச் சொல்றே? எல்லாம் என் தலையெழுத்து. நல்ல மாப்பிள்ளைன்னுதான் பார்த்துக் கொடுத்தே. இங்க உள்ளே இத்தனை ஓட்டை இருக்கறது அப்புறம்தானே தெரியுது” என்றாள். சில நிமிடங்கள் மவுனமாக இருந்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினாள்.“ம்... என்னமோ என் தலையெழுத்துத்தான் இப்படி ஆயிட்டு. தேவசேனாவையாவது நல்லா விசாரிச்சு நல்ல பையனுக்கு கொடுண்ணா...”“அதைப்பத்திதாம்மா பேச வந்தேன். தேவசேனாவை போன வாரம் பொண்ணு பார்த்துட்டு போனாங்க.”‘‘அப்படியா? எந்த ஊரு?”“மெட்ராஸ்தாம்மா.”“நல்லதா போச்சு. மாப்பிள்ளை என்ன பண்றார்?”“பிஸினஸ்தாம்மா. அப்பாவும் பையனுமா சேர்ந்து ஜவுளிக்கடை வச்சிருக்காங்க. ஒரே பையன். வசதியான இடம்தான். பையன் பேரு சுதாகர். ஆள் நல்லா இருக்கார்.“அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்க அண்ணா...”“வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் செய்துக்கலாம்னு சொல்லிட்டுப் போனாங்க. அதான் சொல்ல வந்தேன்.”“அப்படியா ரொம்ப சந்தோஷம். அண்ணர் நிச்சயதார்த்தம் யார் செய்யறா?”“நாமதான்.’’“வசதியான இடம்னு சொல்றே. நிறைய கேட்பாங்களே...” என்றாள்“நம்ம சக்திக்கு மீறி நம்மால எப்படி செய்ய முடியும்? பதினைஞ்சு பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டாங்க” என்றான்.“பணத்துக்கெல்லாம் என்னண்ணா பண்ணப் பொறே?”“என்னம்மா செய்யறது? கடனை உடனை வாங்கி செய்ய வேண்டியதுதான்” என்றான்.“நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். இருண்ணா காபி போட்டு எடுத்து வர்றேன்” என்றபடி உள்ளே சென்றாள் பல்லவி.வரதனுக்கு மனம் வேறு சிந்தனையில் ஆழ்ந்தது. யார் பாரிடம் கடன் வாங்குவது என யோசிக்கத் தொடங்கினான்
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 109 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch