Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
அன்பிற்குப் பஞ்சமில்லை - cover

அன்பிற்குப் பஞ்சமில்லை

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.“இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி போய்விடுவேன்” என்று மிரட்டினாள்.“நான் சொல்றதை நீ கேளு. எனக்கு ஒண்ணும் வேண்டாம்” என்றான் குகன்.அதேநேரம் பின்னால் ஒரு குரல் அவர்களின் உரையாடலுக்கு இடையில் புகுந்தது.“அலோ... குகன்...”குரல் அதிரடி தாக்குதலாய் கேட்க சண்டைக்கிடையில் சட்டென அமைதியாகி திரும்பினான் குகன். மறுகணம் பற்பசை விளம்பரமாய் சிரித்தான்.அவனுடைய அலுவலக மேனேஜர் சந்திரன் நின்றிருந்தான்.“அலோ சார் நீங்களா? எங்கே இந்த பக்கம்?” என்றான்.“சும்மாதான்... தீபாவளிக்கு துணி எடுக்கலாம்ன்னு வந்தேன்.”ஆதிரை அவனைப் பார்த்தான். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற சதை பிடிப்பு. ஒழுங்காய் வாரிய தலை. கண்களில் சுடர்விடும் படிப்பறிவு. முகத்துக்கேற்ற மீசை. லேசாக தொப்பை தெரிவதைப் போன்ற தோற்றம். கருப்பு கலர் பேண்ட். வெள்ளை நிற சட்டை. அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.ஆதிரையை பார்த்ததும் “இவங்க...” என்று இழுத்தான்.“என்னுடைய ஒரே தங்கை ஆதிரை” குகன் அறிமுகப்படுத்தி வைக்க,“அலோ...” என புன்னகை புரிந்தான். கூடவே அவளை அளந்தான்.‘எப்படியும் என் தோள் உயரம் இருப்பாள். என்னைவிட நிறம். இறுக்கிப் பின்னாமல் தளர்ந்த சடை. வட்ட முகத்தில் ஒட்டும் பொட்டு பளிச்சென இருந்தது. முத்தமிடும் உணர்வை தூண்டுகிற இதழ்கள். என்னவோ மந்திரவித்தை கற்ற விழிகள். இழுத்துக் கொண்டதே என் பார்வையை. திணறடிக்கும் இளமைகள். வளைந்த வாகான இடை. தரைவரை புரளும் சேலை. அழகு மான் ஒன்று சாலையில் நிற்பதைப் போல் நிற்கும் இவள் குகனின் தங்கையா? இப்படி ஒரு தங்கை இருக்கிறாளா இவனுக்கு?”இப்படியெல்லாம் எண்ணினான் சந்திரன். ஆதிரை அடக்கமாகப் புன்னகைத்தாள். அவளின் அடக்கமான புன்னகைக்குள் அடங்கிப் போனான் சந்திரன். அவள் சிரித்தது நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஒருவித மென்மையான துடிப்புகள். அவசரமாக, ஏதாவது பேசியாக வேண்டுமே என“உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா சொல்லவே இல்லையே...” என்றான்.“ஆமா. சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலை. ஆதிரை இவர் எங்கள் மேனேஜர் சந்திரன்” என்று அவனை அறிமுகப்படுத்தினான்.அவன் மேனேஜர் எனத் தெரிந்ததும் ஒரு மதிப்பு வந்தது அவன் மேல்.“என்ன படிக்கறீங்க?” என்று அண்ணனை விடுத்து நேரடி உரையாடலில் இறங்கினான் சந்திரன்.“படிச்சு முடிச்சிட்டேன். பி.ஏ. இப்ப ஒரு பள்ளியில வேலை பார்க்கிறேன்.”“ஓ...” என்றவன் மேற்கொண்டு என்ன பேசுவதென அண்ணன் பக்கம் திரும்பி “என்ன தீபாவளிக்கு துணி எடுக்க வந்தீங்களா?” என்றான்.“ஆமாம். அதான் துணிக்கடை வாசலில் நின்னுகிட்டு ரெண்டு பேரும் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று குகன் சொல்ல ஆதிரை பானுப்பிரியா கண்களில் கோபம் காட்டினாள்.“விவாதமா... சண்டை! நீங்களே இதைக் கேளுங்க மிஸ்டர்...” என்று அவன் பெயர் தெரியாமல் நிறுத்தினாள்.“என் பெயர் சந்திரன்” என்றான் சந்திரன்“மிஸ்டர் சந்திரன்” என்று தொடங்கியவள் - “இங்க பாருங்க, எங்க அண்ணனோட சம்பளம் மூவாயிரம்.”“தெரியும்.”“என் சம்பளம் அறுநாறு”“அடப் பாவமே...”“இதுல மாசா மாசம் சேர்த்த பணம் கொஞ்சம். மொத்தமா இப்ப கைவசம் ஐய்யாயிரம். இதுல தீபாவளி டிரஸ் எடுக்கணும். சுவீட், பட்டாசு... இப்படி நிறைய. இந்த அண்ணன் என்னன்னா எல்லாப் பணத்துக்கும் எனக்குப் பட்டுச்சேலை எடுத்தாலே எடுத்தபடின்னு ஒத்தக்கால்ல நிக்கிது. எங்க அண்ணனுக்கு டிரஸ் வேண்டாமாம்.தீபாவளின்னா சந்தோஷமா கொண்டாடணும். நான் மட்டும் பட்டுல நிக்கணும். இவர் பழைய டிரஸ்ல நிக்கறதை பார்த்துகிட்டு நான் எப்படி சந்தோஷமா இருக்கமுடியும். பட்டு வேண்டாம். வேற சேலை எடு. உனக்கும் பேண்ட், சட்டை எடுத்துக்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறார். நீங்கள் சொல்லுங்க சார்...”அவளின் கண்ணில் அதற்குள் கண்ணீர் தளும்பியது
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 106 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre