¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
'மை' விழி வாசலிலே! - cover

'மை' விழி வாசலிலே!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்...அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள்.எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது.ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான்.சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.“ராஜா! இன்னும் கொஞ்ச நேரத்துல சாந்தி முகூர்த்தம். நீ குழந்தை இல்லை. எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் சொல்றோம். கிராமத்துப் பொண்ணு! அதிகம் தைரியம் இருக்காது. அவ மிரண்டு போற மாதிரி செயல்படாதே!”“அண்ணா! நீங்க கவலையே பட வேண்டாம். எனக்கு களைப்பா இருக்கு. இன்னிக்கு எதுவும் நடக்காது!”“அப்படியில்லைடா!”சொக்கலிங்கம் வந்தார்“மாப்ளை ரெடியா?”“தோ... வந்துட்டே இருக்கான்.”அவர் போய்விட்டார். பட்டுவேட்டி, சட்டை சகிதம் தனியறைக்குள் நுழைந்தான் ராஜா.சற்று நேரத்தில் சங்கீதா உள்ளே வர, கதவு தாளிடப்பட்டது வெளியே.பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வந்த சங்கீதா, அதை வைத்துவிட்டு, நமஸ்கரித்தாள்.“எழுந்திரு! தமிழ் சினிமால்லாம் வேண்டாம். இயல்பா இருப்பம். நிறையப் பேசுவோம்! இப்படி வந்து உட்காரு!”சங்கீதா கூச்சத்துடன் உட்கார்ந்தாள்.“என்னைப்பாரு! எத்தனை நேரம் நிலத்தையே பார்த்துட்டு இருப்பே?”“எனக்கு வெக்கமா இருக்கு!”“அப்ப படுத்துத் தூங்கலாமா?”“உங்க இஷ்டம்!”அருகில் நெருங்கி, அவள் முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான்.அவள் முகத்தை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தான்.புருவத்துக்கு மேல் புள்ளிக் கோலமெல்லாம் போட்டு, அழகான முகத்தை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.‘சொல்லலாமா?’‘இதுமாதிரி நகை மூட்டையாக நாளை முதல் இருக்காதே என்று சொல்லி விடலாமா?’“அவ கிராமத்துப் பொண்ணு! எடுத்த எடுப்புல உன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டி அவளை மிரள வைக்காதே!”ஜெர்வின் சொல்லியிருந்தாள்
Disponible desde: 03/02/2024.
Longitud de impresión: 50 páginas.

Otros libros que te pueden interesar

  • Ezhaigalin Vilaimaadhu - cover

    Ezhaigalin Vilaimaadhu

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver libro
  • Magarantham Thangum Malaraval - மகரந்தம் தாங்கும் மலரவள் - cover

    Magarantham Thangum Malaraval -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • Punalum Manalum - cover

    Punalum Manalum

    A Madhavan

    • 0
    • 0
    • 0
    புனலும் மணலும் ஆ. மாதவன் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்நாவல் திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் என்ன? அவளுக்கு முடிவில் என்ன நேர்கிறது? வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல முயலும் இயல்புவாத அழகியல் கொண்ட நாவல். காமத்தையும் வன்முறையையும் அப்படியே சொல்கிறது. நீதி ஒழுக்கம் என எதையும் முன்வைப்பதில்லை. கேளுங்கள் புனலும் மணலும்.
    Ver libro
  • Solaimalai Ilavarasi - cover

    Solaimalai Ilavarasi

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
    Ver libro
  • ஆறு கவசங்கள் - சிவ கவசம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் சத்தி கவசம் விநாயக கவசம் நாராயண கவசம் - cover

    ஆறு கவசங்கள் - சிவ கவசம் கந்த...

    வரதுங்கராமர் Others

    • 0
    • 0
    • 0
    கவசம் என்பது சமய இலக்கிய நூல் வகைகளில் ஒன்று. 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறிப்பின் பெயராகச் சொல்லி இறைவனை வேண்டுதல் போல இது அமையும். உறுப்புக்களை தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு: சிவகவசம், கந்தசஷ்டிகவசம், சண்முககவசம், சத்திகவசம், விநாயககவசம், நாராயணகவசம் 
    சிவ கவசம் 16 ஆம் நூற்றாண்டில் வரதுங்கராமர் பாடிய பிரமோத்தர காண்டம் என்னும் நூலின் பகுதி. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் பெயரையும் சொல்லி அதனைச் சிவன் காக்கவேண்டும் என்று இந்த நூல் பாடுகிறது. இந்த நூலில் 12 பாடல்கள் உள்ளன. கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளன. அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்துகளையும், க முதல் ன வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது. சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வச்சிர பஞ்சர கவசம். சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சத்திகவசம். சத்தி கவசம் படித்தால் நோய் அண்டாது, திருமணம் ஆகும், வெற்றி கிட்டும் என்றெல்லாம் நம்பி இந்தக் கவசத்தை மனப்பாடம் செய்து பாடுவர். விநாயக கவசம் என்னும் கவச நூல் 16 ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் பாடப்பட்ட விநாயக புராணத்தின் ஒரு பகுதி. இதில் ஒன்பது விருத்தப் பாடல்கள் உள்ளன. நாராயண கவசம் என்னும் நூல் பற்றிய செய்தி பாகவதம் ஆறாம் கந்தம் என்னும் பிரிவில் வருகிறது. நாராயண கவசத்தில் 25 பாடல்கள் உள்ளன.
    Ver libro
  • Vittu Vidudhalai Aagi - cover

    Vittu Vidudhalai Aagi

    Prabanjan

    • 0
    • 0
    • 0
    பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும் போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும். பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன் அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்ளுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததை போலிருந்தது ஈரம் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவியது ஈரம் என்பது அன்பு கருணை நம்பிக்கை தியாகம் உதவி பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்திற்கும் போருந்தும் செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப்பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றை தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாக செயல்பட்டிருக்கிறேன்.
    Ver libro