Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
அன்பிற்கு தலைவணங்கு! - cover

அன்பிற்கு தலைவணங்கு!

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

சுபாஷ் வீட்டிற்கு வந்தபோது அப்பா சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தார். கையில் செய்தித்தாள் இருந்தது. அவருக்கு வயது அறுபதாகப் போகிறது. இன்னும் முகத்தில் கம்பீரமும், கடுமையும் விட்டுப் போகவில்லை. அவர் சாதாரணமாகப் பார்த்தாலே யாருக்கும் பயம் ஏற்படும். அப்படி ஒரு பார்வை.அவரைப் பார்த்தாலே... அந்தப் பார்வையை சந்தித்தாலே சுபாஷுக்கு குலை நடுங்கும். அந்தப் பார்வைக்காகத்தான் அவன் எதையெல்லாம் இழந்திருக்கிறான்! அவர் அந்தப் பார்வையினால் எதையெல்லாம் சாதித்திருக்கிறார்!சுபாஷுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. அதிலேயே தன்னை அர்ப்பணிக்கத் துடித்தான். அவனுடைய ஆசை, லட்சியம் எல்லாம் இதோ இந்த பார்வையாலேயே அழிந்தது.‘டிராயிங் வரைஞ்சே குடும்பத்தைக் காப்பாத்திடுவியா? டிராயிங் போடற வேலையைப் போட்டுட்டு பொழைக்கற வழிய பாரு. ஒழுங்கா படி.’- என்று ஆரம்பித்து ‘ஓவியக் கல்லூரியில் சேர வேண்டும்’ என்ற அவனுடைய ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.ஆத்மா ஆசைப்படும் வேலையிலிருந்து விடுபட்டு அப்பாவின் சொற்களுக்கு பயந்து அவர் கைகாட்டிய படிப்பை படித்து, அவர் வேலை வாங்கித் தந்த நிறுவனத்தில் உழைத்து...அவனைப் பொறுத்தவரை திருப்தி இல்லாத வாழ்க்கை.மனதிற்குள் முதன் முதலாய் முளைவிட்ட காதலை தனக்குத்தானே நசுக்கிக் கொண்டதும் இதோ இந்த அப்பாவிற்கு பயந்துதான்.காதல் என்று இறங்கிவிட்டு பின்னால் அப்பாவை எப்படி எதிர் கொள்வது’ என்ற கேள்வி, காதலின் ஆரம்பத்திலேயே எழ, அதை அடியோடு அழித்துக் கொண்டான்.அதிலும் அவன் தோல்வியுற்றான்.இப்பொழுதும் மனதிற்குள் சங்கமித்திரையின் முகம் வந்து போகும், தன்னையும் மீறி கலங்குவான்.அவளிடம் கூட தன் காதலை அவன் சொன்னதில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் மனதிற்குள்ளேயே வைத்திருந்து அழித்துவிட்டான்.காரணம் -பயம். அப்பாவிற்கு முன் அடிமை போல் குறுகிப் போவான். அப்படி வளர்ந்தான். அந்த வளர்ப்பு அவனை பரம சாதுவாக்கியிருந்தது. அதனால் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அதட்டிப் பேசும் பழக்கம் அவனிடம் இல்லை. யாராக இருந்தாலும் பணிந்து போய் பழக்கப்பட்டவன். எதிர்த்துப் பேசும் எண்ணம் இல்லாதவன். பல அப்படிப்பட்டவனால் எப்படி இப்பொழுது பயப்படாமலிருக்க முடியும்?உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு படிப்பதைப்போல் பாவனை செய்தார்.இந்த நேரத்தில் அவர் எப்பொழுதும் வீட்டிலிருக்கமாட்டார். ஓய்வு பெற்று வந்த பணத்தை வட்டிக்கு விட்டிருக்கிறார். அதை வசூலிக்க தினமும் வெளியே செல்வார். இன்றைக்கு அவனுக்கு சம்பள தேதியாதலால் இருக்கிறார். அவருக்கு எப்பொழுதும் மனம் பணத்திலேயே இருக்கும்.உள்ளே வந்தவன் சட்டையைக் கூட கழற்றாமல் நேரே தன் படுக்கையறைக்குள் நுழைந்து அப்படியே படுத்துவிட்டான்.தங்கை சுசிலா உள்ளே சமையலறையில் அம்மாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்து கொண்டிருந்தது.சில நிமிடங்களில் அம்மா லோகநாயகி அவனுடைய அறையினுள் நுழைந்தாள்.“என்னடா... வந்ததும் படுத்திட்டே? உடம்பு சரியில்லையா?” என அவனுடைய நெற்றியில் கை வைத்தாள்அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. சும்மாதான் படுத்திருக்கேன். ஒரே களைப்பா இருக்கு” என்றான்.“வேலை அதிகமா?” என்றாள்.“ஆமாம்மா.”“சரி படுத்திரு. நான் போய் காபி கொண்டு வர்றேன்” என உள்ளே சென்றாள்.அம்மாவின் நடையில் ஒரு வேகம் இருந்தது.காரணம் - இன்றைக்கு சம்பள நாள்.‘எல்லோரையும் ஏமாற்றப் போகிறேன்.’அம்மா காபியுடன் வந்தாள்.“எழுந்திரிப்பா.”எழுந்து உட்கார்ந்தான். காபியை வாங்கும்போதே கைகள் நடுங்கின.“ஏம்பா... கையெல்லாம் இப்படி நடுங்குது? என்ன ஆச்சு?”“அது வந்து...”வாங்கிய காபியை குடிக்க முடியவில்லை.கை நடுங்கியதில் காபி தளும்பியது. தொடையில் சிந்தியது. சுட்டது.“சொல்லுப்பா... என்ன விஷயம்?”“அம்மா...” என அழைத்தபடியே காபியை அம்மாவின் கையிலேயே கொடுத்தான்.“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படியிருக்கே?”“அம்மா... வந்து என்னோட... என்னோட...”“சொல்லுப்பா.”“என்னோட சம்பளப் பணம் காணாம போயிட்டு.திக்கென அதிர்ந்தாள் அம்மா
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 80 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch